அமெரிக்க இடைக்கால தேர்தலில் தோல்வி.. புலம்பி தள்ளிய டிரம்ப்! ஆனாலும் பிளான் பி வச்சிருக்காராம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியை தழுவியுள்ளது. தேர்தல் தோல்வி குறித்து பேசிய டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா தொடங்கிய போர்தான் இடைக்கால தேர்தல் தோல்விக்கு காரணமாம் என்பதை ஒப்புக்கொண்டார். அதே சமயம், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும், வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க இடைக்கால தேர்தலில் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு தோல்வியே மிஞ்சியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் டிரம்பின் குடியரசுக் கட்சி இழந்துள்ளது. அதாவது நம் நாட்டில் லோக்சபா, ராஜ்யசபா என்பது போலயே அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபை, செனட் சபைக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் செனட் சபையில் ஜனநாயக கட்சி 54 இடங்களிலும் அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சி 44 இடங்களி மட்டுமே தக்க வைத்துள்ளது. பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி 242 இடங்களில் வென்றுள்ளது. குடியரசுக்கட்சி 145 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இரு அவைகளிலும் டிரம்பின் குடியர்சுக் கட்சிக்கு தோல்வி மிஞ்சியுள்ள நிலையில், தோல்விக்கு காரணம் ஈரான் போர்தான் என்று டிர்ம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய டிரம்பிடம், ஈரான் மீது அமெரிக்கா தொடங்கிய போர்தான் இடைக்கால தேர்தல் தோல்விக்கு காரணமா? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த டிரம்ப், "பெரும்பாலும் அது உண்மைதான்" என்றார். தொடர்ந்து பேசிய டிரம்ப் கூறியதாவது:- ஈரான் போர் காரணமாக குறுகிய காலத்திற்கு பெட்ரோல் விலை சற்று உயர்ந்தது. எனவே, தேர்தல் தோல்விக்கு இதுவும் பெருமளவில் காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன்.
இருந்தாலும் மீண்டும் அதேபோல நடவடிக்கையை எடுக்க வேண்டியிருக்கும்" என்றார். ஈரான் மீது தாக்குத நடத்துவதை நிறுத்த போவது இல்லை என்பதையே டிரம்ப் இவ்வாறு குறிப்பிட்டதாக தெரிகிறது. தொடர்ந்து பேசிய டிரம்ப், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதித்தால், இப்போது நீங்கள் காணும் அனைத்தும் ஒருநாள் இல்லாமல் போகலாம்.
ஒருவேளை இந்த அறை மட்டுமே எஞ்சியிருக்கலாம். ஈரான் போர் விவகாரத்தை பொறுத்தவரை நான் எதுவும் வித்தியாசமாக செய்யப்போவது இல்லை" என்றார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் கட்டுப்படுத்தும் அளவுக்கு பெரும்பான்மை ஜனநாயக கட்சிக்கு கிடைத்துள்ள நிலையில், வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
