திராவிடம் + கம்யூனிசம்.. பெரியார், அம்பேத்கரிய விருதுகளை இன்று வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: 2023 ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான 'தந்தை பெரியார் விருது' மற்றும் 'டாக்டர் அம்பேத்கர் விருதை' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில், சமூக நீதிக்கான 'தந்தை பெரியார் விருதினை' வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில், 2023-ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான "தந்தை பெரியார் விருது"க்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

அதே போன்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டுவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 'டாக்டர் அம்பேத்கர் விருது' வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 2023ஆம் ஆண்டிற்கான 'டாக்டர் அம்பேத்கர் விருது' மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.சண்முகத்திற்கு அறிவிக்கப்பட்டது.
விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருது வழங்கினார். இன்று மாலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் இருவருக்கும் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார். விருது பெற்ற விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூ.5 இலட்சம் ரூபாயுடன், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்பட்டது. சமூகநீதிக்கான 'தந்தை பெரியார் விருது' பெற்ற திரு. சுப. வீரபாண்டியன், திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். தந்தை பெரியாரின் பற்றாளர். தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகச் செயலாற்றி வருகிறார்.
அவர், 'ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம்', 'தமிழியத்தால் வெல்வோம்' என்னும் முழக்கத்தை முன்வைத்து, 2007 ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற இவர், கல்லூரியில் பணியாற்றும் பொழுதே தமிழ் தமிழர் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டவர்.
தந்தை பெரியாரின் கொள்கைகளான சமூக நீதி, சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை மற்றும் பகுத்தறிவு முதலான கருத்துகளை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும் என்பதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இவர் கலைமாமணி விருது பெற்றுள்ளதுடன், இதுவரை 54 நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
'டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது' பெற்ற பி.சண்முகம், தமிழ்நாட்டில் 32 ஆண்டுகாலமாக மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பணிவகித்து மலைவாழ் மக்களின் நலனுக்காக பாடுபட்டுள்ளார். மேலும், தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைகளுக்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்தி நீதி பெற்று தந்ததில் பெரும்பங்காற்றியுள்ளார்.
வாச்சாத்தி -உண்மையின் போர்க்குரல், வாச்சாத்தி வன்கொடுமை போராட்டம் வழக்கு தீர்ப்பு, தீக்கதிர் நாளிதழில் வனமக்கள் வாழ்க்கை வளம்பெற, வனங்களை பாதுகாப்பது மக்களே போன்ற செய்தி தொகுப்புகளையும் சண்முகம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அடிச்ச வெயிலுக்கு.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! கொட்டப்போகும் மழை! -
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம்.. சட்டென மாறிய வானிலை! மழை வெளுக்கப்போகுது! -
மழையும் இருக்கு.. வெயிலும் இருக்கு.. குழப்பி அடிக்கும் வானிலை! உஷார் மக்களே! -
10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம்












Click it and Unblock the Notifications