சென்னையில் இன்று சம்பவம் வெயிட்டிங்.. தமிழகம் முழுக்க கொட்ட போகுது கனமழை.. வெதர்மேன் கொடுத்த அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நேற்று மழை பெய்த நிலையில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்லி தொடங்கி ஹைதராபாத் வரை பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

இந்த கனமழையால் பல இடங்களில் மண் சரிவு எல்லாம் கூட ஏற்பட்டது. இதன் காரணமாகவே தக்காளி உள்ளிட்ட காய்கறி விலையும் கூட உயர்ந்தது. இருப்பினும், தமிழ்நாட்டில் மட்டும் மழை எட்டிக் கூட பார்க்காமலேயே இருந்தது.
வானிலை: குறிப்பாகக் கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் பல இடங்களில் தொடர்ச்சியாக வெப்பம் அதிகமானது. தினசரி 10+ மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. இதனை வானிலை ஆய்வாளர்கள் இரண்டாவது சம்மர் எனக் கூட குறிப்பிட்டனர். வானிலை ஆய்வு மையங்களும் கூட மாநிலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் இதனால் Heat stress ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தன. அந்தளவுக்கு நிலைமை மோசமானது.
இருப்பினும், கடந்த இரண்டு நாட்களாக வானிலை மாறியது. வெப்பம் குறைந்து குளிர்ச்சியான ஒரு வானிலை நிலவியது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்தது. கடந்த 2-3 நாட்களாக மதுரை, கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இருப்பினும், சென்னை உள்ளிட்ட வடதமிழக பகுதிகளில் பெரியளவில் மழை பெய்யாமலேயே இருக்கிறது.
வெதர்மேன்: இதற்கிடையே இன்று தமிழ்நாட்டில் பல இடங்களில் திடீரென மழை பெய்யத் தொடங்கியுள்ளது. வட தமிழகத்திலும் குறிப்பாகத் தலைநகர் சென்னையிலும் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சில வாரங்களாகவே அதீத வெயில் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த மழை என்பது ரிலாக்ஸ் செய்வதாக அமைந்துள்ளது. இதனிடையே இன்று வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலைச் சென்னை வெதர்மேன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "சிறுசேரி, கேளம்பாக்கம், படூர் முதல் தாம்பரம் வரை பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. கடல் காற்றின் உதவியால் மேகங்கள் உருவாகிறது. விரைவில் நகர் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும்.. தமிழகம் முழுவதும் இன்று நல்ல மழை பெய்யும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதல் சில நாட்களாக வெயில் அதிகமாக இருந்த நிலையில், இந்த மழை மக்களுக்கு நிம்மதி தருவதாக இருக்கும்.
Very intense thunderstorms seen over Siruseri, Kelambakkam, Padur to Tambaram belt
— Tamil Nadu Weatherman (@praddy06) August 10, 2023
The clouds are blooming and growing in size with aid of sea breeze
Soon City areas should start to report rains.
Today is going to be very very good day of rains for Tamil Nadu across districts pic.twitter.com/BI3kmZJTne
மழை எங்கே: முன்னதாக சென்னை வானிலை மையம் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தது. அதில் "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்" எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications