தொகுதிகள் மறுசீரமைப்பு.. பாஜக முதல் நாதக வரை.. அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காத 5 கட்சிகள் எவை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 58 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், மொத்தமாக 53 கட்சிகள் தரப்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இதனால் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காத 5 கட்சிகள் யார் என்பதை பார்க்கலாம்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமாக 58 கட்சிகளுக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 53 கட்சிகள் பங்கேற்றுள்ளனர். அதிமுக தரப்பில் ஜெயக்குமார், வழக்கறிஞர் இன்பதுரை, விசிக தரப்பில் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

All Party Meeting Chennai MK Stalin

அதேபோல் காங்கிரஸ் கட்சி தரப்பில் செல்வபெருந்தகை, பாமக தரப்பில் அன்புமணி ராமதாஸ், மதிமுக சார்பில் வைகோ, மநீம தரப்பில் கமல்ஹாசன், தவெக தரப்பில் பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தொகுதி மறுசீரமைப்பு என்னும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கி கொண்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு இழப்பு

இதனால் தமிழ்நாடு அதிகமாக பாதிக்கும். மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு 2026ஆம் ஆண்டு மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய உள்ளது. அது மக்கள் தொகை அடிப்படையில் தான் நடக்கும். தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழ்நாடு 8 நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்க நேரிடும்.

ஒன்றிணைவு தேவை

அதனால் 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட தொகுதிகளே தொடர வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல.. இந்தியாவுக்கு அபாயகரமான செயல்தான். இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். அதேபோல் எம்பி-க்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகள் எண்ணிக்கை இருக்கிறதோ, அதே விகிதத்தில் எண்ணிக்கையை உயர்த்த தேவையான சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மு.க.ஸ்டாலின் தீர்மானம்

அதேபோல் தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்தி வைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும். இதுதொடர்பான போராட்டத்தை முன்னெடுக்க தென் மாநிலங்களில் இருந்து எம்பி-க்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்க இந்த கூட்டம் தீர்மானிக்கிறது என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

கூட்டத்தில் பங்கேற்காத 5 கட்சிகள்

தொடர்ந்து பாமக தரப்பில் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தரப்பில் செல்வபெருந்தகை உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர். இதனிடையே அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காத 5 கட்சிகள் எவை என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் கட்சிகள் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்திருந்தனர். தற்போது ஏசி சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சியும் பங்கேற்கவில்லை. இதில் நாதகவை தவிர்த்து மற்ற 3 கட்சிகளும் பாஜக கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+