ஜான் பாண்டியன் "தடுமாறி" தாமரையில் மலர்ந்துட்டாரு.. எடப்பாடிக்கு "அடி".. எகிறியடிக்கும் ஸ்பீடு பாஜக
சென்னை: ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமாக ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார்.
"பாஜகவுடன் கூட்டணி முடிந்தது" என்று எடப்பாடி பழனிசாமி அன்று அறிவித்ததுமே, கூட்டணி கட்சிகளுக்கு கிறுகிறுவென தலையே சுற்றிவிட்டது. அதிலும், தமாகா தலைவர் வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் என யாருமே இந்த கூட்டணி முறிவை ஏற்கவில்லையாம்..

கூட்டணி கட்சிகள்: அதனால், விரைவில் விரிசலை தளர்த்தி, இரு கட்சிகளையும் இவர்கள் அனைவரும் இணைக்க போவதாக தகவல் வெளியானது. ஜான்பாண்டியனும் இப்படியான முயற்சியை எடுப்பதாக சொன்னார்கள்.
ஒருமுறை ஜான் பாண்டியன் பேட்டி தந்போது, "பாஜகவும் அதிமுகவும் ஒன்றாக இணைந்துவிட்டால், அமோக வெற்றியை பெற்றுவிடுவார்கள் என்பதால், கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதற்காகவே திமுக செய்த சதி இதுவாகும். காரணம், வைகோ அண்ணனை வைத்து, அணியை உருவாக்கி, அதிமுகவை வெற்றி பெற வைத்தார் ஜெயலலிதா.. அதுபோலவே, பாஜக + அதிமுக இணைந்துவிட்டால், அமோக வெற்றி பெற்றுவிடும் என்று திமுக நினைக்கிறது" என்றார் ஜான்பாண்டியன்.
டேமேஜ் திமுக: ஆக, ஒருபக்கம் முறிந்த கூட்டணியை இணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டே, மறுபக்கம் திமுகவையும் டேமேஜ் செய்து பேசியிருந்தார் ஜான் பாண்டியன். எனினும், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தை ஒரு தலைவராலும் தகர்க்க முடியவில்லை என்பதே உண்மை.
எனவே, அதிமுகவா? பாஜகவா? யாரிடம் கூட்டணி வைப்பது என்ற குழப்பத்துக்கு மொத்த தலைவர்களும் ஆளானார்கள். இதில், பாரிவேந்தர் மட்டும், பாஜகவுக்கான ஆதரவை முதல்நபராக தந்துவிட்டார்.
ஜிகே வாசன்: ஆனால், வாசன் போன்ற தலைவர்கள் நிறையவே குழம்பிவிட்டார்கள். இப்போதைக்கு தங்கள் முடிவை சொல்வதில்லை என்றும் அறிவித்து 2 மாத காலம் ஒதுங்கியும் கொண்டார்கள். இந்த 2 மாத காலமும் எந்த சாதகமான முடிவும் ஏற்படவில்லை. தற்போது தேர்தல் நெருங்கி வருவதால், யாருடனாவது கூட்டணியை அறிவிக்க வேண்டிய நெருக்கடி, தலைவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.
எனவேதான், சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டத்தை கூட்டியிருந்தார் ஜான் பாண்டியன்.. இந்த கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக, நிர்வாகிகள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதாவது எம்பி தேர்தலுக்காக, "உட்கட்சி" தேர்தலை நடத்தினார் ஜான் பாண்டியன்.
பேச்சுவார்த்தை: பிறகு செய்தியாளர்களிடம் ஜான் பாண்டியன் பேசும்போது, "வாக்குச்சீட்டு வாயிலாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்டுள்ளோம். இதனை பரிசீலிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது... அனைத்து கட்சி சார்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது" என்று கூறியிருந்தார்.. ஆனால், தன்னுடைய முடிவை அறிவிக்கவில்லை.
நேற்றைய தினம், தமாகா தலைவர் வாசன், பாஜகவுக்கான ஆதரவை அறிவித்திருக்கிறார். இதையடுத்து, இன்றைய தினம் ஜான் பாண்டியனும், பாஜகவுக்கான ஆதரவை அறிவித்துள்ளார்..
நன்றி: உண்மையிலேயே இந்த கூட்டணி விஷயத்தில் ஜான் பாண்டியன் நிறையவே குழப்பத்தில் இருந்ததாக தெரிகிறது. காரணம், தேவேந்திர குல வேளாளர் தொடர்பான கோரிக்கைகளை, அதிமுகவும், பாஜகவும் சேர்ந்தே நிறைவேற்றி தந்திருக்கின்றன.. இதைத்தான் ஒவ்வொருமுறையும், 2 கட்சிகளையுமே விட்டுக்கொடுக்காமல் ஜான்பாண்டியன் நன்றியுடன் நினைவுகூர்ந்து வந்தார்.
எனினும், அதிமுகவா? பாஜகவா? இதில் யாரை தேர்ந்தெடுக்க போகிறார்? என்ற ஆர்வம் எகிறியபடியே இருந்த நிலையில், இன்று பச்சைக்கொடி பாஜகவுக்கு காட்டப்பட்டுள்ளது. தாமரை சின்னத்திலேயே போட்டியிடுவதாகவும் அறிவித்திருக்கிறார்.
ஜான் பாண்டியன் மகள்: ஆனால், எந்த தொகுதியில் களமிறங்குகிறார்கள் என தெரியவில்லை. சாதகமான 5 தொகுதிகளை ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருப்பதால், அவைகளில் ஒன்றை பாஜக ஒதுக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அந்தவகையில், ஜான்பாண்டியன் மகள் வினோலின் நிவேதா தேர்தலில் போட்டியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருவதற்குள், கூட்டணியை முடிவு செய்து, கூட்டணி கட்சித் தலைவர்களை பிரதமரின் பொதுக்கூட்டத்தில் ஒன்றாக மேடை ஏற்றிட வேண்டும் என்று பாஜக பெரிதும் முயன்றது.
சபாஷ் பாஜக: இருந்தாலும், ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. ஓபிஎஸ் + தினகரன் + பாரிவேந்தர் + ஏசி சண்முகம் + ஜி கே வாசன் - என கிட்டத்தட்ட கூட்டணியை தயார் செய்துவிட்டது. அந்தவகையில், அதிமுகவைவிட ஒரு படி தமிழக பாஜக வேகம் எடுத்துள்ளது, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது..!!
-
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல்












Click it and Unblock the Notifications