2,300,000.. மிஸ் பண்ணிடுவாரா டிடிவி தினகரன்.. அன்று ஒவைசி.. இன்று பாஜக?.. அமமுக கிராஃப் ஏறுதே.. செம
அமமுக தனித்து போட்டியிடவும் தயார் என்று டிடிவி தினகரன் சொல்ல காரணம் என்ன
சென்னை: நேற்றைய தினம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்துள்ள ஒரு பேட்டி, அரசியல் விவாதங்களையும், ஆதரவையும், அத்துடன் சில குழப்பங்களையும் சேர்த்து கிளப்பி விட்டு வருகிறது.
தினகரனை பொறுத்தவரை, மிகச்சிறந்த அரசியல் சாணக்கியர்.. பக்காவாக அரசியல் செய்யக்கூடியவர்.. முதிர்ச்சி பக்குவ கூடிய பொறுமையும் தினகரனிடத்தில் உண்டு.. அதனால்தான் "கூல் கேப்டன்" என்ற பெயரை தமிழக அரசியலில் அவரால் பெற முடிந்திருக்கிறது.
ஆனால், இப்படிப்பட்ட தினகரனே அவசரப்பட்டு, சில பேட்டிகளை தந்துவிடுவதாக சமீப காலமாகவே விமர்சனம் படர்ந்து வருகிறது.. குறிப்பாக கூட்டணி தொடர்பான விஷயங்களில் அவரது நிலைப்பாடுகள் மாறிக் கொண்டே இருப்பதாக சொல்கிறார்கள்.

மெச்சூரிட்டி
"எடப்பாடி மெகா கூட்டணி பற்றி பேசியதுமே, அந்த மெகா கூட்டணியில் இணைய போவதாக தினகரன் சொல்லியிருந்தார்.. அதுமட்டுமல்ல, பாஜகடன் அல்லது காங்கிரஸூடன் கூட்டணி வைப்போம் என்றும் தினகரன் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.. இதைதான் அரசியல் பார்வையாளர்கள், அன்றே கோடிட்டு காட்டினார்கள்.. தினகரனை போன்ற பக்குவம் வாய்ந்தவர்களே இப்படி சொல்லலாமா? அரசியல் களத்தில் தனியாக நின்று தனக்கென ஒரு வாக்கு வங்கியை அமமுக பெற்றிருக்கும்போது, எடப்பாடியின் மெகா கூட்டணியில் இணைவதுபோல சொல்லியிருக்கக்கூடாது, நாங்கள்தான் மாற்று என்று துணிச்சலாக தினகரன் சொல்லி இருக்க வேண்டும்.. அதுதான் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு..

தனிஒருவர்
மேலும், தேசிய கட்சி ஏதாவது ஒன்றில் கூட்டணி என்று பொத்தாம் பொதுவாக சொல்லலாமா? அப்படியானால், அமமுகவுக்கென்று ஒரு நிலைப்பாடு கிடையாதா? யாரிடம் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்ற நிலையில்தான் அக்கட்சி உள்ளதா? "பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலை வந்தால், அரசியலை விட்டே ஒதுங்கி விடுவேன்" என்று அன்று சபதம் எடுத்த தினகரன், இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க முயல்வது சரியா? என்ற அடுத்தடுத்த கேள்விகளும் தினகரன் மீது பாய்ந்து கொண்டுதான் இருக்கிறது.

முஸ்லிம் வோட்பேங்க்
கடந்த முறை தேர்தலின்போது, ஒவைசியுடன் தினகரன் கூட்டணி வைத்திருந்தார்.. வழக்கமாக ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுக கூட்டணிக்கே சாதகமாக விழுந்து கொண்டிருக்கும் சூழலில், அதற்கு பாதிப்பு ஏற்படும் வகையில், திமுகவின் முஸ்லிம் ஓட்டுக்களை பிரிக்கவே இப்படி ஒரு கூட்டணியை தினகரன் வைத்திருக்கிறார் என்றும், தேசிய அளவில் இஸ்லாமிய தலைவராக உருவாகி வரும் ஓவைசி, அமமுகவோடு கூட்டணி வைத்துள்ளதை அதிமுகவும் ஆச்சரியத்துடன் பார்த்தது என்றும் அப்போது மீடியாக்களில் செய்திகள் வெளியாகின..

காய்நகர்த்தல்கள்
ஆனால் இம்முறை பாஜகவுடன் கூட்டணி வைக்க நேர்ந்தால், சிறுபான்மையினர் ஓட்டுக்களை தினகரன் இழக்க நேரிடும் என்றும் அலர்ட் செய்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.. ஆக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு இப்போது கூட்டணிக்கு ரெடியாவது, சிறுபான்மையினர் வாக்குகள் பற்றி அக்கறை கொள்ளாதது, அதிமுகவுடன் கூட்டணிக்கு தயாராவது, போன்ற தினகரனின் காய்நகர்த்தல்கள், பெரிய அளவில் அலசப்பட்டே வருகின்றன.. நேற்றைய தினம் தினகரன் தந்துள்ள பேட்டி, வழக்கமான பேட்டிகளில் இருந்து சற்று மாறுபட்டுள்ளதுடன், சில அலசல்களையும் உண்டு பண்ணி வருகிறது..

கறார்ரகம்
தினகரன் தன்னுடைய பேட்டியில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துத்தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. ஒருவேளை அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் தனித்தும் நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம் என்று கறாராக கூறியிருக்கிறார். அத்துடன், அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பேயில்லை என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதாவது கூட்டணிக்கும் ரெடி, இல்லாவிட்டால் தனித்து போட்டியிடவும் ரெடி என்பதே தினகரனின் தற்போதைய அதிரடியாக உள்ளது.. போகிற போக்கில் ஓபிஎஸ்ஸை லேசாக அட்டாக் செய்தாலும், "தனித்தும் போட்டியிடுவோம்" என்று சீமானை போல தினகரன் கூறியுள்ளது அவரது கட்சியினரையே மிகுந்த ஆதரவை பெற்று வருகிறது..

2300000 வாக்குகள்
மேலும், பதவிக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல், கொள்கைக்காக தற்காலிக வெற்றிகளை இழக்கவும் தினகரன் துணிந்துவிட்டார் என்று பூரிக்கிறார்கள் அமமுக நிர்வாகிகள். இங்கு இன்னொன்றையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. அன்று எம்பி தேர்தலின்போது, எஸ்பிடிஐ உடன் மட்டுமே அன்று அமமுக கூட்டணி வைத்திருந்தது.. ஆனால், கடந்த முறை தேமுதிகவையும் தன்னுடன் இணைத்து கொண்டு தேர்தலை சந்தித்தது.. இதில், கடந்த 2019-ல் கிட்டத்தட்ட 23 லட்சம் வரை அமமுக வாக்குகளை பெற்றது..

நிஜபலம்
2021-ல் கூட்டணியுடன் சேர்த்து, 13 லட்சத்து அளவுக்குதான் அமமுக வாக்குகளை பெற்றுள்ளது.. அதாவது கூட்டணியை விரிவுபடுத்தியும்கூட, வாக்குகளில் அமமுக சுருங்கிவிட்டதை நாம் நினைவுகூர வேண்டி உள்ளது. அதுமட்டுமல்ல, இன்று எடப்பாடி + ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக பிரிந்துள்ள நிலையில், அவர்களுக்கான வாக்கு வங்கி என்ன என்பது இப்போதுவரை தெரியவில்லை.. அதை அவர்கள் தனித்தனியாக நிரூபிக்கவும் இல்லை.. இனி தேர்தல் வந்தால்தான், அவர்களுக்கான நிஜபலம் களத்தில் எவ்வளவு உள்ளது என்பது தெரியவரும்..

எகிறும் கிரேஃப்
ஆனால், டிடிவி தினகரன் தன்னுடைய பலத்தை நிரூபித்துள்ளார்.. தனக்கான வாக்கு வங்கியை இப்போதும் கையில் இறுக்கமாக வைத்துள்ளார்.. தென்மண்டலத்தில் காலூன்ற வேண்டுமானால், தினகரனின் தயவும் தேவை என்பதை மேல்மட்ட பாஜக நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர்.. அந்த அளவுக்கு தன்னுடைய பலத்தை நிரூபித்த டிடிவி தினகரன், தனித்தே போட்டியிட்டால், அவருக்கான கிரேப் ஏறுவதுடன், அமமுகவின் செல்வாக்கும் பன்மடங்காகும் என்றே நமக்கு தெரிகிறது.. எனினும் என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications