எந்தப் படிப்புக்கு மவுசு அதிகம்? ஏஐ படிப்புக்கு எதிர்காலம் இருக்கா? தரமான டிப்ஸ்
சென்னை: மாணவர்கள் சிறந்த கல்லூரி படிப்புகளைத் தேர்வு செய்வதற்குத் தேவையான ஆலோசனைகளை இரண்டு கல்வியாளர்கள் விவரித்துள்ளனர்.
கல்லூரிச் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கி விட்டது. ப்ளஸ் 2 முடித்த மாணவர்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்க உள்ளனர். அவர்கள் இப்போது தெளிவாக முடிவெடுத்து என்ன படிப்பைத் தேர்வு செய்கிறார்களோ அதைப் பொறுத்தே அவர்களின் எதிர்காலம் முடிவு செய்யப்படும்.

ஆகவே, ஏதோ ஒரு படிப்புக்கு விண்ணப்பம் போடுவோம் என்ற மனநிலை உள்ளவர்கள் கட்டாயம் கவனமாக இருக்க வேண்டும். எந்தப் படிப்பு சிறந்தது? எதற்கு எதிர்காலம் உள்ளது என்பதைப் பற்றி ஒரு தெளிவான சிந்தனை வேண்டும்.
ஏனென்றால், ஆண்டுக்கு ஆண்டு பங்குச்சந்தை நிலவரத்தைப் போலக் கல்லூரி படிப்புகளுக்கான மவுசு ஏறிக்கொண்டும், இறங்கிக் கொண்டு உள்ளன. அதற்காகத்தான் இந்த எச்சரிக்கத் தேவை என்கிறோம்.
உதாரணமாகக் கணினி அறிவியல் பாடத்தில் கடந்த ஆண்டு 2251 பேர் மட்டுமே செண்டம் எடுத்திருந்தனர். இந்த நடப்பாண்டில் 6996 பேர் செண்டம் எடுத்துள்ளனர். அதாவது முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ஆனால், தாவரவியல், உயிரியல் போன்ற பாடப்பிரிவுகளில் முழு மதிப்பெண் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைந்துள்ளது. வேளாண் மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளைத் தேர்வு செய்ய உள்ள மாணவர்களுக்கு எளிதாகவே இடங்கள் கிடைக்கக் கூடும் எனச் சொல்லப்படுகிறது.
ஆகவே, பிஏ பொருளாதாரம், பிகாம் ஆகிய படிப்புகளைத் தாண்டி வேறு படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு மிக எளிதாக இடங்கள் கிடைக்கும்.
மாணவர்களுக்குள் என்ன படிப்பது? எதற்கு எதிர்காலம் உள்ளது என்பது குறித்து சில குழப்பங்கள் இருக்கலாம். அதற்கான விளக்கங்களை அளிக்கிறார்கள் சில கல்வியாளர்கள்.
முதலில் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, “ஒரு மாணவன் 2024இல் ஒரு படிப்பைத் தேர்வு செய்து கல்லூரி உள்ளே செல்லும் போது அவன் படித்து முடித்துவிட்டு 2028இல் வெளியே வரும்போது அன்றைய சூழ்நிலை மிகப் பெரிய அளவில் மாறி இருக்கும்.

அவன் விரும்பி படித்த ஒரு படிப்புக்கு வாய்ப்புகள் குறைந்து போய் இருக்கலாம். அதை ஏன் படிக்க வேண்டும்? இன்றைக்கு இதுதானே அதிகம் பேசப்படும் படிப்பாக உள்ளது என நினைத்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கு எதிர்காலமே இல்லை என்றுகூட ஆகியிருக்கலாம்.
ஆகவே, ஒரு படிப்பைத் தேர்வு செய்யும் போது எதிர்காலத்தில் அந்தத் துறைக்கான வேலை வாய்ப்புகள் எந்தளவுக்குப் பிரகாசமாக உள்ளன என்பதை முழுதாக அறிந்து கொண்டு அதில் சேர வேண்டும். யாரோ ஒரு உறவினர் சொல்கிறார் என்பதற்காக ஒரு படிப்பைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. இது மிகமிக முக்கியம்.
இன்றைக்கு ஏஐ சார்ந்த படிப்புகள் பலதுறைகளை விஸ்வரூபமாக வளர்ந்து வருகிறது. பலதுறைகளை அது தூக்கிச் சாப்பிட்டுக் கொண்டுள்ளது.
இன்றைக்கு ஏஐ மட்டும் படித்துவிட்டேன் என்பது நல்லது அல்ல. அந்த ஏஐ சாந்த தொழில்நுட்பங்களில் எந்த மாதிரியான டூல்ஸ் தெரிந்து வைத்துள்ளோம். எந்த மாதிரியான ப்ளகின்ஸ் தெரிந்து வைத்துள்ளோம் என்பது முக்கியம்.
இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்த ஏஐ துறைதான் கோலோச்சப் போகிறது. ஆகவே அதை உணர்ந்து மாணவர்கள் படிப்புகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டை எடுத்துக் கொண்டால் பிகாம் படிப்புக்கு கடும் போட்டி இருந்தது. அதைப்போலவே இந்த வருடமும் பிகாம் படிப்புகளில் கடும் போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.
அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே பிகாம் படிப்பதற்காக இடங்கள் கிடைக்கும். கட்ஆப் மார்க் இந்த ஆண்டு கட்டாயம் கூடும். பிஏ எக்னாமிக்ஸ் போன்ற படிப்புகளுக்கும் இந்த ஆண்டு கடுமையான போட்டி இருக்கும்.
இந்த வருடம் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாகவே உள்ளது. போட்டியில் அவர்களும் உள்ளார்கள். அரசு அவர்களுக்கு 7% இடஒதுக்கீடு வழங்கி உள்ளது.
அதனால் பிகாம் படிப்புகளில் இன்னும் கூடுதலான போட்டிகள் நிலவ உள்ளன. அதை எல்லாம் மாணவர்கள் எதிர்கொள்ள நேரிடும்.

பொறியியல் படிப்புகளைப் பொருத்தவரை இந்த ஆண்டு கட் ஆப் மார்க் குறையே செய்யும். பெரிய அளவில் போட்டிகள் இருக்காது. மீன்வளம், கால்நடைப் படிப்புகளில் சேர்ந்தால் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன” என்கிறார்
அடுத்ததாகப் பேசிய கல்வியாளர் அஸ்வின், “கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 195க்கு மேல் கட் ஆப் குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை.
ஏனென்றால் இந்த ஆண்டு வேதியியலுக்கான செண்டம் குறைந்துள்ளது. அதன் விளைவாகவே இந்த மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறோம். ஆகவே குறையவும் செய்யாது. ஏறவும் செய்யாது” என்கிறார் இவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications