+66,000.. "டோட்டலா காலி" பண்ண எடப்பாடி.. வேற லெவல் ஸ்டாலின்.. குறுக்கே வந்த கமல்: ரவீந்திரன் துரைசாமி
பண்ருட்டி ராமச்சந்திரன் எடப்பாடியை விமர்சித்தது குறித்து ரவீந்திரன் துரைசாமி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்
சென்னை: அனைவரையும் ஒன்றிணைக்கக்கூடிய அரசியலை ஸ்டாலின் செய்து வருகிறார் என்றால், அனைவரின் அரசியலையும் காலி செய்யக்கூடிய செயல்களைதான் எடப்பாடி பழனிசாமி செய்துவருவதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு இடைதேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆனால், இதுவே எங்களுக்கு வெற்றிதான் என்று பூரித்து சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி..
350 கோடி செலவு செய்து போலியான வெற்றியை திமுக பெற்றுள்ளது. இதை எல்லாம் தாண்டி 45 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம். இது தோல்விகரமான வெற்றி தான். நாங்கள் தான் உண்மையாக வெற்றியாளர்களே தவிர, திமுக கிடையாது" என்று சொல்லி வருகிறார் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்.

பண்ருட்டியார்
ஆனால், ஓபிஎஸ் தரப்பில் உள்ள மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனோ, இடைத்தேர்தல் தோல்விக்கு எடப்பாடியின் ஆணவ போக்கே காரணம்... எடப்பாடி என்ற தனிநபரை தூக்கி எறிந்தால் தான் அதிமுக வளர முடியும். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து அதிமுக தோல்வி. இரட்டை இலை சின்னம் கிடைத்தால் போதும் என்று எடப்பாடி எடுக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தோம் என்று கொந்தளித்து பேட்டி தந்திருந்தார். பண்ருட்டி ராமச்சந்திரனின் இந்த கருத்து குறித்து, தமிழகத்தின் மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக பேட்டி கண்டோம். அவர் இதுகுறித்து கூறிய கருத்துக்கள் இதுதான்:

தனிஆவர்த்தனம்
"எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸூம் எந்த காலத்திலும் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள்.. இருவருமே பராக்கிரமசாலிகள்.. இருவருமே களத்தில் நிற்பார்கள்.. 2026ம் ஆண்டு தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதில், ஸ்டாலினுக்கு எதிராக 2 பேருக்குமே போட்டி ஏற்படும்.. எடப்பாடி பழனிசாமிக்கு 62 எம்எல்ஏக்கள் தற்போது ஆதரவாக உள்ளனர்.. 90 சதவீதம் கட்சியின் ஆதரவும் இருக்கிறது.. அதற்காக ஓபிஎஸ்ஸை குறைத்து மதிப்பிட முடியாது. இவர்கள் 2 பேரும் சேர்ந்துதான், 100 சதவீதம் போட்டியாக திமுகவுக்கு இருக்க முடியும்.. எடப்பாடி என்ற தனிநபரை தூக்கி எறிந்தால்தான் அதிமுக வளர முடியும் என்று பண்ருட்டி சொல்வது சரிவராது.

வெள்ளாள கவுண்டர்கள்
காரணம் எடப்பாடிக்கு 15 சதவீதம் ஓட்டுக்கள் இருக்கிறது. அதை விட்டுக்கொடுக்க யாருக்கு மனசு வரும்? அன்று ஜானகி அம்மா, 10 சதவீத ஓட்டுக்களை விட்டுத்தந்தது வேற கணக்கு.. அது விதிவிலக்கு.. எனவே எடப்பாடிக்கு 15 சதவீதம் ஓட்டுக்கள் என்பது கையில் வரும்.. எனவே அவரையும் உள்ளடக்கிதான் ஸ்டாலினின் எதிர்ப்பு அணியை இங்கு உருவாக்க முடியும்.. வெள்ளாள கவுண்டர்கள் 12 சதவீதம் அந்த தொகுதியில் இருந்திருக்கிறார்கள்.. அவர்களின் ஓட்டுக்கள்தான் இப்போது துணை புரிந்திருக்கிறது.. ஆனால், ஒட்டுமொத்த தமிழகத்தில்தான், ஒரு தலைவருக்குரிய செல்வாக்கை பார்க்க வேண்டும்.. இதை இப்போது திருமாவளவனும் புரிந்து கொண்டுவிட்டார்.

கருணாநிதி தவறு
நேற்றுவரை எடப்பாடி பழனிசாமியை, ஒரு ஆப்ஷனாக கருதி நிலையில், இன்று ஈரோடு ரிசல்ட்டையும் பார்த்துவிட்டு, திமுக - விசிக கூட்டணிதான் உறுதி என்கிறார்.. அதேபோல, காங்கிரசும் திமுகவுடன் இப்போது மேலும் ஐக்கியமாகிவிட்டது.. அதற்கேற்றவாறு ஸ்டாலினும் தன்னுடைய கூட்டணியை சரியாக வைத்துள்ளார்.. ஜோதிபாசு போலவே, அணியை சரியாக வகுத்துள்ளார்.. மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்று, அவர்கள் செய்த தவறுகளை செய்யாமல், புது அரசியலை செய்து வருகிறார்.. கமலை கட்சிக்குள் வரவேற்றதையும் அப்படித்தான் பார்க்க வேண்டி உள்ளது.

பாமக அன்புமணி
கடந்த காலங்களில் எதிர்த்து பேசியதை எல்லா மனதில் வைத்து கொள்ளாமல், 3 சதவீத ஓட்டுக்கள் இருக்கிறது, இப்போது நம்மிடம் வர நினைக்கிறார் என்றதுமே அவரை வரவேற்கிறார் ஸ்டாலின்.. ஆனால், இதுவே கருணாநிதியாக இருந்திருந்தால், "நீ அன்னைக்கு அப்படியே பேசினியே, இப்படி பேசினியே என்று சொல்லியிருப்பார்.. ஆனால் அப்படியெல்லாம் ஸ்டாலின் பேசவில்லை. அவ்வளவு ஏன், பாமக தலைவர் அன்புமணிக்கும் மரியாதை தந்து அரசியல் செய்து வருகிறார்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்படி இல்லை.. தோற்றுப்போன அணியில் அரசியல் செய்கிறார்.

தூள் தூளாகணும்
ராமதாஸ் அரசியல் காலியாகணும்.. பாஜக காலியாகணும்.. ஓபிஎஸ் அரசியல் காலியாகணும்.. தினகரன் உள்ளே வரக்கூடாது.. இப்படி யாருமே வரக்கூடாது என்று நினைத்து, அனைவரையும் காலி செய்யக்கூடிய அரசியலைதான் செய்து கொண்டிருக்கிறார்.. மற்றபடி கூடுதலாக 4, 5 சீட் வாங்க வேண்டும் என்ற நினைப்பே அவருக்கு இல்லை.. பிரதமர் மோடிக்கும் சீட் வரவேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு கிடையாது. இப்போதைக்கு அவருடைய எண்ணமெல்லாம் கிறிஸ்தவர், முஸ்லிம்களின் வாக்குகளை எப்படி வாங்குவது என்ற கவலைதான் உள்ளதே தவிர, 2024 பற்றி கவலையேப்படவில்லை என்றார் ரவீந்திரன் துரைசாமி.












Click it and Unblock the Notifications