கசிந்த "ராமாவரம் தோட்டத்து" ரகசியம்.. பீனிக்ஸ் மாலில் பூரித்த சசிகலா.. பின்னணி இதுதான்!
ராமாவரம் தோட்டத்தில் பிறந்தநாளை சசிகலா கொண்டாடவில்லையாமே
சென்னை: எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இந்த இருவராலும் அதிமுகவில் பரபரப்புகளும், டென்களும் பற்றிக் கொண்டு எரிய, சசிகலா மட்டும் ஜாலியாக இருந்துள்ளார்.. எங்கே? எப்போ? ஏன் தெரியுமா? இது சம்பந்தமான ஒரு தகவல் கிளம்பி வலம் வருகிறது.
Recommended Video
கடந்த ஜனவரி மாதம் நடந்த ஒரு சம்பவத்தை, இங்கு ஒருமுறை நினைவுகூர வேண்டி உள்ளது.. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து, படங்களை அலங்கரித்து வைத்து மரியாதையும் செலுத்தினர் அதிமுகவினர்..
அப்போது, சசிகலா என்ன செய்ய போகிறார்? என்ற ஆர்வம் அதிமுக உட்பட அனைத்து தரப்பிலும் எழுந்தது.. நேராக, தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் இருக்கும் எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்தார் சசிகலா.

ஹைலைட்
அப்போதுதான் ஒரு ஹைலைட் நடந்தது.. எம்ஜிஆர் நினைவில்லத்தில் "அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா" என கல்வெட்டு பொறிக்கப்பட்டது.. தி.நகரில் உள்ள நினைவு இல்லத்தில் பொன்விழா ஆண்டு கொடியேற்றம் நிகழ்வையொட்டி கல்வெட்டு பொறிக்கப்பட்டது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.. அதன்பிறகு, நினைவு இல்லத்தில் உள்ள எம்ஜிஆர் ரூமுக்குள் சசிகலா நுழைந்துள்ளார்.. அவரது ஆதரவாளர்கள் நீலாங்கரை முனுசாமி, தி.நகர் வைத்தியநாதன், எம்ஜிஆரின் பேரன் குமார் ராஜேந்திரன் ஆகியோர்தான் சசிகலாவை அந்த ரூமுக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்..

சேரில் சசிகலா
அங்கு எம்ஜிஆர் உட்காரும் நாற்காலியில் சசிகலாவை உட்காரும்படி சொல்லினர்.. அதற்கு சசிகலாவோ, ''தலைவர் உட்கார்ந்த சேரில் நான் உட்கார விரும்பவில்லை, வேற சேர் கொண்டு வாங்க" என்றார். ஆனாலும், ஆதரவாளர்கள் வற்புறுத்தல் தாங்காமல், எம்ஜிஆரின் சேரில் சசிகலா உட்கார்ந்துவிட்டார் சசிகலா., 30 நிமிடம், எடப்பாடிக்கு எதிரான முக்கிய ஆலோசனையும் அங்கு நடந்துள்ளதாக தகவல்கள் கசிந்தன.. இதைக் கேள்விப்பட்டு, எம்ஜிஆர் சேரில் சசிகலாவா? என்று அதிமுகவில் சிலர் உணர்ச்சிவசப்பட்டதாகவும் கூறப்பட்டது..

ராமாவரம் தோட்டம்
இப்போது, விஷயம் என்னவென்றால், எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டம் பற்றிய செய்தி ஒன்று சசிகலா வட்டமடித்து கொண்டிருக்கிறது. சசிகலாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அவரது ஆதரவாளர்களால் கடந்த 18-ந்தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.. ஒவ்வொரு ஆண்டும் சசிகலாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் இருக்கும் காதுகேளாத-வாய்ப்பேச இயலாத பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறுசுவை உணவும் நல உதவிகளும் வழங்கி கொண்டாடுபவர் அதிமுகவின் தென்சென்னை மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் என்.வைத்தியநாதன்.

தோட்டம்
சசிகலா சிறையில் இருந்த போதும் அதே கொண்டாட்டங்களை நடத்தியவர். சசிகலாவின் தீவிர விசுவாசி. இந்தாண்டும் அதேபோல சசிகலாவின் பிறந்தநாளை கொண்டாடினார் அவர். இவரைப்போலவே, சசிகலா விசுவாசிகள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை ஏழைக்குழந்தைகளுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் வழங்கினர். இந்த சம்பவம் அதிமுகவில் உற்று கவனிக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது பிறந்த நாளின் போது எம்.ஜி.ஆர். தோட்டத்தில் உள்ள காதுகேளாத வாய்ப்பேச இயலாத ஏழைக் குழந்தைகளுடன் கொண்டாட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விசுவாசிகளும், அதிமுகவின் சசிகலா ஆதரவாளர்களும் விரும்பி, சசிகலாவை அழைத்துள்ளனர்.

ஃபீனிக்ஸ் மால்
ஆனால், சசிகலா கலந்து கொள்ள மறுத்துவிட்டார். ஒருவேளை, அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் என நினைத்து அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவரது ஆதரவாளர்கள். ஆனால், சசிகலாவோ, சென்னை வேளச்சேரியில் உள்ள பிரம்மாண்டமான சொகுசு மாளிகையான ஃபீனிக்ஸ் மாலில் தனது நெருங்கிய குடும்ப உறவுகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். ஃபீனிக்ஸ் மாலில் சசிகலா பிறந்தநாளை கொண்டாடியதை அறிந்த அவரது விசுவாசிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

காஸ்ட்லி மால்
ஏழைக் குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடாமல் அதுவும் எம்.ஜி.ஆர். தோட்டத்திலுள்ள குழந்தைகளுடன் கொண்டாடாமல் பணக்காரர்களின் உல்லாச மாளிகையான மாலுக்கு தனது குடும்ப உறவுகளுடன் சென்று கொண்டாடியிருக்கிறாரே என்று ஏகத்துக்கும் சசிகலா மீது வருத்தமடைந்துள்ளனர்.. ஆனால், இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து, சசிகலா தரப்பிலோ வேறு ஒரு காரணம் சொல்லப்படுகிறது..

ராமாவரம் + தோட்டம்
அதாவது, "அதிமுகவில் நடக்கும் உள்குழப்பங்களுக்கும் மோதல்களுக்கும் உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பை கொடுத்துள்ளது. அது எடப்பாடிக்கு எதிராக இருக்கிறது. பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடியின் சர்வாதிகாரத்தனத்துக்கு தற்காலிக முற்றுப்புள்ளி கிடைத்ததே சசிகலாவுக்கு ஏக மகிழ்ச்சி... அதனால்தான், குடும்பத்தினருடன் தனது பிறந்தநாளை பகிர்ந்துகொண்டார்" என்கிறார்கள்... அதேசமயம், சின்னம்மா என்று சொல்லி ஓபிஎஸ், சசிகலாவுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதும் இங்கு கவனிக்கத்தக்கது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications