இன்று விடைபெறும் 2023.. 2024 புத்தாண்டை முதலில் வரவேற்கும் நாடு எது தெரியுமா? கடைசி நாடு இதுதான்
சென்னை: இன்று நள்ளிரவு புத்தாண்டு பிறக்க உள்ளது. 2024 எனும் புதிய ஆண்டில் நாம் அனைவரும் அடியெடுத்து வைக்கும் நிலையில் இந்த புத்தாண்டை எந்த நாடு முதலில் வரவேற்கும். எந்த நாடு கடைசியாக வரவேற்கும் என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
டிசம்பர் 31.. ஒவ்வொரு ஆண்டின் கடைசி நாள்.. இன்று நாம் அனைவரும் 2023ம் ஆண்டின் கடைசி நாளில் இருக்கிறோம். இன்று இரவு நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. நாம் அனைவரும் புதிய ஆண்டான 2024ல் நள்ளிரவு 12 மணிக்கு அடியெடுத்து வைக்கிறோம்.

இந்த ஆங்கில புத்தாண்டை ஒவ்வொருவரும் சிறப்பாக வரவேற்பது உண்டு. அந்த வகையில் இன்று நள்ளிரவும் புத்தாண்டு கொண்டாட்டம் இந்தியாவில் களைகட்ட உள்ளது. நண்பர்கள், குடும்பத்துடன் பார்ட்டி, கோவில்களுக்கு தரிசனம் என ஒவ்வொருவரும் தங்கள் விருப்படி புத்தாண்டை வரவேற்க காத்துள்ளனர்.
இப்படியாக 2024 புத்தாண்டுக்கான கவுண்ட்டவுன் ஸ்டாட்ஆகியுள்ள நிலையில் இன்னும் சில மணிநேரங்களில் நாம் புதிய ஆண்டுக்குள் நுழைகிறோம். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் அதனை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். பட்டாசுகள் வெடித்து வரவேற்கப்படும் இந்த 2024ம் ஆண்டு சிறப்பானதாக அமைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்த புத்தாண்டு பிறக்க உள்ளது.
இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்க உள்ளது. அதேபோல் ஒவ்வொரு நாடுகளிலும் புத்தாண்டு பிறக்கும் நேரம் என்பது மாறுபடுகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடு எது? கடைசியாக கொண்டாடும் நாடு எது? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி 2024ம் ஆண்டு புத்தாண்டை பசிபிக் தீவு நாடுகளான கிரிபட்டியின் டோங்கோ சமோவா உள்ளிட்ட நாடுகள் முதலில் வரவேற்க உள்ளனர். இந்திய நேரப்படி இந்த நாடுகளில் மாலை 3.30 மணிக்கு புத்தாண்டு என்பது பிறக்க உள்ளது. இது அமெரிக்காவை விட 14 மணிநேரத்துக்கு முன்பும், இந்தியாவை விட 8.30 மணிநேரம் முன்பும் புத்தாண்டை கொண்டாட உள்ளது.
மாறாக கடைசியாக அமெரிக்கா அருகே உள்ள மக்கள் வசிக்காத ஹவ்லேந்த், பேக்கர் தீவு நாடுகள் புத்தாண்டை வரவேற்க உள்ளனர். இந்த நாடுகளில் இந்திய நேரப்படி நாளை மாலை 4.30 மணிக்கு புத்தாண்டு பிறக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications