கருகுதா" தாமரை" + உதிருமா "இலை".. கரெக்ட்டா அங்கேயே வர்றாரே.. அதைவிடுங்க.. கமலை தேடிய அந்த "விழிகள்"
சென்னை: கமல்ஹாசன் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக தெரிகிறது.. மநீம தொடர்பான சில முக்கிய தகவல்களும் இணையத்தில் வட்டமடித்து வருகின்றன.
கமலின் மக்கள் நீதி மய்யம் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியபடியே உள்ளது.. ஆனால், போதுமான வெற்றியை இன்னும் அக்கட்சி தக்கவைக்கவில்லை.

கமலின் ஆதரவு: கடந்த எம்பி தேர்தலில் கிடைத்த எழுச்சி இந்த முறை மறுபடியும் கமலுக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.. காங்கிரசுக்கு கமல் ஆதரவு தந்ததுடன், இடைத்தேர்தலில் நேரடி பிரச்சாரத்தையும் கமல் மேற்கொண்டபோது, அது கூட்டணிக்கான அச்சாரமாக பார்க்கப்பட்டது..
அதுமட்டுமல்ல, கொள்கை ரீதியாக பாஜகவுடன் கூட்டு வைக்க முடியாது என்பதால்தான் காங்கிரசுடன் கை கோர்க்க கமல் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
கமல்ஹாசன்: சில நாட்களுக்கு முன்பு கோவையில் நடந்த கட்சி கூட்டத்தில், கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய போவதாக கூறியிருந்தார்.. அதாவது, கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தியே விரும்பியதாக தெரிகிறது.. இந்த விருப்பத்தை கமலிடம் சொல்லவும், அதற்கு கமலும் உடனே ஓகே சொல்லியிருக்கிறார்.
ஆனால், காங்கிரசை ஆதரித்து பிரச்சாரம் செய்ய ராகுலிடம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், கமல். பிரச்சாரம் செய்ய கர்நாடகாவுக்கு போகவேயில்லை.. பிரச்சாரமே முடியப்போகிறது என்பதால், கடந்த 5,6,7 ஆகிய தேதிகளில் கமலிடம் பேச தொடர் முயற்சிகளை எடுத்திருக்கிறார் ராகுல்காந்தி... ஆனால், கமலின் தொடர்பு கிடைக்கவே இல்லையாம்.. அகில இந்திய காங்கிரசின் செய்தி தொடர்பாளர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் என பலரும் கமலை தொடர்புகொள்ள முயற்சி எடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் தொடர்பு கிடைக்கவில்லை.
கமல் பிரச்சாரம்: இதனை ராகுலிடம் காங்கிரஸார் சொல்லி உள்ளனர்.. அதற்கு ராகுல், "அவரை விட்டுவிடுங்கள், இனி அவர் வரத்தேவையில்லை. யாரும் முயற்சிக்காதீர்கள்" என்று சொல்லிவிட்டாராம். கமல் ஏன் பிரச்சரத்துக்கு கர்நாடகா செல்லவில்லை என தெரியவில்லை. ஆனால், அவர் வெளிநாடு சென்றதை காரணம் காட்டினார்கள்.
இப்போது சென்னை திரும்பிய நிலையில் கமல், அடுத்தக்கட்ட தேர்தல் நடவடிக்கையில் இறங்கிவிட்டாராம்.. தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கமலை பொறுத்தவரை சினிமாவில், தான் செய்ய நினைப்பதை செய்து முடிப்பவர்என்பதால், வரும் எம்பி தேர்தலிலும் கட்டாயம் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
கணிசமான ஓட்டு: அந்தவகையில் முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.. அதன்படி, தென் சென்னை லோக்சபா தொகுதியில், உறுப்பினர்கள் சேர்த்தல், பூத் கமிட்டி அமைத்தல் போன்ற பணிகள் முழுவீச்சில் நடக்கிறதாம்.. கடந்த லோக்சபா தேர்தலில் மய்யம் சார்பில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ரங்கராஜன், 1.20 லட்சம் ஓட்டுக்களை பெற்றிருந்தார். அதேபோல சட்டசபை தேர்தலிலும், கணிசமான ஓட்டுக்களை பெற்றுள்ளது.. அதனால், தென்சென்னை தொகுதியை குறிவைத்து, கமலின் தேர்தல் வேலை நடப்பதாக சொல்கிறார்கள்.
இந்த தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை, தென் சென்னை மக்களவைத் தொகுதி பெரும்பாலும் திமுக, காங்கிரஸ் வசமே அதிக முறை இருந்துள்ளது.. வேளச்சேரி, தியாகராய நகர், மயிலாப்பூர் பகுதிகளில் பிராமணர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இது தவிர, முதலியார், மீனவர்கள், தலித்துகள் எனப் பலதரப்பட்ட மக்களையும் உள்ளடக்கியது தென் சென்னை தொகுதி..
யாருடைய வாக்குகள்: அதேபோல், அரசு ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் என்று படித்தவர்கள் எண்ணிக்கையும் இந்த தொகுதியில்தான் அதிகம் உள்ளனர்.. அதனால், வாக்குகள் ஒரே இடத்தில் குவியும் என்று எதிர்பார்க்க முடியாது.. மேலும், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு சமமான வாக்கு வங்கி இந்தத் தொகுதியில் உள்ளது.. அந்தவகையில், கமல் இங்கு போட்டியிட நேர்ந்தால், யாருடைய வாக்குகளை கமல் பிரிக்க போகிறார் என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது..!
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications