சேப்பாக்கத்தில் விசிலுக்கு தடை.. ரசிகர்களுக்கு திடீர் கட்டுப்பாடு.. பின்னணியில் தவெகவின் சின்னம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விசிலுக்கு தடை போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இந்தியா மற்றும் இலங்கையில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடரில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மொத்தம் 7 போட்டிகள் நடைபெற உள்ளது.

whistles-banned-at-chepauk-cricket-stadium-in-t20-matches

அதன்படி முதல் போட்டி இன்று நடந்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மோதின.

ஆப்கானிஸ்தான் தோல்வி

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 17.5 ஒவர்களில் 5 விக்கெட்டுகளைஇழந்து 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விசிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விசிலுக்கு தடை

இதுதொடர்பாக டெக்கான் குரோனிக்கல் பத்திரிகையின் பத்திரிகையாளர் சந்தோஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛ சேப்பாக்கம் மைதானத்தில் விசில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் நுழைவு வாயில்களில் ரசிகர்களிடம் விசில் உள்ளதா? என்று சோதனை நடத்தப்பட்டது. அதேபோல் விசில்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.

பின்னணி தவெக சின்னம்

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் விசில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இப்படி இல்லை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்தவரை இதுவரை விசிலுக்கு தடை போட்டது இல்லை. ரசிகர்கள் எப்போதும் விசில் எடுத்து செல்வதும், மைதானத்தை சுற்றி விசில் விற்பனை செய்வது வழக்கமான ஒன்றாகும்.

இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் ‛விசில்போடு' என்ற வாசகத்தை பயன்படுத்துவதோடு, விசிலை மையப்படுத்தி தான் பாடலை உருவாக்கி உள்ளது. இதனால் எப்போதும் சென்னை மைதானத்தில் கிரிக்கெட் நடக்கும்போதெல்லாம் விசில் தெறிக்கும். ஆனால் இன்று அப்படி நடக்கவில்லை.

சிஎஸ்கே போட்டிற்கும் கட்டுப்பாடு?

மேலும் அடுத்த மாதம் ஐபிஎல் போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. சென்னையில் சிஎஸ்கே போட்டி நடைபெறும். அதற்கும் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு இருக்கும். இதனா் அந்த சமயத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமாக இருக்கும். அப்போதும் சென்னை ரசிகர்கள் மைதானத்திற்கு விசில் எடுத்து செல்ல கட்டுப்பாடு இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்படியான சூழலில் தான் தற்போது டி20 உலககோப்பை போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் எடுத்து செல்ல தடை போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அல்லது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான நிர்வாகிகள் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+