விஜயின் விசிலுக்கு சிக்கல்.. ரோலரால் காத்திருக்கும் பஞ்சாயத்து! 2026 அவ்வளவு தானா? உண்மை இது தான்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'ரோலர்' சின்னம் 'விசில்' சின்னத்தை போலவே இருப்பதாகவும் 2026 சட்டமன்ற தேர்தலில் சுயேச்சைகளுக்கு ரோலர் சின்னம் ஒதுக்கப்பட்டால் குழப்பம் வரும் என சமூக வலைதளங்களில் நேற்று முதல் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அது போலியானது எனவும், தேர்தல் ஆணையத்தின் ரோலர் சின்னம் விசில் சின்னத்திலிருந்து மிகவும் மாறுபட்டது என கூறுகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. நீண்ட காலமாக திமுக - அதிமுக என்ற இரட்டை அரசியல் சக்திகள் மட்டுமே இருந்த தமிழக அரசியலில், நடிகர் விஜய் தொடங்கிய 'தமிழக வெற்றிக் கழகம்' தற்போது புதிய அரசியல் சக்தியாக களம் இறங்கி உள்ளது.
2026ல் முதன் முதலாக விஜய் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், தவெக-வின் தேர்தல் சின்னம் தொடர்பான எதிர்பார்ப்புக்கு விடையளிக்கும் வகையில், இந்தியத் தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதமே கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்தல் வியூகப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு, தேர்தல் ஆணையத்திடம் விருப்பமான சின்னங்களின் பட்டியலை அளித்திருந்தனர். நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, தவெக-வுக்கு 'விசில்' சின்னம் பொதுச் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு, வழக்கமாக ஒவ்வொரு தொகுதிக்கும் தனித் தனியான சின்னங்கள் வழங்கப்படும்.
தவெக விசில் சின்னம்
ஆனால், தேர்தல் ஆணைய விதிகளுக்கு உட்பட்டு அனைத்து நடைமுறைகளையும் முறையாக பின்பற்றியதன் காரணமாக, தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் போட்டியிட தவெக-வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தேர்தல் களத்தில் தவெக-வுக்கு கிடைத்த முதல் பெரிய அதிகாரப்பூர்வ அங்கீகாரமாக இந்த சின்ன ஒதுக்கீடு பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியின் பிரச்சாரம் மற்றும் அடையாள அரசியலுக்கு இது முக்கிய திருப்பமாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
ரோலர் சின்னம் சர்ச்சை
மேலும் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் விஜயின் விசில் சின்னத்தை புரோமோட் செய்வது போல தமிழக வெற்றிக் கழகத்தினர் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். மேலும் 'கோட்' படத்தில் சத்தம் பத்தாது விசில் போடு என்ற பாடலையும் பகிர்ந்து வந்தனர். அது மட்டும் அல்லாமல் பழைய திரைப்படங்களில் ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட நடிகர்கள் விசில் அடிப்பது போன்ற காட்சிகளையும் பகிர்ந்து வந்தனர். இதற்கு இடையே விசில் சின்னத்தை போலவே தேர்தல் ஆணையத்தின் ரோலர் சின்னம் இருப்பதாகவும் அது சுயேட்சைகளுக்கு வழங்கப்பட்டால் விஜயின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என சமூக வலைதளங்களில் சொல்லி வைத்தார் போல ஒரே பதிவு பகிரப்பட்டது. ஒரே புகைப்படத்துடன் ஒரே வரிகளுடன் அந்த பதிவு இருந்தது.

தேர்தல் ஆணைய சின்னங்கள்
இதனால் தமிழக வெற்றிக் கழகத்தினர் சற்று அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ள ரோலர் சின்னம் முற்றிலும் மாறுபட்டது எனவும், இதனால் குழப்பம் வராது என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். தேர்தல் ஆணையம் பெரிய அளவிலான ரோடு ரோலர் மற்றும் சிறிய கை உருளை ஆகிய சின்னங்களை தான் ஒதுக்கி இருக்கிறது. விஜய்க்கு ஒதுக்கி உள்ள விசில் சின்னத்துக்கும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ரோலர் சின்னத்திற்கும் சம்பந்தமே இல்லை எனவும், இது திட்டமிட்டு சிலரால் பரப்பப்படுவதாக கூறுகின்றனர் நிம்மதி அடைந்துள்ளனர்.
-
தனி விமானத்தில் மும்பை புறப்பட்டார் விஜய்.. தேர்தல் பணிகளுக்கு இடையே திடீர் பயணம் -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன தவெக.. சில நிமிடங்களில் வெளியான கரூர் ட்ரோன் காட்சி.. வசமாக மாட்டிய விஜய் -
நக்கீரன் கோபால் அப்பவே சொன்னாரே.. கரூரில் நடந்தது உண்மையில் என்ன? ட்ரோன் காட்சிகள் உண்மையா? -
கரூரில் 'ஜனநாயகன்' ஷூட்டிங்?.. சிபிஐ அடுத்த ஆக்சன் என்ன? மாரிதாஸ் வைத்த பாயிண்ட்.. கவனிச்சீங்களா? -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
சிபிஐயிடம் வசமாக சிக்கிய விஜய்? பிரசார வாகனம் 20 மீட்டர் தள்ளிப்போனது ஏன்? கரூர் நெரிசலில் ட்விஸ்ட் -
பால்வாடி இயக்கம்.. லீடர்னு சுற்றியவன்.. வில்லிவாக்கத்தில் சம்பவம் இருக்கு! உறுதியாக சொன்ன சேகர் பாபு -
அந்த கூட்டணி, இந்த கூட்டணிலாம் கிடையாது! ஆல் ஏரியாவுலயும் நாம்தான் கில்லி! இஃப்தார் நோன்பில் விஜய்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள் -
பெரம்பூரில் விஜய்க்கு எதிராக விஐபி வேட்பாளர்.. திமுக பெரிய பிளான்.. லிஸ்டிலேயே இல்லையே! -
விஜய் குடுமி சங்கீதா கையில்.. தேர்தலிலேயே நிற்க முடியாது? எலக்சன் நேரத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்! பரபர












Click it and Unblock the Notifications