கழுவுற மீனில் நழுவும் மனோவின் மகன்கள்! செல்போன் சிக்னலிலும் தில்லாலங்கடி! ஈசிஆரில் திணறும் போலீஸ்
சென்னை: செல்போன் சிக்னலை வைத்து பிரபல பாடகர் மனோவின் மகன்களை கண்டுபிடிக்கும் முயற்சி தொடர்ந்து தோல்வியில் முடிந்துள்ளதால் வளசரவாக்கம் போலீஸார் செய்வதறியாமல் திணறி வருகிறார்கள்.
கால்பந்து பயிற்சி மையத்தை சேர்ந்த 16 வயது சிறுவனை மனோவின் மகன்களும் அவர்களுடன் இருந்த மேலும் மூன்று பேரும் சேர்ந்து காரணமே இல்லாமல் கொடூரமாக தாக்கிய விவகாரத்தில் புகாரின் பேரில் அவர்கள் 5 பேர் மீதும் வளசரவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த தாக்குதல் வீடியோவும் வெளியான நிலையில் அவர்களை கைது செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளது. இந்த 5 பேரில் இருவரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில் மனோவின் மகன்களும், அவருடைய நண்பரும் தலைமறைவாகிவிட்டனர். மூவரையும் இரண்டாவது நாளாக இன்றும் வளசரவாக்கம் போலீஸார் தேடி வருகிறார்கள்.
அவர்களது செல்போன் சிக்னலை வைத்து போலீஸார் தேடுதல் வேட்டையை நடத்தினர். அதில் அவர்கள் இருவரும் கிழக்கு கடற்கரைச் சாலையில் (ஈசிஆர்) பதுங்கியிருப்பதாக தெரியவந்தது. அவர்களை தேடி வளசரவாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் ஈசிஆருக்கு விரைந்துள்ளனர்.
செல்போனை அணைத்து வைத்திருந்தாலும் அவர்களது சிடிஆர் எனச் சொல்லப்படும் செல்போன் அழைப்புகளை வைத்து அவர்களுடைய இருப்பிடத்தை கண்டறியும் பணிகள் காலை முதல் நடந்து வருகிறது. ஆனாலும் போலீஸாரால் அவர்களின் இருப்பிடத்தை கண்டறிய முடியவில்லை. செல்போன் லொகேஷன் வெவ்வேறு இடங்களில் மாறி மாறி காட்டுவதால் அவர்களை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகிறார்கள்.
நடந்தது என்ன?: சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருபாகரன் (20). இவர் தண்டையார்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மதுரவாயலைச் சேர்ந்த 16 வயது ஐடிஐ படிக்கும் சிறுவனுடன் வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் உள்ள கால பந்து பயிற்சி அகாதெமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு (செப் 10) பயிற்சி முடிந்து வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள உணவகத்திற்கு இருவரும் உணவு வாங்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்ற 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கிருபாகரன், 16 வயசு சிறுவன் ஆகிய இருவரிடமும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது வாக்குவாதம் முற்றியதால் மேற்கண்ட இருவரையும் அந்த 5 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து காயமடைந்த கிருபாகரனும், 16 வயது சிறுவனும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து கிருபாகரன் உள்பட இருவரும் போலீஸில் புகார் அளித்தனர். அப்போது விசாரணையில் தாக்குதல் நடத்திய 5 பேரில் இருவர் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் ரஃபி மனோ, சாகீர் என்பது தெரியவந்தது. இதையடுத்து மனோவின் வீட்டிற்கு சென்ற போலீஸார் அங்கு விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மனோ மகன்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விக்னேஷ் (28), தர்மா (26) ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீஸார் தலைமறைவாக உள்ள மனோவின் மகன்கள் உள்பட 3 பேரை தேடி வருகிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications