Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"என் மனசில ஒன்னு இருக்கு".. ஆஹா, கார்த்தி சிதம்பரம் விடமாட்டார் போல.. யாரந்த "லீடர்".. நீளும் லிஸ்ட்

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்ற பரபரப்பு எகிறி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் கவனம் அதில் திரும்பி உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியும், அரசியல் களத்தில் வட்டமடித்து கொண்டே வருகிறது.

அந்தந்த மாநில தலைவர் பதவிகளை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரே தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான மாற்றம் குறித்த பேச்சும் பரபரத்து வருகிறது.. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் கே எஸ் அழகிரியின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியும் கதர்களை சுற்றி கொண்டிருக்கிறது.

சிதம்பரம்

சிதம்பரம்

அந்தவகையில் பல்வேறு மூத்த தலைவர்களின் போட்டா போட்டிகள் டெல்லி மேலிடத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.. 2 மாதங்களுக்கு முன்பு, அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ப.சிதம்பரத்திடம், இதுகுறித்து கருத்து கேட்டுள்ளதாக தெரிகிறது.. அதற்கு சிதம்பரம், "துடிப்பு மிக்கவர்களாக பார்த்து நியமித்தால்தான் கட்சிக்கு நல்லது" என்றாராம்.. அநேகமாக, பிப்ரவரி மாதத்துக்கு பிறகு, தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் கசிந்து வருகிறது...

விஜயதாரணி

விஜயதாரணி

இதனிடையே, தமிழக காங்கிரஸ் தலைமைக்கு 2 பேர் காய் நகர்த்தி வருவதாக சொன்னார்கள்.. ஒருவர் ஜோதிமணி, இன்னொருவர் விஜயதாரணி என்கிறார்கள்.. அதேபோல, செல்லக்குமார் எம்பி, விஷ்ணுபிரசாத் எம்பி, ஜெயக்குமார் எம்பி, போன்றோரும் ரகசியமாக தலைமை பதவிக்கு முயற்சித்து வருவதாக தெரிகிறது.. ஆனால், இவர்கள் அனைவரையும்விட, முந்திக்கொண்டு அப்பதவிக்கு விடாமல் ஆர்வம் காட்டி வருவது எம்பி கார்த்தி சிதம்பரம்தான் என்கிறார்கள்..

 தம்பி வா

தம்பி வா

கடந்த நவம்பர் 16ம் தேதி இவரது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.. அதில், "தம்பி வா தலைமையேற்க வா" என்று எம்பி கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது அனைவராலும் கவனிக்கப்பட்டது.. பிறந்தநாள் என்பதால், போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதாகவே கருதப்பட்டாலும், "தலைமையேற்க வா" என்றால், எந்த பதவிக்கு இவரை அவரது ஆதரவாளர்கள் அழைக்கிறார்கள்? என்ற சந்தேகம் கிளம்பியது. போதாக்குறைக்கு அந்த போஸ்டரில் ப.சிதம்பரம் போட்டோவும் இடம்பெற்றிருந்தது..

 கொட்டை எழுத்துக்கள்

கொட்டை எழுத்துக்கள்

தலைவர்களின் பிறந்தநாளை தொண்டர்கள் மகிழ்வுடன் கொண்டாடுவார்கள் என்றாலும், தலைமைச் செயலகத்தின் போட்டோவுடன் "தமிழகத்தின் எழுச்சி நாள்" என்று அந்த போஸ்டரில் கொட்டை எழுத்துக்களில் பளிச்சென அச்சிடப்பட்டிருந்தது.. கோஷ்டி மோதலுக்கு பெயர்போன கட்சிக்குள், மூத்த நிர்வாகிகள் இந்த போஸ்டர்களால் கடுப்பானார்களாம்.. கார்த்திக்கை விட சீனியர்கள் கட்சிக்குள் இருக்கிறார்கள் என்றாலும், சிபாரிசு எதையும் செய்துவிடுமோ? தங்களின் அடிமடியிலேயே வாரிசுகள் "கை" வைத்து விடுவார்களோ? என்ற கலக்கம் இந்த சீனியர்களை சூழ்ந்துள்ளதாகவும் சொன்னார்கள்.

விசுவாசிகள்

விசுவாசிகள்

ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக வருவதற்கு தனக்கு விருப்பம் உள்ளது என்று தன்னுடைய விசுவாசிகளிடம் மனம்திறந்து சொல்லி வருகிறாராம் கார்த்தி சிதம்பரம்... இந்நிலையில், இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. கடந்த 4-ம் தேதி, டெல்லியில் சோனியா, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்களாம்...

 மனசில் ஆசை

மனசில் ஆசை

அந்த நேரத்தில், தென்காசி மாவட்டம் தாருகாபுரத்தில் உள்ள மத்தியஸ்தநாத சுவாமி கோயிலில், கார்த்தி சிதம்பரத்தின் ஏற்பாட்டில் சிறப்பு யாகம் ஒன்று நடத்தப்பட்டதாம். இதில், கார்த்தி சிதம்பரமும் கலந்துகொண்டுள்ளார். பின்னர் தன்னுடைய ஆதரவாளர்களிடம், "என் மனதில் நினைத்திருப்பது மட்டும் நடந்துவிட்டால் இந்த கோயிலுக்கு என் சொந்த செலவில் கும்பாபிஷேகமே நடத்திடுவேன்" என்றாராம். அன்று, ப.சிதம்பரம் கைதாகி ஜாமீன் கிடைக்காமல், ஜெயிலில் இருந்தபோது இந்த கோயிலுக்கு வந்துதான் வேண்டிக்கொண்டதாம் கார்த்தி சிதம்பரம் தரப்பு. அப்போதிருந்தே இந்த கோயிலின் மீது நம்பிக்கை கூடியுள்ளதாக சொல்கிறார்கள்.

விஷ்ணுபிரசாத்

விஷ்ணுபிரசாத்

எனினும், தமிழக காங்கிரஸ் தலைவர் யார் என்பது குறித்து இதுவரை மேலிடம் ஒருமுடிவுக்கு வரவில்லை. தொடர் ஆலோசனைகளும் அதுகுறித்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. வரப்போகும் எம்பி தேர்தலில், பாஜகவுக்கு டஃப் தரும் வகையில், வியூகங்களை முன்னெடுத்து, காங்கிரஸ் கட்சிக்குள் புதுரத்தம் பாய்ச்சும் வீர்யம் மிக்க நபரையே, மேலிடம் முன்னிறுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. அந்தவகையில், தலைமை பதவிக்கு குறி வைக்கும், கார்த்தி சிதம்பரம் உட்பட ஜோதிமணி, விஜயதாரணி, செல்லக்குமார் எம்பி, விஷ்ணுபிரசாத் எம்பி, ஜெயக்குமார் எம்பி, என இப்படி எல்லாருமே சீனியர்களாகவும், மிகச்சிறந்த திறமைசாலிகளாகவும் உள்ளதால், யார்தான் தலைமை பொறுப்பை ஏற்க போகிறார்கள்? என்ற ஆர்வம் எகிறி கொண்டிருக்கிறது.. பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+