தமிழ்நாட்டில் லூலூ மால் எங்கே கட்டப்படுகிறது தெரியுமா? சர்ப்ரைஸ் இடம்.. இது லிஸ்ட்லயே இல்லையே!
சென்னை: தமிழ்நாட்டில் லூலூ மால் கட்டப்படும் இடம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் விரைவில் இந்த மால் எங்கே கட்டப்படும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் சென்றார். துபாயில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்புகளை மேற்கொண்டார். துபாயில் நடந்த உலக அளவிலான எக்ஸ்போவில் தமிழ்நாட்டின் அரங்கை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது . தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு முதலீடுகள் இந்த பயணத்தின் போது ஈர்க்கப்பட்டது.

ஒப்பந்தம்: இந்த பயணத்தின் ஒரு கட்டமாக லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்தது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் உணவு பதனிடும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. கிட்டத்தட்ட 3000 ஆயிரம் பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் இரண்டு மால்களை அமைக்கவும் லூலூ நிறுவனம் முடிவு செய்ததாக கூறப்பட்டது.
லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைவர் யூசுப் அலி முஸலிமான் வீட்டில் அப்துல் காதருடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் சந்திப்பு நடத்தினார். இதை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கேரளா மற்றும் பெங்களூரில் மட்டுமே அதிகமாக கவனம் செலுத்தி வந்த அந்த நிறுவனம் தமிழ்நாடு பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளது. இவர்கள் ஏற்கனவே கேரளா, பெங்களூரில் மால்களை வைத்து உள்ளனர்.
எங்கே வருகிறது: தமிழ்நாட்டில் லுலு குழுமம், ஷாப்பிங் மால்கள், ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்றவற்றை அமைக்க ரூ.3,500 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளன.
அடுத்த வருடம் இவர்களின் மால் சென்னையில் திறக்கப்பட உள்ளது. அதே சமயம் ஹைப்பர் மால் கோவையில் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது.
லுலு குழுமம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உணவு பதப்படுத்துதல் மற்றும் தளவாட மையத்தையும் தமிழ்நாட்டில் அமைக்கும். நிறுவனத்தில் இருந்து உயர்மட்டக் குழு விரைவில் மாநிலத்திற்கு வருகை தந்து, இடங்கள் மற்றும் தொடர்புடைய ஆலோசனைகளை மேற்கொண்டு முதலீடு செய்யப்படும் இடத்தை இறுதி செய்யும்.
எங்கே மால் வருகிறது?: இந்த நிலையில்தான் பாஷ்யம் குழுமத்துடன் இணைந்து ECR இல் லூலூ மால் அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அங்கே இருக்கும் பிரார்த்தனா தியேட்டர் சமீபத்தில் பாஷ்யம் மூலம் வாங்கப்பட்டது.. அந்த திறந்தவெளி தியேட்டர் இடிக்கப்பட்டது. ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில், மகாபலிபுரம் செல்லும் வழியில், 29 ஏக்கர் நிலம், பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டு, இடிக்கும் பணி ஏற்கனவே துவங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ₹550 கோடிக்கு மேல் என்று ரியல் எஸ்டேட் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இங்குதான் அந்த மால் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இங்கே மிகப்பெரிய குடியிருப்பும் அமைக்கப்பட உள்ளது. அதன் அருகிலேயே லூலு மால் அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications