"உதயநிதி.. இப்போ.. இங்கே.. உடனே.. வந்தாகணும்".. அடம் பிடித்து அழுத பெண்.. மிரண்டு போன போலீஸ்
உதயநிதி ஸ்டாலினை சந்திப்பதற்காக பெண் தற்கொலை மிரட்டல் விடுத்தார்
சென்னை: "உதயநிதி ஸ்டாலின் எங்கே? அவரை கூட்டிட்டு வாங்க.. அவரை நான் பார்த்தே ஆகணும்.. இல்லாவிட்டால் கீழே இறங்கி வர மாட்டேன்" என்று செல்போன் டவரில் ஏறி நின்று கொண்டு அடம்பிடித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
Recommended Video
நாளுக்கு நாள் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் மக்களை ஈர்த்து வருகின்றன.. கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன், இந்த இரண்டை தவிர வேறு என்ன தகுதி இவரிடம் இருக்கிறது? என்று, தான் போகிற பிரச்சாரங்களில் எல்லாம் கேள்வி எழுப்பியவர்தான் விந்தியா.
விந்தியா மட்டுமில்லை.. எல்லா எதிர்க்கட்சிகளுமே உதயநிதியை விமர்சித்தது கொஞ்சம் நஞ்சமல்ல.. ஆனால், அயராத செயல்பாடுகளால், அதிரடி நடவடிக்கைகளால், தீராத உழைப்பால், இன்று தனக்கான ஒரு பாதையை தானே விரித்து வைத்து நடை போட்டு வருகிறார் உதயநிதி.

பாசம்
இதனால், சொந்த தொகுதியில் மட்டுமல்லாமல், மொத்த அரசியல் களத்திலும் உதயநிதியின் அரசியல் மவுசு கூடுகிறது.. அதேசமயம் பெண்களின் மத்தியிலும் உதயநிதிக்கான பாசமும், மரியாதையும் அதிகரித்தபடியே வருகிறது.. எங்கு சென்றாலும் தன் வீட்டு பிள்ளை போலவே உதயநிதியை பாவித்து, தங்கள் பகுதியின் குறைகளை சம்பந்தப்பட்ட பெண்களே சொல்லி வருவதும் நிகழ்ந்து வருகிறது.

உதயநிதி
இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு இளம் பெண் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்.. உதயநிதியை பார்த்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று பிடிவாதம் பிடிக்க தொடங்கினார்.. அந்த பெண்ணின் பெயர் ராஜிலா.. சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர்.. கணவர் பெயர் ராஜேஷ்... ஆனால், இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை போல.. அதனால், கணவனை விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார் ராஜிலா.. இத்தனை நாளும் கன்னியாகுமரியில்தான் வசித்து வந்தார் ராஜிலா..

புகார்
கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் திரும்பவும் திருவேற்காடு வந்து, கணவனிடம் பணத்தையும் நகையையும் தனக்கு வழங்கும்படி கேட்டுள்ளார்.. இதனால் மறுபடியும் ரெண்டு பேருக்கும் சண்டை வந்துவிட்டது.. எனவே, பூவிருந்தவல்லி மகளிர் போலீசாரிடம் இது சம்பந்தமாக புகாரளிக்க வந்தார் ராஜிலா.. ஆனால், அந்த புகாரை போலீசார் பெறுவதற்கு காலதாமதம் செய்ததாக தெரிகிறது.. தன்னுடைய புகாரை உடனே பெற்று கொள்ளாததால், ராஜிலா அப்செட் ஆகிவிட்டார்..!

செல்போன் டவர்
இதனால், அந்த ஸ்டேஷனுக்கு எதிரே இருந்த ஒரு செல்போன் டவரில் கடகடவென ஏற ஆரம்பித்தார்.. அந்த டவர் 200 அடி உயரத்துக்கு உள்ளது.. உச்சிக்கு சென்றவர், திடீரென தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார்.. இதை பார்த்த அந்த பகுதி மக்கள், போலீசுக்கு தகவல் சொல்லவும், போலீசாரும் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனர்.. டவரின் உச்சியில் இருந்த ராஜிலாவிடம், கீழே இறங்குமாறு கேட்டுக் கொண்டனர்..

மன்றாடிய போலீஸ்
ஆனால், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வந்தால்தான் கீழே இறங்குவேன் என்று சொல்ல ஆரம்பித்தார்.. "தயவுசெய்து கீழே இறங்குங்க.. உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கறோம்.. எங்களுக்கு கொஞ்சம் மரியாதை குடுங்க ராஜிலா" என்று போலீஸ்காரர்கள் மைக்கில் கேட்டுக் கொண்டனர்.. ஆனாலும் ராஜிலா, "உதயநிதி எங்கே? அவர் வரட்டும்" என்று பதிலளித்தார்..

சமாதானம்
இதையடுத்து, பூவிருந்தவல்லி நகர திமுக செயலாளர் ரவிக்குமார் அங்கே வந்தார்.. ராஜிலாவிடம், "என்னை உதயநிதி ஸ்டாலின்தான் இங்கே அனுப்பி வெச்சாரு.. உங்க கிட்ட அவர் செல்போன் வீடியோவில் பேச ரெடியா இருக்கிறார்.. கீழே இறங்கி வாங்க' என்று அழைத்தார்.. இதன்பிறகே ராஜிலா இறங்கி வந்தார்.. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி, அட்வைஸ் தந்து ஒருவழியாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
-
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்! -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட்












Click it and Unblock the Notifications