வீரப்பன் காடு.. வங்கக்கடல்.. ஏற்காடு மலை.. எங்கே பதுங்கி இருக்கிறார் தவெக புஸ்ஸி ஆனந்த்? பின்னணி
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எங்கே பதுங்கி இருக்கிறார் என்ற கேள்வி கடுமையாக நிலவி வருகிறது. இவரின் இருப்பிடம் தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் உலவி வருகின்றன.
1. கரூர் சம்பவம் நடந்த அன்று திருச்சி பைபாஸில் அவரின் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. அதன்பின் அவர் போனை ஆன் செய்யவில்லை. அப்படியே தலைமறைவாகிவிட்டார்.

2. அங்கிருந்து அவர் ஏற்காடு சென்றதாக நிறைய தகவல்கள் கூறுகின்றன. அங்கே ரிசார்ட் ஒன்றில் அவர் பதுங்கி உள்ளதாக கூறப்பட்டது.
3. அதன்பின் அவர் வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் காட்டிற்கு ஓடிவிட்டார் என்று ஒரு பக்கம் கூறப்பட்டது. அவர் வங்கக்கடலில் கப்பல் ஒன்றில் பதுங்கி இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.
4. இப்படி மாறி மாறி அவரின் இருப்பிடம் தொடர்பாக நிறைய தகவல்கள் பரவின. ஆனால் அவை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
5. இவரின் இருப்பிடம் தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் உலவி வருகின்றன. புஸ்ஸி ஆனந்த் பெரும்பாலும் மதுரை அல்லது பெங்களூரில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
6. அவரின் இருப்பிடம் போலீசுக்கு தெரிந்து இருக்கலாம். ஆனால் அவரை கைது செய்ய சரியான சூழ்நிலை அமைய போலீஸ் காத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
7. போலீஸ் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அவர் பதுங்க முடியாது. அவரை கைது செய்ய போலீஸ் முக்கிய தருணம் வர வேண்டும் என்று காத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச் நீதிபதி எம். ஜோதிராமன் கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்தார்.. இந்த வழக்கில் நீதிபதிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர். அதில், ஒரு நிகழ்ச்சியை நடத்திய நபராக உங்களுக்கு இந்த விவாகரத்திற்கு பொறுப்பு இல்லையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழக வெற்றிக் கழகத்தை கண்டித்த நீதிபதிகள், உங்கள் மீது தவறே இல்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் தானே நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தீர்கள். உங்கள் மீது தவறு இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்.. நான் மக்கள் பக்கம் இருந்தே நடவடிக்கை எடுக்க முடியும். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் இருந்தே நடவடிக்கை எடுக்க முடியும் என்று நீதிபதிகள் கூறினர்.
புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம்
இதற்கு புஸ்ஸி ஆனந்த் தரப்பு.. இதில் என் மீது ஆக்சன் எடுக்க வேண்டியது ஏன்? நிகழ்ச்சியை நான் ஒருங்கிணைக்கவில்லை. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன். அவரை ஏற்கனவே கைது செய்துவிட்டனர். அவர் மீது நான் குற்றஞ்சாட்டவில்லை. அவரை கைது செய்துவிட்டனர். அப்படி இருக்க என் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
எங்கள் சொந்தக் கட்சியினரைக் கொல்லும் எண்ணம் இல்லை. ஒரு விபத்தை குற்றமற்ற கொலை என்று கூற முடியாது.
காவல்துறை போதுமான பாதுகாப்பை வழங்கத் தவறியதுதான் சிக்கலுக்கு காரணம். நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ஏற்பாட்டாளர்கள் காவல்துறையிடம் விண்ணப்பம் செய்தனர். ஆனால், அந்த இடம் மனுதாரர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை, அது போலீஸ் எங்களுக்கு வழங்கிய இடம். இதற்கு பின் ஒரு தீய நோக்கம் இருப்பதாக நினைக்கிறோம். கூட்டம் அதிகமான போது கூட்டத்திற்குள் சில குண்டர்கள் நுழைந்தனர். அவர்கள் கைகளில் ஆயுதங்களை வைத்து இருந்ததாக மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். திட்டமிட்டு இதில் அசம்பாவிதம் செய்துள்ளனர், என்று வாதம் வைத்தனர். இதையடுத்து புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த முன் ஜாமீன் தள்ளுபடி ஆன நிலையில் டெல்லியில் இன்று அவர் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications