பஞ்சு பஞ்சா போதே.. அருணன் வர்றாரா.. யார்னு தெரியுதா.. "சூழும் மேகங்கள்".. திமுகவையே மிஞ்சுதா பிஜேபி?
சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வரும் நிலையில், தமிழக கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.. அந்தவகையில், எங்கே போட்டியிடுவது என்பது குறித்த ஆலோசனையிலும், திட்டங்களிலும் தீவிர கவனத்தையும் செலுத்தி வருகிறார்கள்.. அதுகுறித்த தகவல்கள்
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளை கேட்பது என்று பாஜக பிளான் வைத்திருக்கிறது போலும்.. ஆனால், ஐபி ரிப்போர்ட்படி பாஜகவுக்கு சாதகமானது மொத்தம் 10 தொகுதிகள் என்கிறார்கள்.

இந்த 10 தொகுதிகளில் முதன்மையாக உள்ளது நீலகிரி.. எனவே, இந்த முறை எம்பி தேர்தலில் நீலகிரியில் போட்டியிட போவதாக பேச்சு அடிபட்டது.
தெலுங்கு : ஆனால், எல்.முருகன் பெயர் அடிபட்டபோதே, இவருக்கு போட்டியாக விபி துரைசாமியின் பெயரும் அடிபட்டது.. காரணம், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தன்னுடைய மகனுக்கு கெங்கவல்லி தொகுதியை கேட்டிருந்தார் துரைசாமி.. ஆனால், அது கிடைக்கவில்லை.. அதனால், இந்த முறையாவது தன்னுடைய மகனுக்காக நீலகிரி தொகுதியை தர வேண்டும் என்று கேட்டதாக ஒரு தகவல் கசிந்தது.. எல்.முருகனும் துரைசாமியும் தெலுங்கு பேசும் அருந்ததியர்கள் ஆவார்.. அத்துடன் இருவருமே ஒருவகையில் உறவினரும்கூட. அதனால், நீலகிரியை யாருக்கு தருவது என்று மேலிடம் குழம்புவதாக சலசலக்கப்பட்டது.
சமிக்ஞைகள்: எனினும் இந்த சலசலப்பெல்லாம், 3 மாதத்துக்கு முன்பு அதாவது, ஜேபி நட்டா, கோவை வந்தபோதே உதிர்ந்துபோய்விட்டது.. இணை அமைச்சர் எல் முருகன் நீலகிரியில் கவனம் செலுத்தி வருகிறார் என்று அண்ணாமலையும் நட்டாவிடம் எடுத்து சொல்ல, எல்.முருகன் நீலகிரியில் போட்டியிடுவதற்கான சமிக்ஞைகள் லேசாக அப்போது தென்பட்டன. நீலகிரியை பொறுத்தவரை, அதிமுக, திமுக என இரு கட்சிகளும் மாறி மாறி கைப்பற்றினாலும், பாஜகவும் ஓரளவு வலுவாகவே உள்ளது..
டேன் டீ: கடந்த முறையே அதிமுகவிடம் நீலகிரியை கேட்டு வாங்கியிருந்தது பாஜக.. அதற்கு பிறகு, தொடர்ச்சியான களப்பணிகளையும் மேற்கொண்டு வந்தது.. சமீபத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்திலும் அண்ணாமலை பங்கேற்று, இதனை உறுதியும் செய்திருந்தார். அந்தவகையில், நீலகிரியில் எல்.முருகன்தான் போட்டியிட போகிறார் என்பது கிட்டத்தட்ட கன்பார்ம் ஆகிவிட்டது.
வாக்கு வித்தியாசம்: பாஜக இந்த அளவுக்கு நீலகிரியை விடாமல் பிடித்து கொண்டிருக்க காரணம், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஊட்டி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் போஜராஜன் சுமார் 5,300 ஓட்டு வித்தியாசத்தில்தான், காங்கிரஸ் வேட்பாளர் கணேஷிடம் தோற்றுப்போனார். அதனால், மலைவாழ் மக்களின் ஆதரவு பாஜகவுக்கு இருப்பதாக அளவுக்கு அதிகமாகவே நம்புகிறாராம் எல்.முருகன்.
அதுமட்டுமல்ல, இந்து மதம் குறித்து சர்ச்சையான கருத்துகளை ஆ.ராசா தெரிவித்ததால், அவருக்கான எதிர்ப்புகள் இங்கு அதிகரிக்கவும், இதுவும் எல்.முருகனுக்கு புது தெம்பை தந்திருந்தது.
அப்படியானால், ஆ.ராசா என்ன செய்ய போகிறார்? என்பதுதான் அடுத்த கேள்வியாக எழுந்துள்ளது.. இது தொடர்பாக 2 விதமான தகவல்கள் வலம்வருகினிற்ன.. தமிழகத்தில் உள்ள, 39 எம்பி தொகுதிகளில், சிதம்பரம், காஞ்சிபுரம், நாகை, நீலகிரி, தென்காசி, திருவள்ளூர், விழுப்புரம் போன்ற 7 தொகுதிகள், ஆதிதிராவிடர்களுக்கான தனி தொகுதிகள் ஆகும்.. இதில், நாகை, தென்காசியில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் எம்பிக்களாக இருக்கிறார்கள்..
நீலகிரி தொகுதி: கடந்த, 2019-ல் திமுக கூட்டணியில் அருந்ததியர் சமூக வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் அதிக அளவு எண்ணிக்கையில் அருந்ததியர் சமூகத்தினர் போட்டியிட வாய்ப்புள்ள ஒரே தொகுதி நீலகிரி மட்டும்தான்.. அதனால்தான், ஆ.ராசா தொடர்ந்து இங்கு போட்டியிட்டு வருகிறார்..
எனினும், 7 தனி தொகுதிகளில் ஒன்றில் கூட, அருந்ததியர் வேட்பாளரை நிறுத்தாத நிலையில், இந்த விஷயத்தில்தான் திமுக கவனம் செலுத்த துவங்கி உள்ளது. எல்.முருகன் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு போட்டியாக அருந்ததியர் சமூக வேட்பாளரை நிறுத்த திமுக யோசித்து வருவதாக சொல்கிறார்கள்..
வழக்கமாக பெரம்பலூரில் போட்டியிட்டு வந்த ராசா, அது பொது தொகுதியானதால்தான் நீலகிரிக்கு மாறினார். இந்த முறை நீலகிரியில் அருந்ததியரை நிறுத்த வேண்டும் என்று திமுக கணக்கு போடுவதால், அநேகமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் என இந்த தொகுதியில் ஏதாவதொன்றில் ஆ ராசா போட்டியிடலாம் என்று தகவல்கள் பரபரக்கின்றன.
அருணன் யார்?: மற்றொருபக்கம், மீண்டும் பழைய மாதிரியே பெரம்பலூரை குறி வைத்து வருகிறாராம் ஆ.ராசா.. நீலகிரி தொகுதியில், முருகன் போட்டியிட போவதாக தகவல்கள் வருவதால், நீலகிரியை தொகுதியை விட்டு வெளியேறவும் திட்டமிட்டு வருகிறாராம்.. தன்னுடைய சொந்த தொகுதியான பெரம்பலூர், பொது தொகுதி என்பதால், அங்கு தன்னடைய மகன் அருணனை நிறுத்த, அமைச்சர் நேரு முயற்சிப்பதாகவும் சொல்கிறார்கள்.. எனவே, சிதம்பரம் தொகுதியை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறாராம் ராசா..
திருமாவளவன் இந்த முறை தொகுதி மாறுவதாக தெரிகிறது.. திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.. கடந்த லோக்சபா தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரத்தில் அக்கட்சி பொதுச்செயலர் ரவிகுமாரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்... இதில், சிதம்பரம், விழுப்புரம் அருகருகே உள்ள தொகுதிகள் என்பதால், இருவருமே எம்பியாக இருந்தும், வட மாவட்டங்களில் கட்சியை வலுவாக கட்டமைக்க முடியவில்லை என்ற எண்ணம் உள்ளதாக தெரிகிறது.
திருமாவளவன்: அதுவும் இல்லாமல், ஏற்கனவே, 2 முறை சிதம்பரம் தொகுதியில், திருமாவளவன் வெற்றி பெற்று விட்டார்... அந்த தொகுதியை தாண்டி, விசிக பரவலாக தமிழகமெங்கும் இன்னும் அழுத்தமாக கால் ஊன்ற வேண்டும் என்பதற்காகவே தொகுதி மாற உள்ளதாக சொல்கிறார்கள்..
அதனால்தான், திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக காரணம் கூறப்படுகிறது.. இதுகுறித்து, திமுக தரப்பிலும் சரி, விசிக தரப்பிலும் சரி, எந்தவிதமான வெளிப்படையான முடிவுகளும் எடுக்கவில்லை என்றாலும், களப்பணியை இரு தரப்பிலுமே தமிழகமெங்கும் தீவிரப்படுத்தி வருகிறார்கள் அந்தந்த கட்சி தொண்டர்கள்.. அடு்தது என்ன நடக்க போகிறது? தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்?












Click it and Unblock the Notifications