திமுக கூட்டணியில் காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும்? கேசி வேணுகோபால் அளித்த பதில் இதுதான்
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும் புதுவையில் ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்த பிறகு காங்கிரஸ் மேலிட தலைவர் கேசி வேணுகோபால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கேசி வேணுகோபால் அளித்த பதிலை காணலாம்.
லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இதில், விசிக - 2 , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 ,
கே சி வேணுகோபால் பேட்டி: மதிமுக - 1 ,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1, மக்கள் நீதி மய்யம் - 1 (ராஜ்யசபா சீட் ) ஒதுக்கப்பட்டன. இன்று காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட அண்ணா அறிவாலயத்திற்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை உள்ளிட்டோர் சென்றனர்.
திமுகவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வந்தது. இதை காங்கிரஸ் கட்சியும் ஏற்றுக்கொண்டதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் நிறைவடைந்தது. தொகுதி பங்கீடு ஒப்பந்தம் முடிந்ததும் காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கேசி வேணுகோபால் கூறியதாவது:-
காங்கிரசையும் திமுகவையும் பிரிக்க முடியாது: தமிழகத்தில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுவையில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணி கட்சிக்காக காங்கிரஸ் பாடுபடும். தமிழம் நாட்டிற்கே முன் மாதிரியாக விளங்குகிறது.
பிரித்தாளும் கொள்கை, ஏழை மக்களுக்கு எதிரான கொள்கையை கொண்ட அரசு வீழ்ச்சி அடைய வேண்டும். திமுகவுடன் காங்கிரஸ் கட்சி நல்ல நட்புறவில் உள்ளது. காங்கிரஸ் - திமுக இடையேயான பிணைப்பு மாறாமல் அப்படியே உள்ளது. தற்போது அது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியையும் திமுகவையும் பிரிக்க முடியாது.
எந்தெந்த தொகுதிகளை கேட்டுள்ளீர்கள்: நாங்கள் ஒருங்கிணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். நாங்கள் இன்று அளிக்கும் செய்தி இதுதான்" என்றார். அப்போது எந்தெந்த தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த, கேசி வேணுகோபால், "இது குறித்து தமிழக தலைவர்கள் பிறகு ஆலோசித்து முடிவு செய்வார்கள்" என்றார்.
-
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications