கொளுத்தும் வெயிலுக்கு பிரேக் போடும் மழை.. எங்கெல்லாம் மழை இருக்கு! வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்
வரும் நாட்களில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் பிப். மாதமே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்ட நிலையில், வரும் நாட்களில் வெப்பம் எந்தளவுக்கு இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவி வந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் பல இடங்களில் பிப். மாதமே வெயில் உச்சம் தொட்டது.
தமிழ்நாடு மட்டுமில்லை இந்தியாவின் பல இடங்களிலும் இதை நிலைதான். நாட்டின் பல பகுதிகளில் வழக்கமான வெப்பத்தைக் காட்டிலும் அதிகப்படியான வெப்பம் பதிவாகியுள்ளது.

உச்சத்தில் வெப்பம்
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப். மாதம் இந்தியாவில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலும் கடந்த 24 மணி நேரத்தில் கடலூர், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் வெப்பம் 2.1 செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை கணிசமாக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரியளவில் வெப்பத்தில் மாற்றம் இல்லை.

வறண்ட வானிலை
இதற்கிடையே வரும் நாட்களில் இடைத்தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பது குறித்து வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றும் (மார்ச் 2) நாளையும் (மார்ச் 3) ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரு நாட்களுக்கு ஓரளவுக்கு மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

மழை
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் மார்ச் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதைத் தொடர்ந்து வரும் மார்ச் 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், தென் மாவட்டங்களில் மழை என்பது சற்றே நிம்மதி தரும் அறிவிப்பாக இருக்கிறது.

சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் நாலமுக்கு பகுதியில் 30 மிமீ மழையும், காக்காச்சி, ஊத்து பகுதிகளில் 20 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
நாளை (மார்ச் 4) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 5) தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடைக் காலம் தொடங்கும் நிலையில், வரும் நாட்களில் வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications