சரி.. ரஜினிகூட யாரெல்லாம் சேருவார்கள்.. ஒரு லிஸ்ட் போட்டு பார்க்கலாமா.. அடேங்கப்பா இம்புட்டு பேரா
ரஜினியுடன் இணைய உள்ள அரசியல் கட்சிகள் என்னென்ன?
சென்னை: கட்சியே ஆரம்பிக்காமல் எப்பவுமே ஊர் உலகத்தை பரபரப்பாக வைத்துக் கொள்வதில் ரஜினிக்கு நிகர் வேறு யாருமில்லை. ஒன்றுமே செய்யாமல் இப்படி பில்டப்பிலேயே பல வருடத்தை அவர் ஓட்டி விட்டார் என்பது ஆச்சரியம்தான். சரி ஒரு வேளை அவர் உண்மையிலேயே கட்சி ஆரம்பித்தால் யாரெல்லாம் அவருடன் சேர வாய்ப்புள்ளது?
Recommended Video
இதில் முதலில் துண்டு போட்டு வைத்துள்ளது பாமகதான்.. இதனை ரஜினிகாந்த் தரப்பு சொல்லியதில் இருந்து இப்போது வரை டாக்டர் ராமதாஸ் அதை மறுக்கவில்லை. ஆனால் ரஜினி ரசிகர்களும், பாமக தொண்டர்களும் இணக்கமாக, கசப்பானவற்றை மறந்துவிட்டு களவேலைகளில் இறங்குவார்களா? என்பது தெரியவில்லை.
அன்புமணியை முதல்வராக்குவது என்ற நீண்ட கால இலக்குடன் பாமக உள்ளது.. அதனால்தான் பாஜக விஷயத்தில் வெறுப்பை ஒரேடியாக உமிழாமல் ஜாக்கிரதையாக உள்ளது.. பாஜகவுக்கு நெருக்கமான ரஜினியின் வருகை, தங்கள் நீண்ட நாள் கனவை நனவாக்கும் என்று பாமக நம்புகிறதாகவே தெரிகிறது.. ஒருவேளை ரஜினிகாந்த் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றாலும், பாமக நிச்சயம் ரஜினியுடன்தான் சேரும் என்பது தெளிவு!!!

விஜயகாந்த்
அடுத்ததாக இந்த லிஸ்ட்டில் இணைவது தேமுதிகவாகத்தான் இருக்கும்.. ராஜ்ய சபா சீட் கேட்டு அளவுக்கு அதிகமாகவே அசிங்கப்பட்டு கொண்டு உட்கார்ந்துள்ளது.. அன்று விஜயகாந்தின் எழுச்சியினால் வாக்கு வங்கி வலுவாக இருந்தபோதே டெல்லி பொறுப்பை தராதவர்கள், இப்போது மொத்தமாக சுருண்டு விழுந்துள்ள நிலையில் எப்படி சுதீஷுக்கு பதவி தருவார்கள்? தேமுதிக இந்த 3 வருட காலத்தில் செய்த களவேலைகள் என்ன? ஆசைப்பட ஒரு அளவு வேணாமா?

தேமுதிக
கண்டிப்பாக ரஜினியுடன் தேமுதிக இணைந்தாலும் ஆச்சரியம் இல்லை. ரஜினிகாந்த்துடன் நெருக்கமான நட்பை கொண்டவர் விஜயகாந்த்.. அதேபோல கேப்டன் மீது பாசம் வைத்திருப்பவர் ரஜினி.. இதுவரை இவர்கள் கருத்து ரீதியாககூட மோதி கொண்டவர்கள் இல்லை.. இதுபோக தேமுதிகவிடம் இருக்கும் சொற்ப வாக்குகள் ரஜினிக்கு கண்டிப்பாக வலு தரக்கூடியதுதான்.. அதனால் தேமுதிக, அதிமுக கூட்டணி வந்தால் ஆச்சரியம் இல்லை!

கமல்ஹாசன்
இந்த லிஸ்ட்டில் அடுத்ததாக வருபவர் கமல்ஹாசன்.. செய்தியாளர்களுக்கு டீ, பிஸ்கட் கொடுத்து உரிய மரியாதை தந்து உட்கார வைத்து வெளிப்படையாக சொல்லிவிட்டார்.. ரஜினிகாந்த்துடன் எப்படியும் மய்யம் கை கோர்க்கும் என்றே தெரிகிறது.. ரஜினிகாந்த்தைவிட கமல்ஹாசனுக்கு முதல்வர் ஆசை குறைவுதான்.. ஆனால், "அதிருப்திகளை மட்டுமே அதிகம் சம்பாதித்துள்ள ரஜினி மூட்டையை எதுக்கு நாம் சுமக்க வேண்டும்? தனித்து போட்டியிடலாம்" என்பதுதான் மய்ய உறுப்பினர்களின் பொதுவான கருத்து.. ஒருவேளை ரஜினிகாந்த் பாஜகவுடன் இணைந்தால்தான் சிக்கலே தவிர, மற்றபடி கமல்ஹாசனும் - ரஜினிகாந்த்தும் இணைந்து அரசியல் செய்வது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான்!

அர்ஜுன் சம்பத்
இந்த லிஸ்ட்டில் சொல்லாமலேயே, யாரும் கூப்பிடாமலேயே, ஆட்டோமெட்டிக்காக சேர்ந்து விடுபவர்கள் அர்ஜுன் சம்பத், கராத்தே தியாகராஜன், தமிழருவி மணியன், குருமூர்த்தி, நாராயணன் போன்றோர்.. அதனால் இது தெரிந்த சமாச்சாரம்தான்.. ஆனால் தெரியாத ஒரு ட்விஸ்ட் உள்ளது.. அதுதான் காங்கிரஸ்... திமுகவுடன் ஏற்பட்ட அதிருப்தி, தொடர் கருத்து மோதல், ராஜ்ய சபா சீட் தராதது இதெல்லாம் பார்த்து நொந்து போயுள்ள காங்கிரசில் சிலர் ரஜினி தரப்புடன் சிலர் பேசிவருகின்றனராம்.. ஏற்கனவே திருநாவுக்கரசு, கராத்தே தியாகராஜன் போன்றோர் ரஜினியின் நீண்டகால நண்பர்கள்.. அதனால் காங்கிரஸ் ரஜினியுடன் இணையும் என்றுகூட யூகிக்கலாம்!

ராஜேந்திர பாலாஜி
இதை தவிர, அதிமுகவில் 3 அமைச்சர்கள், 2 எம்பிக்கள் தயாராக உள்ளதாக ஏற்கனவே சொல்லப்பட்டன.. இதில் நமக்கு பளிச்சென கண்ணுக்கு தெரிவது ராஜேந்திர பாலாஜிதான்.. ரஜினி மீதுள்ள பாசம் அளவுக்கு அதிகமானது.. அதேசமயம் பாஜக ஒரு குழப்ப நிலையிலேயே உள்ளது.. ரஜினிகாந்த்துடன் அக்கட்சி இணக்கமாக உள்ளதா அல்லது கருத்து வேறுபாட்டில் உள்ளதா என நம்மால் கணிக்க முடியவில்லை.. காரணம் ரஜினிகாந்தின் சிஏஏ சம்பந்தமான சமீபகால செயல்பாடுகள் இந்த குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது (இது கூட மக்களை ஏமாற்றும் டெக்னிக்காகவும் இருக்கக் கூடும்).

புது முயற்சி
இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்கள் ரஜினியின் அரசியலை சுற்றியே வலம் வந்து கொண்டிருக்கின்றன.. எத்தனையோ அரசியலை பார்த்துவிட்ட தமிழகத்துக்கு ரஜினியின் இந்த அரசியலும் ஒரு புது முயற்சிதான்.. பார்ப்போம் யார், யார் ரஜினிகாந்த்துடன் இணைகிறார்கள் என்று!
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications