20 + 20.. அந்த மேட்டரை அமித்ஷா சொன்னதுமே, சட்டென பார்த்த எடப்பாடி பழனிசாமி.. அவருக்கு "பச்சை கொடி"
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் மும்முரமாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ள நிலையில், அதுகுறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
எம்பி தேர்தல் விவகாரம் சூடுபிடித்து வருகிறது.. அந்தவகையில், தமிழகத்திலும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் துவங்கி உள்ளன.. இதில், அதிமுக - பாஜக கூட்டணி, வேகம் எடுத்துள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பே, பாஜக சீட் விவகாரங்கள் குறித்து ஒரு தகவல் வெளியானது. அதாவது, 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டுமாம்.. மீதமுள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டுமாம்.. தங்களுக்கு ஒதுக்கப்படும் அந்த 20 தொகுதிகளை, தங்களுக்குள் பிரித்துக் கொள்வார்களாம்.. இப்படி ஒரு டீலிங்கை அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தியிருக்கிறது..
20 - 20 சாத்தியமா: தங்களுக்கு ஒதுக்கப்படும், அந்த 20 தொகுதிகளில், 13 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தவும், மீதமுள்ள 7 தொகுதிகளை தங்களது கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க பாஜக திட்டமிட்டிருக்கிறது..
அந்த 7 தொகுதிகள் யார் யாருக்கு தெரியுமா? ஓபிஎஸ் அணி + அமமுக டிடிவி தினகரன், தமாகா ஜிகே வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர் போன்றோருக்குதான் அந்த தொகுதிகளை வழங்க பாஜக கணக்கு போட்டதாம்.
அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் அணிக்கு மட்டும் 2 இடங்கள், அதாவது ஓபிஎஸ் + ரவீந்திரநாத் என 2 சீட்களை கொடுக்கலாம், இவர்களை பாஜகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட வைக்கலாம் என்று கூறியதாம் பாஜக தரப்பு.. இதையெல்லாம் கேட்டு, எடப்பாடியே அப்படியே அதிர்ந்து போய்விட்டாராம்.. ஆனாலும் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்துக்கு உடனடியாக எந்த பதிலும் சொல்லவில்லையாம்..
2 மாதங்களுக்கு முன்பு இந்த செய்தியெல்லாம் கசிந்தது என்றாலும், இப்போது இதே நிலைப்பாட்டில்தான் பாஜக உள்ளதாக தெரிகிறது.. அதனால்தான், ஓபிஎஸ்ஸின் தனிக்கட்சிக்கும் தடை போட்டுள்ளதாக தெரிகிறது..
பாதிக்கு பாதி: ஆனால், பாதிக்கு பாதி என்ற ரேஞ்சுக்கு தொகுதிகளை ஒதுக்க எடப்பாடி பழனிசாமி சம்மதிப்பாரா? அதிலும், அதிமுக வலுவான தொகுதிகளான கோவை உள்ளிட்ட தொகுதிகளை பாஜக கேட்க நேரும்போது, அதற்கு எடப்பாடி ஒப்புக் கொள்வாரா? ஓபிஎஸ்ஸை இப்போதுவரை விடாமல், விரல் பிடித்து வரும் பாஜகவின் ஆதரவினை, எப்படி எடப்பாடி பழனிசாமி எதிர்கொள்ள போகிறார்? என்பதெல்லாம் தெரியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்றுள்ளார். எப்படியும் கூட்டணி விவகாரங்கள் குறித்து, பாஜக தலைவர்களிடம் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
கூட்டணி உறுதி?: அதன்படியே சில தகவல்களும் வெளியாகி உள்ளன. உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது 2 பேருமே தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும், கூட்டணி தொடர்பாகவும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்பி தேர்தலில், நீங்கள் 20 இடங்களில் போட்டியிடுங்கள், எங்களுக்கு 20 தொகுதிகளை கொடுத்து விடுங்கள்.. இந்த இடங்களில் நாங்களும் போட்டியிட்டுக்கொண்டு கூட்டணி கட்சிகளுக்கும் பிரித்து கொடுத்து விடுகிறோம் என்று அமித்ஷா தரப்பில் கேட்டதாக தெரிகிறது.. ஆனால், அமித்ஷாவின் வியூகத்துக்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிக்கவில்லையாம். கூட்டணியில் யார்-யாருக்கு எத்தனை இடங்கள்? என்பது பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம்.
அதிமுக பாஜக கூட்டணி: அதேபோல, அதிமுக-பாஜக கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த கட்சிகளை அப்படியே இந்த முறையும், மறுபடியும் கூட்டணியில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வலியுறுத்தினாராம்.. அதிலும், தேமுதிக கட்டாயம் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்றாராம்.. இதற்கு மட்டும் ஓகே சொன்னாராம் எடப்பாடி. தேமுதிகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை என்றும் உறுதியாக சொல்லிவிட்டாராம்.
மற்ற பேச்சுவார்த்தைகள் எல்லாம் இனிமேல்தான் நடத்தப்படும் என்று தெரிகிறது.. அடுத்த மாதம் இறுதியில் அல்லது நவம்பரில் தமிழகத்துக்கு அமித்ஷா வரஉள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பதால், அந்த நேரத்தில் மற்ற சீட், தொகுதி விவகாரங்கள் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாமகவை கூட்டணிக்குள் வேண்டாம், பாமக இல்லாமலேயே, வன்னியர் வாக்குகள் அதிமுகவுக்கு வந்து விழும் என்று எடப்பாடி சொல்லி வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
ஓகே சொல்வாரா: இப்படிப்பட்ட சூழலில், தேமுதிகவுக்கு மட்டும் எடப்பாடி பச்சைக்கொடிவிட்டதால், மற்ற கட்சிகளின் நிலைப்பாடு தெரியவில்லை. ஓபிஎஸ், டிடிவி தினகரன் விவகாரமும் தெரியவில்லை.. தனித்து போட்டி என்று தினகரன் ஒருபக்கம் சொல்லி வருவதால், அமமுகவின் வியூகங்கள் வலுவாக இருக்கும் என்கிறார்கள். இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், பாதிக்கு பாதி, 20 சீட்டுக்களை பாஜகவுக்கு தர எடப்பாடி பழனிசாமி ஓகே சொல்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications