சாதாரண் வந்தே பாரத் ரயில் வரப்போகுது.. சென்னை ஐசிஎப் தந்த அடுத்த குட் நியூஸ்.. ஒரே இலக்கு.. சபாஷ்
சென்னை: சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை, இன்னொரு புதிய சாதனையை படைக்க போகிறது.. இதுகுறித்த தன்னுடைய அடுத்தக்கட்ட இலக்கை அதிரடியாக தற்போது அறிவித்திருக்கிறது.
உலக அளவில் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் முக்கியமான தொழிற்சாலையாக சென்னை ஐசிஎஃப் (ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை) உள்ளது. இங்கு தற்போதுவரை பல்வேறு வகைகளில் 72,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், வந்தே பாரத் ரயில் பொதுமக்களின் அபார ஆதரவை பெற்று வருவதையடுத்து, ரயில்வேயின் அடுத்தடுத்த விரிவாக்கம் நடந்து வருகிறது.. 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
வந்தே பாரத்: சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள், ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன...
வந்தே மெட்ரோ ரயில் உள்ளிட்ட ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அம்ரித் பாரத் ரயில் ஏற்கெனவே 2 ரயில்கள் தயாரித்து அனுப்பிய நிலையில், கூடுதலாக அம்ரித் வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
பெட்டிகள்: இந்நிலையில், சென்னை ஐசிஎஃப்-ல் 2024-25-ம் நிதியாண்டில் 3,000 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இவற்றில் வந்தே பாரத் ரயில் பெட்டிகள், எல்எச்பி பெட்டிகள், மெமு ரயில் பெட்டிகள் போன்றவை அதிக அளவில் தயாரிக்கப்பட உள்ளனவாம்..
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் சொன்னபோது, "ஐசிஎஃப்-ல் நடப்பு நிதியாண்டில் 2,700 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் 60 வந்தே பாரத் ரயில்கள் விரைவாக தயாரித்து வழங்கி இருக்கிறோம். இதுதவிர, அம்ரித் பாரத் ரயில் தயாரித்து வழங்க உள்ளோம்.. எல்எச்பி பெட்டிகள், மின்சார ரயில் பெட்டிகள், மெமு விரைவு ரயில் பெட்டிகள் உள்ளிட்ட ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்குகிறோம்.
மிகப்பெரிய திட்டம்: ஐசிஎஃப்-ல் 2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 3,000 பெட்டிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.. இதில், 644 வந்தே பாரத் ரயில் பெட்டிகள், 276 மெமு ரயில் பெட்டிகள், 480 மின்சார ரயில் பெட்டிகள், 1400 எல்எச்பி (நவீன பெட்டிகள்) பெட்டிகள் உள்பட 3,000 ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்க கூடுதல் காலம் ஆகிறது. இருந்தாலும், வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
புதிய சாதனை: கடந்த வாரம்தான், ஐசிஎப் புதிய சாதனை ஒன்றை படைத்திருந்தது. அதாவது, முதல்முறையாக, ஒரே ஆண்டில், 1,000 ரயில் பெட்டிகள் தயாரித்து புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த 2023 - 24 உற்பத்தி வருடத்தை எடுத்துக் கொண்டால், நேற்று வரை 1,000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
இதில், வந்தே பாரத் ரயில்கள், மின்சார ரயில்கள், நெடுந்தொலைவு மின்சார ரயில்கள், தானியங்கி ஆய்வு ரயில்கள், தானியங்கி விபத்து உதவி ரயில்கள் உள்ளிட்டவற்றுக்கான பெட்டிகளை தயாரித்து, நாட்டிலேயே அதிக ரயில் பெட்டிகளை தயாரித்த சாதனையை ஐசிஎப் படைத்துள்ளது. இந்நிலையில், 2024-25-ம் நிதியாண்டில் 3,000 பெட்டிகள் தயாரிக்க போவதாக ஐசிஎப் அறிவித்திருப்பது பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications