கொடைக்கானல் டூ வயநாடு.. அண்ணாமலை எங்கே..தேர்தல் முடிஞ்சதும் சத்தமே காணோமே.. ஓ இதுதான் மேட்டரா?
சென்னை; தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில்.. முன்பெல்லாம் அடிக்கடி செய்தியாளர்களை சந்திக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை இப்போது பெரிதாக வெளியே வராமல் அமைதியாக இருக்கிறார்.
லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் தமிழ்நாட்டில் தலைவர்கள் பலரும் .. சுற்றுலா மூடில் இருக்கின்றனர். ஒன்றரை மாதம் தீவிர பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது கட்சி தலைவர்கள் பலரும் ஓய்வு எடுத்து வருகின்றனர்.

உதாரணமாக எடப்பாடி கேரளாவில் உள்ள வயநாட்டிற்கு சென்றுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளதாம். தனக்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக அவர் வயநாட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கே இருக்கும் 5 ஸ்டார் ரிசார்ட் ஒன்றில் அவர் தங்கி உள்ளார்.
அங்கே அவர் தனது கால் வலிக்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதோடு அங்கேயே அவர் ஓய்வும் எடுத்து வருகிறார். அவருடன் அவரின் குடும்பத்தினர் மட்டும் உள்ளனர்.
ஸ்டாலின் கொடைக்கானல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக கொடைக்கானல் சென்றுள்ளார். தேர்தல் பணிகள் காரணமாக தொடர்ந்து களத்தில் இருந்தவர் தற்போது ஓய்வு எடுப்பதற்காக கொடைக்கானல் சென்றுள்ளார்.
கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பிளான் மாற்றம்; முதலில் கோடை விடுமுறையை கழிக்க மாலத்தீவுக்குச் செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார். தேர்தல் முடிந்த நிலையில், திமுக அமைச்சர்கள்,வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என பலரையும் சந்தித்தார் ஸ்டாலின்.
கடந்த 5 நாட்களாக இந்த சந்திப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் கோடை வெப்பத்திலிருந்து சற்று விடுபடுவதற்காகவும், பிஸியான செட்யூல்டிலிருந்து ஓய்வு எடுக்கவும் மாலத்தீவுக்கு குடும்பத்தினருடன் சென்று வர வேண்டுமென ஸ்டாலினிடம் உதயநிதி பேசியிருக்கிறார்.
குடும்பத்தினரும் அதனை விரும்பியுள்ளனர். இதனை அடுத்து திங்கள் கிழமை கிளம்பி மே மாதம் 5 - ந்தேதி சென்னை திரும்புவதற்கேற்ப ஸ்டாலின் குடும்பத்தினர் ப்ரோக்ராம் போட்டுள்ளனர். ஸ்டாலினும் இதற்கு சம்மதித்ததாகத் தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின், 1 வாரம் மாலத்தீவு செல்கிறார் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.
பிளான் மாற்றம்: ஆனால், இதற்கு ஆரம்பத்தில் ஸ்டாலின் ஒப்புக்கொண்டாலும், அடுத்தடுத்த ஆலோசனையில் மாலத்தீவு ப்ரோக்ராம் வேண்டாம் என சொல்லி விட்டார். அரசியல் பிரச்சனைகள் காரணமாக இந்த முடிவை ஸ்டாலின் எடுத்திருக்கிறார். இதனையடுத்தே கொடைக்கானல் சென்று ஒரு வாரம் ஓய்வெடுத்து வரலாம் என திட்டமிடப்பட்டு முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலை எங்கே: எதிர்க்கட்சி தலைவர் வயநாடு.. முதல்வர் கொடைக்கானல் சென்றுள்ள நிலையில் முன்பெல்லாம் அடிக்கடி செய்தியாளர்களை சந்திக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை இப்போது பெரிதாக வெளியே வராமல் அமைதியாக இருக்கிறார். அண்ணாமலை எங்கே சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவர் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். கர்நாடகா, கேரளாவில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டார். இப்போது கர்நாடகாவில் ஓய்வு எடுத்துவருகிறார் . அங்கேயே இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை அடுத்த வாரம் தொடக்கத்தில் தொடங்குவார். அதுவரை ஓய்வில் இருக்க முடிவு செய்துள்ளாராம்.
லோக்சபா தேர்தலுக்கு பின் தமிழக பாஜகவில் மாற்றங்கள் வரலாம். தேசிய அளவிலும் பாஜகவில் மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள். இந்த நிலையில்தான் அண்ணாமலை கர்நாடகாவில் டென்ட் அடித்துள்ளார் என்கிறார்கள்.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications