டெல்லி ஆசிரமத்தில் 17 பெண்களுக்கு பிரபல சாமியார் அனுப்பிய ஆபாச மெசேஜ்.. மண்டைக்கேறிய காம வெறி.. இவரா
சென்னை: சாமியார் ஒருவர் மாணவிகளுக்கு அசிங்க அசிங்கமான மெசேஜ்களை அனுப்பியிருக்கிறார்.. டெல்லியில் பிரபல கல்வி நிறுவனத்தின் மேலாளராகவும் இந்த சாமியார் பொறுப்பில் உள்ள நிலையில், மொத்தம் 17 மாணவிகள் சாமியார் மீது பாலியல் புகார் தந்துள்ளது மிகுந்த பரபரப்பை தலைநகரில் ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பான விசாரணையையும் டெல்லி போலீசார் கையில் எடுத்துள்ளனர்.. யாரிந்த சாமியார்? மாணவிகளுக்கு மடத்தில் என்ன நடந்தது?
டெல்லியில் வசந்த்கஞ்ச் என்ற பகுதியில், ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மேனேஜ்மெண்ட் என்ற கல்வி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.. இந்த நிறுவனம், சிருங்கேரியில் இருக்கக்கூடிய சாரதா மடத்துடன் தொடர்புடையது..

அந்தவகையில், இது பிரபல ஆன்மீக நிறுவனத்தால் நடத்தப்படக்கூடிய கல்வி நிறுவனமாகும்.. இந்த ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியன் மேனேஜ்மென்ட்டில், சம்பந்தப்பட்ட மாணவிகள் EWS உதவித்தொகையில் PGDM என்று சொல்லக்கூடிய மேலாண்மையில் முதுகலை டிப்ளமோ படிப்புகளை படித்து வந்திருக்கிறார்கள்.
சாமியாரின் அசிங்கமான மெசேஜ்
இந்த நிறுவனத்தின் மேலாளராக இருப்பவர் சாமியார் சைத்தியானந்த சரஸ்வதி.. இவரது ஒரிஜினல் பெயர் பார்த்தசாரதி என்பதாகும்.. கல்வி நிறுவனத்தின் மேனேஜராக உள்ள இவர் மீதுதான் பாலியல் புகார்கள் கிளம்பி உள்ளன.
சாமியார் சைத்தியானந்த சரஸ்வதி மீது மொத்தம் 32 மாணவிகள் பாலியல் புகார்களை தந்துள்ளார்கள்.. இதில் 17 மாணவிகளுக்கு பாலியல் ரீதியான வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பியிருக்கிறார் சாமியார்.. ஆபாச மெசேஜ்களை அனுப்பியதுடன், தேவையற்ற தொல்லைகளையும் சாமியார் தர துவங்கியிருக்கிறார்..
கேட்டதை தந்துடுங்க
நாளுக்கு நாள் சாமியாரின் அட்டகாசம் அதிகமாகவும், மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள் ஒன்றுசேர்ந்து, ஆசிரமத்திலிருந்த ஆசிரியர்களிடம் புகார்களை கொண்டு சென்றுள்ளனர்.. ஆனால் அதைக்கேட்ட ஆசிரியர்கள், சாமியார் சொல்வது போலவே நீங்கள் நடந்து கொள்ளுங்கள், அவர் கேட்பதை நீங்கள் தந்துவிடுங்கள்" என்று மாணவிகளை நிர்ப்பந்தித்தார்களாம்.
இதற்கு பிறகுதான் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி போலீசுக்கு புகார் சென்றுள்ளது.. இதனால் போலீசார் ஆசிரமத்தில் நுழைந்து, சோதனை நடத்தி முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் சாமியார் பார்த்தசாரதி மாயமாகிவிட்டார்.. தற்போது தலைமறைவாக உள்ளதால், அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்..
கார் நம்பர் பிளேட்டில் மோசடி
ஆசிரமத்தில் சோதனை நடத்தியபோது, அந்த ஆசிரமத்தின் கீழ் பகுதியில் கார் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாம்.. முக்கிய அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் நம்பர் பிளேட் அந்த காரில் பொருத்தப்பட்டுள்ளதை கண்டு போலீசார் அதிர்ந்துள்ளனர்..
உடனே அந்த நம்பரை வைத்து டிரேஸ் செய்து பார்த்ததில், நம்பரும் போலியானது என்று தெரியவந்தது. அதாவது, அதிகாரிகள் பயன்படுத்தம் நம்பர் பிளேட்டை பொருத்தி, சாமியார் பார்த்தசாரதி இதுநாள் வரை அந்த காரை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
தற்போது சாமியார் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.. மாணவிகள் திரண்டு தந்த இந்த பாலியல் புகாரை தொடர்ரந்து, இந்த மடத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சாமியாரை சாரதா பீடம் நீக்கி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
பெண்களை சீண்டிய சாமியார்
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "சுவாமி பார்த்தசாரதி என்று முன்பு அழைக்கப்பட்ட சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி, சட்டவிரோதமான, பொருத்தமற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்... இதன் விளைவாக, பீடம் அவருடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துள்ளது... அவர் செய்த சட்டவிரோத செயல்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளது.
சாமியார் பார்த்தசாரதி மீது பாலியல் புகார்கள் கிளம்புவது இது முதல் முறையல்ல.. ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டிலேயே சாமியார் மீது மோசடி மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. அதேபோல கடந்த 2016ம் ஆண்டிலும், ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருக்கிறார்.. இப்போது மீண்டும் சாமியார் மீது பாலியல் புகார் தரப்பட்டுள்ளது.
ஆசிரமத்தில் சோதனை
சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி, ஒடிசாவை சேர்ந்தவராம்.. கடந்த 12 வருடங்களாகவே ஆசிரமத்தில் வசித்து வந்துள்ளார்.. நீண்ட காலமாக ஆசிரமத்தில் இருந்ததால், அந்த ஆசிரமத்தையே பராமரித்து, நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது..
இப்போது சாமியார் மீது மாணவிகள் வரிசையாக புகார்களை தெரிவித்துள்ளது பரபரப்பை தந்துள்ளது.. தலைமறைவாகியிருக்கும் சாமியார் பிடிபட்டால் மட்டுமே, இதுகுறித்து முழு விவரமும் தெரியவரும் என்கிறார்கள் போலீசார்.
இதனிடையே, ஆசிரமத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.. அத்துடன், சாமியார் தங்கியிருந்த அறை, ஆசிரம வளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும் பல சோதனைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications