STAR 3.0 திட்டத்தில் மாற்றம்.. 4 வகை பத்திரங்களுக்கு புதிய வசதி.. மக்களுக்கு காத்திருக்கும் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவை எளிமைப்படுத்த கொண்டுவரப்பட்ட STAR 3.0 திட்டத்தில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. ஒருபக்கம் 4 வகையான குடும்ப சொத்து பத்திரங்களை ஆன்லைனில் பதிவு செய்து, ஒரு மணி நேரத்தில் அசல் பத்திரத்தைப் பெறும் வசதி அறிமுகமாகியுள்ளது. இன்னொருபக்கம், புதிய வீட்டுமனைகளுக்கான சர்வே எண்கள் வெப்சைட்டில் விடுபட்டுள்ளதால் பல மாவட்டங்களில் பொதுமக்களால் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையை நவீனப்படுத்தும் நோக்கில் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்டார் 2.0 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.. இதன் அடுத்த வெர்ஷனாக ஸ்டார் 3.0 திட்டம் உருவாக்கப்பட்டு, ஆகஸ்ட் 17ம் தேதி முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தது.

STAR 3 0 Property Registration Settlement Deed STAR 3 0

இதில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளின் முதல் விற்பனை பத்திரங்கள், வங்கிக் கடனுக்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

4 பத்திரங்களுக்கு புதிய வசதி

இந்த நிலையில், குடும்ப சொத்து தொடர்பான 4 வகையான பத்திரங்களுக்கு காகிதமில்லா பதிவு முறையை பதிவுத்துறை கட்டாயமாக்கியுள்ளது. நவம்பர் 2, 2026 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, செட்டில்மெண்ட் பத்திரம், விடுதலைப் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், செட்டில்மெண்ட் ரத்து பத்திரம் ஆகியவற்றுக்கு இந்த முறை பொருந்தும்.

இதில் பொதுமக்கள் பத்திரத்தைத் தனியாகத் தயாரித்து பதிவேற்ற வேண்டியதில்லை. ஆன்லைனில் ஆவண விவரங்களை பதிவிட்டு, பத்திரத்தின் வரைவு தகவல்களை பதிவுசெய்ய வேண்டும். சொத்து தொடர்பான மூல ஆவணங்கள் மற்றும் துணை ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.

ஆதார் ஓடிபி மூலம் பதிவு

ஆவணம் தயாரானதும், சொத்தை எழுதிக் கொடுப்பவர், பெறுபவர் மற்றும் சாட்சிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி மூலமாகவோ அல்லது கைரேகை, கருவிழி அங்கீகாரம் மூலமாகவோ மின்னணு கையொப்பமிட வேண்டும்.

அதன்பிறகு, முன்பதிவு டோக்கன் பெற்று ஒதுக்கப்பட்ட நேரத்தில் சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு சார்பதிவாளர் அடையாளம் மற்றும் ஆதார் விவரங்களைச் சரிபார்த்து பத்திரத்தைப் பதிவு செய்வார்.

பதிவு முடிந்ததும் அசல் பத்திரம் 60 நிமிடங்களுக்குள் திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ஆன்லைனில் பெறுவதற்கான வசதி 60 நாட்கள் வரை இருக்கும். அதற்குப் பிறகு சான்றொப்பமிட்ட நகலை விண்ணப்பித்துப் பெறலாம்.

சர்வே எண்கள் மாயம்

இவ்வளவு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், STAR 3.0 திட்டத்தில் வேறு ஒரு பிரச்சினையும் தற்போசூ எழுந்துள்ளது. அதாவது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கான சர்வே எண்கள் பதிவுத்துறையின் TNREGINET என்ற வெப்சைட்டில் இடம்பெறவில்லை,. இதனால் அந்த மனைகளை வாங்கியவர்கள் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகிறார்களாம்..

கடந்த 2 மாதங்களாக வீட்டுமனை விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விற்பனையாளர்களும், மனைகளை வாங்கியவர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமல்ல, வீட்டுமனை வாங்க வங்கிக் கடன் பெறுவதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் இதே பிரச்சினை நீடிப்பதால் பொதுமக்கள் மட்டுமின்றி பதிவுத்துறைக்கும் வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

அதிகாரிகள் விளக்கம்

இதுகுறித்து பதிவுத்துறை உயர் அதிகாரிகள் சொல்லும்போது, STAR 3.0 சாப்ட்வேரில் வருவாய்த் துறை ஆவணங்களை இணைக்கும் பணியின்போது சில சர்வே எண்கள் விடுபட்டுள்ளதாக புகார் வந்துள்ளது.. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சாப்ட்வேர் நிறுவனத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.. அதனால் விரைவில் பிரச்சினை சரிசெய்யப்படும்": என்றார்,

பத்திரப்பதிவை எளிதாக்குவதற்காக STAR 3.0 திட்டத்தில் பல புதிய வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால், புதிய வீட்டுமனைகளுக்கான சர்வே எண்கள் இணையதளத்தில் விடுபட்டுள்ளதால், பல மாவட்டங்களில் பொதுமக்களால் பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை. புதிய வசதிகள் ஒருபுறம் இருந்தாலும், இந்தப் பிரச்சினையால் மக்கள் தொடர்ந்து சிரமப்படுகிறார்கள்.. எனவே அதிகாரிகள் இந்தக் குறையை விரைவில் சரிசெய்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது....!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+