நீங்க புக் செய்த பஸ் எங்கே வரும்? கிளாம்பாக்கம் உட்பட சென்னையில் 16 இடங்கள்.. செக் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகிறீர்களா? சென்னையில் இருந்து இன்று நவம்பர் 5ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மொத்தம் எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகின்றன? எந்தெந்த இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும்? அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன? இதை பற்றியெல்லாம் சுருக்கமாக பார்ப்போம்..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊர்களுக்கு கஷ்டமேயில்லாமல் சென்று திரும்பும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தாம்பரம் - மானாமதுரை, சென்னை எழும்பூர் - திருச்சி, திருச்சி - தாம்பரம் இடையே நவம்பர் 6, 7, 9 ஆகிய தேதிகளில் சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kilambakkam Bus Boarding Diwali

15659 ஸ்பெஷல் பஸ்கள்

அதேபோல தீபாவளிக்காக ஸ்பெஷல் பஸ்களையும், தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று நவம்பர் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை வழக்கமான பஸ்களுடன் சேர்த்து மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும், நவம்பர் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை சென்னையில் இருந்து வழக்கமான பேருந்துகளுடன் சேர்த்து மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இவற்றில் 7,471 பேருந்துகள், பிரத்யேக சிறப்பு பேருந்துகளாகவும், 1,659 பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையிலான தனியார் பேருந்துகளாகவும் இயக்கப்படுகின்றன.

சென்னை திரும்ப விரிவான ஏற்பாடு

பண்டிகை முடிந்து மக்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்காக, நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 11,197 பேருந்துகள் இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருவான்மியூர், ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், சிறுசேரி, அடையாறு, பிராட்வே, எழும்பூர், அம்பத்தூர், தரமணி, தீவுத்திடல், கிண்டி, வேளச்சேரி, அசோக் பில்லர், பூந்தமல்லி மற்றும் சைதாப்பேட்டை உள்ளிட்ட 16 இடங்களில் இருந்து முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு நேரடிப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த ஏற்பாட்டின் மூலம் குறைந்தபட்சம் 6,000 பயணிகள் பயனடைவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், இதனால் சுமார் 2,000 வாகனங்களின் நடமாட்டம் குறைந்து பயண நேரம் கணிசமாக மிச்சமாகும்.

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளின்போது மக்கள் தெரிவித்த குறைகளை முழுமையாகப் பரிசீலித்து, இம்முறை உரிய தீர்வுகள் காணப்பட்டுள்ளன. பேருந்து நிலையங்களில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் சீரான விநியோகம் செய்யப்படுவதோடு, அனைத்து பேருந்துகளிலும் பயணிகளுக்கு ரூ.10 குடிநீர் பாட்டில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்காலிக மொபைல் டவர்கள்

பயணிகள் பயன்பாட்டிற்கான செல்போன் சிக்னல் குறைபாட்டைப் போக்க, நெரிசல் மிகுந்த இடங்களில் 2 - 3 தற்காலிக மொபைல் டவர்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது..

அதிகக் கட்டணம் வசூலித்த 10 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, பண்டிகைக்குப் பிறகு விதிமீறலில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கைகள் இருக்கும்.. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், குறைகள் மற்றும் புகார்கள் தெரிவிப்பதற்கும் முறையே, 94450 14436 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 149 என்ற எண்களை 24x7 மணி நேரமும் தொடர்பு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (கட்டணமில்லா எண்) மற்றும் 93848 08333 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் அளிக்கலாம். பயணிகளின் நலன் கருதி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது" என்றார் அமைச்சர்.

அமைச்சர் அறிவித்தபடி, இன்று முதல் வழக்கமான பஸ்களுடன் சேர்த்து மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது, பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+