அண்ணனை இப்போ பார்க்க முடியாது.. எடப்பாடி எங்கே போனார்? அதிர்ந்த நிர்வாகிகள்! வீடியோ காலால் வந்த ஷாக்
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எங்கே போனார் என்பது குழப்பமாக உள்ளது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்து அரசியல் பரபரப்பற்ற சூழ்நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினும் தேர்தல் விதிமுறைகள் முடியும் வரை பெரிய முடிவுகள், முக்கிய அறிவிப்புகளை வெளியிட முடியாது.

இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக கொடைக்கானல் சென்றுள்ளார். தேர்தல் பணிகள் காரணமாக தொடர்ந்து களத்தில் இருந்தவர் தற்போது ஓய்வு எடுப்பதற்காக கொடைக்கானல் சென்றுள்ளார்.
கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பிளான் மாற்றம்; முதலில் கோடை விடுமுறையை கழிக்க மாலத்தீவுக்குச் செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார். தேர்தல் முடிந்த நிலையில், திமுக அமைச்சர்கள்,வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என பலரையும் சந்தித்தார் ஸ்டாலின்.
கடந்த 5 நாட்களாக இந்த சந்திப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் கோடை வெப்பத்திலிருந்து சற்று விடுபடுவதற்காகவும், பிஸியான செட்யூல்டிலிருந்து ஓய்வு எடுக்கவும் மாலத்தீவுக்கு குடும்பத்தினருடன் சென்று வர வேண்டுமென ஸ்டாலினிடம் உதயநிதி பேசியிருக்கிறார்.
குடும்பத்தினரும் அதனை விரும்பியுள்ளனர். இதனை அடுத்து திங்கள் கிழமை கிளம்பி மே மாதம் 5 - ந்தேதி சென்னை திரும்புவதற்கேற்ப ஸ்டாலின் குடும்பத்தினர் ப்ரோக்ராம் போட்டுள்ளனர். ஸ்டாலினும் இதற்கு சம்மதித்ததாகத் தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின், 1 வாரம் மாலத்தீவு செல்கிறார் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.
பிளான் மாற்றம்: ஆனால், இதற்கு ஆரம்பத்தில் ஸ்டாலின் ஒப்புக்கொண்டாலும், அடுத்தடுத்த ஆலோசனையில் மாலத்தீவு ப்ரோக்ராம் வேண்டாம் என சொல்லி விட்டார். அரசியல் பிரச்சனைகள் காரணமாக இந்த முடிவை ஸ்டாலின் எடுத்திருக்கிறார். இதனையடுத்தே கொடைக்கானல் சென்று ஒரு வாரம் ஓய்வெடுத்து வரலாம் என திட்டமிடப்பட்டு முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி எங்கே?: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எங்கே போனார் என்பது குழப்பமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமியை பார்க்க சமீபத்தில் கடலூர் நிர்வாகிகள் சென்றுள்ளனர். அவரிடம் அனுமதி வாங்கியே கடலூர் நிர்வாகிகள் சேலம் சென்றுள்ளனர்.
சேலம் சென்ற பின் எடப்பாடி பிஏவிற்கு கால் செய்துள்ளனர். ஆனால் எடப்பாடி பிஏ.. அண்ணன் இங்கே இல்லை. அவரை பார்க்க முடியாது. இப்போதைக்கு பார்க்க முடியாது. சேலத்தில் காத்திருக்க வேண்டாம். இங்கே இருக்க வேண்டாம். அவர் உங்களை தேவைப்படும் சமயத்தில் அழைப்பார் என்று கூறியுள்ளனர்.
எடப்பாடி எங்கே; இதையடுத்து கடலூர் நிர்வாகிகள் வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு போன் செய்து எடப்பாடி எங்கே .. எடப்பாடி எங்கே போனார் என்று குழப்பமாக பேசி உள்ளனர். எடப்பாடி எங்கே கிளம்பினார் என்று தெரியாமல் குழப்பத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
வீடியோ கால்; இதையடுத்து எடப்பாடி பழனிசாமி வீடியோ கால் செய்துள்ளார். அந்த வீடியோ காலில்.. என்னை பின்னர் பார்க்கலாம். நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் அவசர வேலையாக வெளியில் உள்ளேன் என்று கூறியுள்ளாராம். இந்த நிலையில்தான் எடப்பாடி கேரளாவில் உள்ள வயநாட்டிற்கு சென்றுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளதாம். தனக்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக அவர் வயநாட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications