என்னாது தமிழக சட்டசபையில் அந்த இடத்தில் ஓபிஎஸ்ஸுக்கு இடமா?.. அப்போ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு?

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஓபிஎஸ்ஸுக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இருக்கை எங்கே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எந்த இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றைய தினம் தொடங்கியது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இன்றைய தினம் மகளிருக்கு ரூ 1000 நிதியுதவி அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் கேஸ் சிலிண்டருக்கான மானியங்கள் அறிவிக்கப்படுமா என்பது குறித்தும் அதிகளவு எதிர்பார்ப்பு எழுந்தது. இவை எல்லாவற்றையும் விட ஓபிஎஸ்ஸின் இருக்கை குறித்த எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.

ஒருங்கிணைப்பாளர்

ஒருங்கிணைப்பாளர்

அவர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த போது அவருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. அதன்படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பக்கத்தில் ஓபிஎஸ்ஸுக்கும் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சுகள் எழுந்த போது இதற்கு ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

பொதுக் குழு

பொதுக் குழு

அதிமுக பொதுக் குழுவை கூட்டி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை அதிமுகவிலிருந்தே நீக்கினார். இந்த நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை எடப்பாடி அறிவித்தார். ஆனாலும் அடுத்தடுத்த கூட்டத் தொடர்களில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கையே ஓபிஎஸ்ஸுக்கு ஒதுக்கப்பட்டது.

சபாநாயகரிடம் முறையீடு

சபாநாயகரிடம் முறையீடு

இதுகுறித்து பல முறை அதிமுகவினர் சபாநாயகர் அப்பாவுவிடம் வலியுறுத்தியும் இவ்வாறே தொடர்ந்தது. இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் பிறகு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மேலும் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு நேற்றைய தினம் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுச் செயலாளர் தேர்தலை நடத்திக் கொள்ளலாம். ஆனால் உயர்நீதிமன்றத்தை கேட்காமல் அதன் முடிவுகளை வெளியிடக் கூடாது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனினும் ஓபிஎஸ்ஸுக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அறிக்கையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி

அது போல் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் எம்எல்ஏவாக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு 177 ஆவது இடத்தில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் இரண்டாவது வரிசையில் இடம் அளிக்கப்பட்டது. நெஞ்சு வலி மற்றும் கொரோனா காரணமாக மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+