தபால் நிலையத்தில் பிபிஎப் கணக்கு வைத்துள்ளீர்களா.. வெறும் ஒரு நாள் தாமதம் ஆனாலும்.. ரூல்ஸ் தெரியுமா?
சென்னை: நீங்கள் உங்கள் PPF கணக்கில் பணம் செலுத்தும்போது, 5 ஆம் தேதிக்குள் செலுத்தி விடுங்கள். அப்படி செலுத்தினால் தான் அந்த மாதத்திற்கான வட்டி உங்களுக்கு கிடைக்கும். 6 ஆம் தேதிக்குப் பிறகு வரும் முதலீடுகளுக்கு வட்டி உங்களுக்குக் கிடைக்காது. தேதி பார்த்து கவனமாக முதலீடு செய்யுங்கள் என பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.
பிபிஎப் கணக்கு குறித்து பார்க்கும் முன்பு வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் விஷயங்களை இப்போது பார்ப்போம். தொழிலாளர்க்ள ஓய்வு காலத்தில் அல்லது பணியில் இல்லாத காலத்தில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வருங்கால வைப்பு நிதி , பணியாளர்கள் வாங்கும் மாதச்சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்கிறது. இதே போல் பணியாற்றும் நிறுவனத்திடமும் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்குகிறது. இரண்டு தொகையையும் வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்ய வைக்கிறது. இந்த பணம் தான் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு ஓய்வு காலத்தில் ஜீவாதாரமாக இருக்கிறது. இந்த முறையில் பயன் பெற வேண்டும் என்றால், அவர் ஒரு நிறுவனத்தில் பணியாளராக இருக்க வேண்டும்.

அரசு மற்றும் பெரிய தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் மக்கள் பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு பலன் பெறுகிறார்கள்.. அமைப்பு சாரா தொழிலாளர்கள், அல்லத ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோர், கடை வைத்து சிறு தொழில் செய்வோர், விவசாயம் செய்வோர், கூலி வேலைக்கு செல்வோர் போன்றவர்களுக்கும் எதிர்கால நிதி பாதுகாப்பு வழங்கவும், ஓய்வூதியத்திற்கான பாதுகாப்பை வழங்கவும் செயல்படுத்தப்படுவது public provident fund எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பிபிஎப் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த திட்டம் 1968 ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.

இந்த பிபிஎப் திட்டத்தில் இந்தியாவில் பிறந்த யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் 7.1 வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. தபால் நிலையம் அல்லது வங்கியில் என எங்கு வேண்டுமானாலும் பிபிஎஃப் கணக்கை நீங்கள் ஆரம்பித்து முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் வாயிலாக எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் சேமிக்க முடியும். குழந்தைகளின் கல்வி மறறும் திருமணம் மற்றும் வீடு வாங்குவது வரை என பல விஷயங்களை செய்ய பேருதவியாக இருக்கும்.

நீங்கள் பிபிஎப் திட்டத்தில் முதலீட்டை ரூ.500 முதல் தொடங்க முடியும். அதே நேரத்தில் நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்ய முடியும். - இந்த திட்டம் 15 ஆண்டுகள் வரை இருக்கும். கூடுதலாக 5 ஆண்டுகள் வரை இதை நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் பிபிஎப் சேமிப்பில் ரூ.1.5 லட்சம் என 15 ஆண்டுகளாக தொடர்ந்து முதலீடு செய்யாம். அப்படி செய்தால் மொத்த முதலீடு ரூ.22,50,000 ஆக இருக்கும். இதற்கு தற்போதைய வட்டி விகிதத்தின் படி 7.1 விழுக்காடு வட்டியுடன், மொத்தம் ரூ.40,68,209 என்ற தொகை கிடைக்கும்.
இதனிடையே நீங்கள் உங்கள் PPF கணக்கில் பணம் செலுத்தும்போது, 5 ஆம் தேதிக்குள் செலுத்தி விடுங்கள். அப்படி செலுத்தினால் தான் அந்த மாதத்திற்கான வட்டி உங்களுக்கு கிடைக்கும். 6 ஆம் தேதிக்குப் பிறகு வரும் முதலீடுகளுக்கு வட்டி (அந்த மாதத்திற்கு உங்களுக்குக் கிடைக்காது. தேதி பார்த்து கவனமாக முதலீடு செய்யுங்கள் என பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications