Whistle: "கப்பு முக்கியம் பிகிலு!" விசிலை 5 முறை அடித்து சொன்ன விஜய்! அரங்கமே அதிர்ந்தது!
சென்னை: தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய் இறுதியில் விசில் அடித்து தனது கட்சியின் சின்னத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் கப்பு முக்கியம் பிகிலு என பிகில் படத்தில் ராயப்பன் பேசிய வசனத்தை பேசி தொண்டர்களை குதூகலப்படுத்தினார்.
தவெகவுக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன. கியூ ஆர் கோடுடன் கூடியவர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் பேசினர். இந்த நிகழ்வில் விஜய் பேசுகையில் ஒருதுளி ஊழல்கூட படியவே படியாது. படியவும் விடமாட்டேன். இதற்கு முன்னாடி இருந்தவங்க மாதிரியோ, இப்போ இருக்கிறவங்க மாதிரியோ இந்த விஜய் ஊழல் செய்ய மாட்டேன்.
ஒரு பைசா தொட மாட்டேன். அதனை தொட வேண்டிய அவசியமில்லை. நீங்க என்ன அழுத்தம் கொடுத்தாலும் அடங்கிப் போறதுக்கோ, அண்டி பிழைக்கவோ, அடிமையாய் இருக்கவோ நான் அரசியலுக்கு வரவில்லை என பேசினார்.
திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய் தனது பேச்சை முடித்த போது அவரிடம் விசில் கொடுக்கப்பட்டது. அதை அவர் 5 முறை அடித்தார், பின்னர் நமது சின்னம் விசில், உங்கள் சின்னம் விசில், நமது வெற்றிச் சின்னம் விசில் என சொல்லிவிட்டு கப்பு முக்கியம் பிகிலு என கூறி, அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
மேலும் விஜய் பேசுகையில், இது வெறும் தேர்தல் இல்லை, ஜனநாயகப் போர்!.அண்ணா ஆரம்பிச்ச கட்சியும், அவர் பேர்ல இருக்கிற கட்சியும் அவரை மறந்து பல வருஷம் ஆச்சு. ஆனா நாம அவரை மறந்துடக் கூடாது. திமுகவை பொருத்தமட்டில் பூத் என்றால் கள்ள ஓட்டு போடும் இடமாக பார்க்கிறார்கள், ஆனால் டிவிகே-வுக்கு அது ஜனநாயக கூடம்.
தமிழ்நாட்டில் உள்ள இரண்டு கோடி ரேஷன் கார்டுதாரர்களும் கட்சி வேறுபாடுகளை மறந்து விஜய்யை தங்கள் வீட்டுப் பிள்ளையாக கருதுகிறார்கள். அவர்களைப் பாதுகாப்பாக பூத்துக்கு அழைத்து வந்து விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வைக்க வேண்டும் .
வரவிருக்கும் தேர்தலில் கட்சி அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ராணி வேலு நாச்சியார் தனது நாட்டை மீட்டது போல், நாமும் ஒன்றிணைந்து தமிழகத்தை மீட்டெடுக்க முடியும்.2026 சட்டமன்றத் தேர்தலில் உண்மையாக, உறுதியாக, ஒற்றுமையாக உழைக்க வேண்டும்.
இந்தத் தேர்தல் தமிழகம் இதுவரை பார்த்திராத வித்தியாசமான தேர்தலாக இருக்கும். விஜய் கூட இருக்கிற போர்ஸ பார்த்தா சாதாரண போர்ஸ் மாதிரி தெரியல, மிலிட்ரியோட பெரிய போர்ஸா இருக்குதுனு சிலர் சொல்கிறார்கள். மக்கள் ஏற்கனவே கணித்து முடித்துவிட்டார்கள். இந்தத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தை மீட்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.
-
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை! என்ன நடக்கும்? -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்












Click it and Unblock the Notifications