எங்கே எடப்பாடி? கிளப்பிய "பிரபலம்".. இதை சொல்லிட்டா செய்றது? பழனிசாமி போட்ட போடு.. கப்சிப் ஆபீசர்ஸ்
சென்னை: எடப்பாடி பழனிசாமியை காணவில்லை? எடப்பாடி பழனிசாமி எங்கே? என்று சிலர் திடீர்னு கிளப்பிவிட்டுவிட்டார்கள்.. இதற்கு அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியே பதில் சொல்லி உள்ளார் பாருங்கள்.
தமிழகத்தில் எம்பி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.. இதற்கான தீவிர பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார்... பாஜகவை சமாளிக்கணும், திமுகவை எதிர்க்கணும், விட்டதை பிடிக்கணும் என்ற பல்வேறு நெருக்கடிகள் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

பிரச்சாரம்: அதனால், தனிநபராகவே, தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.. தேர்தல் முடிந்து சில நாட்கள் சேலத்தில் முகாமிட்டிருந்தவர் திடீரென காணாமல் போய்விட்டாராம்.
அதாவது, எப்போதுமே எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.. எடப்பாடி, எந்த ஊருக்கு போனாலும், இந்த செக்யூரிட்டி அதிகாரிகளும் அவருடனேயே போவார்கள்.. சேலத்திற்கு வந்தால் மாநகர ஆயுதப்படையிலிருந்து பாதுகாப்பு பணியையும் மேற்கொள்வார்கள்.
சிலுவம்பாளையம்: ஆனால், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, சேலம் வந்த எடப்பாடி பழனிசாமி, சேலம் போலீஸ் பாதுகாப்பை நிறுத்திவிட்டு, மத்திய தொழில்பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவரை மட்டும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரான சிலுவம்பாளையம் கிளம்பி போனாராம்.. அதற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி எங்கு இருக்கிறார்? என்பது தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது.. ஆனால், அவர் எங்கு சென்றார் என கட்சியின் தொண்டர்களுக்கு கூட தெரியவில்லை...
ஒருசிலர் அவர் கோவையில் இருப்பதாகவும், சிலர் கேரளாவில் இருப்பதாகவும் சொன்னார்கள்.. அவர் எங்கே போனால் என்ன? பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் எங்கு செல்கிறோம் என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போயிருக்கலாமே? என்ற முணுமுணுப்புகளும் வெடித்தன.
விளக்கம்: இப்படிப்பட்ட சூழலில், இதற்கு எடப்பாடி பழனிசாமியே செய்தியாளர்களிடம் விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.. பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்துச் செல்லாமல் பயணம் மேற்கொண்டது ஏன்? என்பது குறித்தும் விளக்கம் தந்துள்ளார்..
ஏற்காட்டில் பஸ் விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு பழம், ஹார்லிக்ஸ் போன்றவற்றை வழங்கினார். பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
"வழக்கமாக வெளியூர் பயணம் சென்றால் அதிமுக சார்பில் தகவல் சொல்வீர்கள்? ஆனால், கடந்த 5 நாட்கள் சென்றது ரகசிய பயணமா? அரசியல் பயணமா? என்று செய்தியாளர்கள் எடப்பாடியிடமே கேட்டார்கள்.
சந்தேகம்: அதற்கு எடப்பாடி பழனிசாமி , "ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக கேரளாவுக்கு போயிருந்தேன்.. எனக்கு கால் வலி இருக்கிறது.. அதிகநேரம் நின்றதால் பாதம் வலி, தசை இறுகிப்போய் இருக்கிறது... ஆயுர்வேத சிகிச்சை எப்படி செய்யலாம் என்பது குறித்து கேட்டு, சிகிச்சை பெறுவதற்காக 3 நாட்கள் கேரளாவில் தங்கியிருந்தேன்... இதையெல்லாம் பட்டிமன்றம் வைத்து சொல்லிவிட்டா போக முடியும்?" என்றார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி எங்கே? என்று அதிமுகவிலேயே சிலர் சந்தேகங்களை கிளப்பிவிட்ட நிலையில், எடப்பாடியே விளக்கம் தந்து, குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்..!!!












Click it and Unblock the Notifications