விஜயகாந்த் உடன் எம்எல்ஏ ஆன 28 பேர்.. இப்போது யார் யார்? எங்கே இருக்காங்க?
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூடவே எம்எல்ஏ ஆன 28 பேர் இப்போது எங்கே இருக்கிறார்கள்.. என்ன செய்கிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
நடிகர் விஜயகாந்த் கடந்த 2005ம் ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்நிலையில் 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட்டார்கள். விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். மற்றவர்கள் வெற்றி பெறவில்லை. கிட்டத்தட்ட 8.45 சதவீதம் வாக்குகளையும் பெற்றார்கள். அந்த தேர்தலில் திமுக மைனாரிட்டியாகவே வெற்றி பெற்றது. அதிமுகவும் தோற்றுப்போனது. அதிமுக தோல்விக்கும், திமுக மைனாரிட்டியாக கூட்டணி பலத்தில் ஆட்சி செய்ய வேண்டிய நிலைக்கும் விஜயகாந்த் தான் காரணம் என்று பேசப்பட்டது.

தொடர்ச்சியாக 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிட்டார்கள். அந்த தேர்தலில் 10.5 சதவீதம் வாக்குகளை பெறுகிறார்கள்.. அதன்பிறகு 2011 தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, 29 இடங்களில் வெற்றி பெற்றது. ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவான விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். ஆளும் கட்சி எதிர்க்கட்சி இரண்டுமே அதிமுக தேமுதிக கூட்டணிக்கே போய்விட்டது. திமுக எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தை இழந்து மோசமாக தோற்றது.
இந்நிலையில் எதிர்க்கட்சியாக உயர்ந்த தேமுதிகவுக்கும், ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவுக்கும் இடையே கூட்டணி ரொம்ப நாள் சட்டமன்றத்தில் நீடிக்கவில்லை. பால் விலை உயர்வு உள்பட விலைவாசி உயர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் விஜயகாந்த் சில கேள்விகளை 2011ம் ஆண்டே எழுப்புகிறார். அது அதிமுக தேமுதிக இடையே மோதலாக உருவெடுக்கிறது.விஜயகாந்த், ஜெயலலிதாவை நோக்கி சட்டமன்றத்தில் நாக்கை துருத்திய சம்பவமும் நடந்தது. இதனை தொடர்ந்து தேமுதிக எம்எல்ஏக்கள் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை போய் சந்திக்கும் சம்பவங்களும் நடந்தது.

அப்போது தேமுதிகவில் இருந்து மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏவாக இருந்த சுந்தர்ராஜனும், திட்டக்குடி எம்எல்ஏவாக இருந்த தமிழ் அழகன் ஆகிய இரண்டு பேரும் போய் தான் முதல்முதலாக ஜெயலலிதாவை சந்தித்தார்கள். இதன் தொடர்ச்சியாக நடிகர் அருண் பாண்டியன், தற்போது அதிமுகவில் இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், தொடர்ச்சியாக போய் தொகுதி வளர்ச்சி என்று ஜெயலலிதாவை சந்திக்கிறார்கள். கிட்டத்தட்ட 8 எம்எல்ஏக்கள் அப்படி ஜெயலலிதாவை அடுத்தடுத்து சந்தித்தார்கள். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் 2016 பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்கிறார்கள். தன்னால் எம்எல்ஏ ஆனவர்களாலேயே எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியையும் விஜயகாந்த் இழந்தார்.

தேமுதிகவில் உள்ள 9 பேர்: அப்போதில் இருந்து சமீபத்தில் வரை தேமுதிகவில் எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் பலர் பல கட்சிகளுக்கு மாறி போய் இருக்கிறார்கள். விஜயகாந்த் உடன் எம்எல்ஏக்களாக இருந்த 28 பேர் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம். இதில் விஜயகாந்த் உடன் எம்எல்ஏக்களாக இருந்த 10 பேர் இன்றும் விஜயகாந்தின் தேமுதிகவில் தான் தொடர்கிறார்கள். அந்த வகையில் விஜயகாந்தை தவிர்த்துவிட்டு பார்த்தால், விருகம்பாக்கத்தில் எம்எல்ஏவாக இருந்த பார்த்தசாரதி, திருக்கோவிலூரில் எம்எல்ஏவாக இருந்த வெங்கடேசன், செங்கல்பட்டு எம்எல்ஏவாக இருந்த முருகேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவாக இருந்த செந்தில்குமார், சோழிங்கர் எம்எல்ஏவாக இருந்த பிஆர் மனோகர், கங்கவல்லி எம்எல்ஏவாக இருந்த சுபா, பண்ருட்டி எம்எல்ஏவாக இருந்த சிவக்கொழுந்து, சேலம் வடக்கு எம்எல்ஏவாக இருந்த அலகாபுரம் மோகன்ராஜ், சென்னை எழும்பூரில் எம்எல்ஏவாக இருந்த நல்ல தம்பி, உள்ளிட்ட 9 பேருமே இப்போதும் தேமுதிகவில் தான் இருக்கிறார்கள்.
அதிமுகவில் இணைந்த 8 பேர் : 2011ல் தேமுதிக சார்பில் எம்எல்ஏவாக தேர்வான 8 பேர் இப்போது அதிமுகவில் இருக்கிறார்கள். ராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற மைக்கேல் ராயப்பன், விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்ற மாபா பாண்டியராஜன், மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்ற சுந்தர்ராஜன், ஆலந்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரன் (ஓபிஎஸ் அணி), ஆரணி தொகுதியில் வெற்றி பெற்ற பாபு முருகவேல், திட்டக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற தமிழ் அழகன், சேந்தமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்ற சாந்தி, செங்கம் எம்எல்ஏ சுரேஷ் உள்ளிட்ட 8 பேரும் இப்போது அதிமுகவில் இருக்கிறார்கள்.. 3

திமுகவில் இணைந்த 6 பேர் : 2011ல் தேமுதிகவில் எம்எல்ஏவாக இருந்தவர்களில் ஆறு பேர் இப்போது திமுகவில் இருக்கிறார்கள்.. 2016க்கு முன்பாக மக்கள் நலக்கூட்டணி உருவாகிறது. இந்நிலையில் விஜயகாந்துக்கு வலதுகரமாக இருந்த சந்திரக்குமார், இப்போது சேலத்தின் எம்பியாக உள்ள பார்த்திபன், கும்மிடிப்பூண்டி சேகர் ஆகிய 3 பேருமே விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணிக்கு போகக்கூடாது, திமுக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினார்கள். அவர்கள் திமுக உடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டார்கள்.. ஆனால் யாருமே வெற்றி பெறவில்லை.. இவர்களை தவிர மயிலாடுதுறை எம்எல்ஏவாக இருந்த அருட்செல்வன், விருத்தாசலத்தில் எம்எல்ஏவாக முத்துக்குமார், சூலூரில் எம்எல்ஏ ஆன தினகரன், இப்போது திமுகவில் இருக்கிறார்கள்.
தர்மபுரியில் எம்எல்ஏவாக இருந்த பாஸ்கர் இப்போது பாஜகவில் இருக்கிறார். அதேபோல் திருத்தணி எம்எல்ஏவாக இருந்த அருண் சுப்பிரமணியன் பாஜகவில் பொறுப்பில் இருக்கிறார்.தேமுதிக சார்பில் 2011ம் ஆண்டு திருப்பரங்குன்றத்தில் எம்எல்ஏவாக இருந்த ஏகேடி ராஜா மற்றும் திருச்செங்கோடு எம்எல்ஏவாக இருந்த சம்பந்த்குமார் ஆகியோர் தற்போது அமமுகவில் இருக்கிறார்கள். இவர்களை தவிர பேராவூரணி எம்எல்ஏவாக இருந்த நடிகர் அருண் பாண்டியன் இப்போது எந்த கட்சியிலுமே இல்லை.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications