இயேசு மரித்த பின்....அந்த 3 நாள் எங்கே இருந்தார்?
சென்னை: இயேசு மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுவதற்கு முன், அந்த 3 நாட்கள் எங்கே இருந்தார் என்ற கேள்வி அநேகருக்கு உண்டு? சத்திய வேதாகமத்தில் (1 பேதுரு 3: 18,19) ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார். அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார், என்று கூறப்படுகிறது. யார் அந்த காவலிலுள்ள ஆவிகள்? பழைய ஏற்பாட்டில் உள்ள அவிசுவாசிகள், மரித்த பின்பு அங்கே சென்று வேதனை அனுபவிக்கின்ற இடமாகும்.

காவலிலுள்ள ஆவிகளுக்குப் என்ன பிரசங்கித்தார்?
இந்த காவலில் வைக்கப்பட்ட ஆவிகள் யார் என்றால், (1 பேதுரு 3:20) அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அநேக ஜனங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல், தங்கள் பாவத்தில் இருந்து மனம் திரும்பாமல் மரித்து போனதான ஆத்துமாக்கள். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் இயேசு சென்று சுவிசேஷம் மற்றும் சிலுவையின் வெற்றி சிறந்ததை பிரசங்கித்தார் என்பதை (1 பேதுரு 3:19) என்ற வசனத்தில் பார்க்கலாம்.
மனுஷன் மரித்த பின், அவனுடைய ஆவி எங்கே?
மனுஷன் பூமியில் வாழ்ந்து மரித்த பின், அவனுடைய ஆவி எங்கே என்ற கேள்விக்கு, (எபிரேயர் 9:27) அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, மற்றொரு தருணம் கொடுக்கப்படுவதில்லை என்பதை இந்த வேதவாக்கியம் தெளிவாக உறுதிப்படுத்துகிறது. (பிரசங்கி 12:7) இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை" என்று எழுதப்பட்டு இருக்கிறதே, ஆதலால் இக்காலத்தில் நமக்கோ அநேக கிறிஸ்துவின் சுவிசேஷங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. மனிதன் உயிரோடிருக்கும் போதே, தன்னை படைத்தவரை ஏற்றுக்கொண்டு, வாழ்வின் முடிவில் நம்முடைய ஆவி தன்னைத் தந்த தேவனிடத்தில் சேரும் என்று நம்புவோமாக.

மரண பயம் நீங்குகிறது
(1 கொரிந்தியர் 15:55,56) மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். இயேசு கிறிஸ்து சிலுவையில் அவருடைய மரணத்தின் மூலம் மரணத்திற்கு அதிகாரியாக இருந்த பிசாசை வென்று, பாவத்தின் கூர், மற்றும் பாதாளத்தின் கூர் மீது மகிமையை வெற்றி சிறந்தார். நாம் அவரை விசுவாசிப்பதினால், நமக்கும் பாவத்தின் மேலும், மரணத்தின் மேலும் ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரம் சொல்லுவோமாக. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படுகிற கடைசி பயம் அந்த மரணமே, அவருடைய உயிர்தெழுதலின் நம்பிக்கையின் பலனாக நமக்கு வருகிற இந்த மரண பயத்தை புறம்பே தள்ளுவார். மரண பயமானது வேதனையுள்ளது, அதை மேற்கொள்ள நாம் அவர் மேல் பூரண அன்பை வைக்கும்போது, அந்த அன்பு மரண பயத்தைப் புறம்பே தள்ளும் என்று விசுவாசிப்போமாக!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications