அமலாக்கத் துறையின் அடுத்த குறி.. அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி கைதாகிறாரா? பரபரப்பு
சென்னை: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வரும் 20 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஒரு வேளை அவர் ஆஜராகாவிட்டால் அவரையும் அமலாக்கத் துறை கைது செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த மே மாதம் 2ஆவது வாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார், அவருடைய நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் எல்லாம் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர்கள் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் வீடு, அவருடைய தம்பி அசோக்குமார் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தியது. அது போல் தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறையிலும் சோதனை நடந்தது.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்காததை அடுத்து அவர் கைது செய்யப்படுவதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனராம். இதையடுத்து சிறிது நேரத்தில் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்த நிலையில் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு இதய துடிப்பு சீராக இல்லாததை அடுத்து அவருக்கு ஆஞ்சியோ சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு இதயத்தில் 90 சதவீதம் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மேலும் அவருக்கு உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து அவரை காவேரி மருத்துவமனை அல்லது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்க அவருடைய மனைவி மேகலா நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து அவர் நேற்று முன் தினம் இரவு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் 7ஆவது தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற சில விதிமுறைகளையும் நீதிமன்றம் விடுத்தது. இந்த நிலையில் தற்போது அசோக்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அது போல் செந்தில் பாலாஜி தொடர்புடைய மற்றவர்கள் விசாரணைக்கு அழைக்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பண மோசடி தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அது தொடர்பாக வரும் 20-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அசோக்குமாருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என அசோக் குமார் அறிவுறுத்தப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வேளை அவர் நேரில் ஆஜராகாமல் போனால் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications