தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீது எவ்வளவு கடன் உள்ளது? வெள்ளை அறிக்கையில் போட்டு உடைத்த பிடிஆர்
சென்னை: தமிழக அரசின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை இன்று மாநில நிதி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.
குடும்ப தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு கொண்டு வர விருப்பதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது.
இந்த திட்டங்கள் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தக்கூடியவையாகும்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன்.. உண்மையை உடைத்த பிடிஆர்..!

வெள்ளையறிக்கை முக்கியத்துவம்
அந்த அளவுக்கு மாநிலத்தில் நிதி இருக்கிறதா அல்லது திட்டங்கள் கிடப்பில் போடப்படுமா என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்த நிலையில், தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை குறித்து இன்று வெள்ளையறிக்கை வெளியிட்டுள்ளார் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

நிதிச் சுமை
இதன் மூலம் தமிழகத்தில் எந்த அளவுக்கு நிதி இருக்கிறது, எந்த அளவுக்கு நிதிச் சுமை இருக்கிறது, எந்த அளவுக்கு கடன் இருக்கிறது என்பது போன்ற விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் தலை மீதும் சராசரியாக எவ்வளவு கடன் இருக்கிறது என்ற விவரத்தை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அந்த பேட்டியின்போது தெரிவித்தார். இதுகுறித்த முக்கிய அம்சங்கள்:

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
வெள்ளை அறிக்கையில் ஏற்படும் தவறுகளுக்கு நான்தான் பொறுப்பு. ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அறிக்கையை ஆய்வு செய்த பின்பு அறிக்கை தயார் செய்யப்பட்டது. தமிழக அரசு வெளிப்படைத்தன்மை உடன் செயல்படுவதால் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம்.

கொரோனாவிற்கு முன்பே வீழ்ச்சி துவங்கியது
2016-2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வரலாறு காணாத அளவில் வருமான சறுக்கல் ஏற்பட்டது. கொரோனாவுக்கு முன்பே தமிழ்நாட்டின் வருமானம் சரிந்துவிட்டது. 2016-2021 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்தது. அதிமுக ஆட்சியின் முடிவில் ரூ.5.24 லட்சம் கோடி கடன் இருந்தது.

ஒரு குடும்பத்தின் கடன் சுமை
2021 - 22ம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கணக்கீட்டின்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.5,70,189 கோடியாக உள்ளது. தமிழகத்தில் பொது சந்தா கடனில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது. அதாவது ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும், இவ்வளவு கடன்கள் உள்ளன. கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி சதவீதம் அதிகரித்துள்ளது.

கடன் அளவு
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது 2014-15 ஆண்டில் குறைவாக இருந்த தமிழ்நாட்டின் கடன், ஜெயலலிதாவின் உடல் நலப் பிரச்சினைகளுக்கு பிறகு பல மடங்கு அதிகரித்தது, அதிமுக அரசு கூறிய கடன் கணக்கு சரியாக இல்லை. தமிழகத்தை ஒப்பிடுகையில் பீகார் மின்வாரியத்தின் நிலைமை நன்றாக உள்ளது. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைப் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் மின்சாரம் சார்ந்த வரிகள் குறைவாக உள்ளது.

பொதுக் கடன்
நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடுகையில் பொதுக்கடன் 26.69 சதவீதமாக உள்ளது. தமிழகத்தின் மாநில வரி வருவாயில் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் உற்பத்தி வருமானம் 13.89 % ; அதிமுக ஆட்சியின் இறுதியில் 4.65% ஆக சரிந்தது. தமிழ்நாட்டின் தொழில்துறை உற்பத்தி 4.65 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.

வரிகளை உயர்த்தாதது காரணம்
15 ஆண்டுகளாக மோட்டார் வாகன வரியை உயர்த்தாமல் இருப்பது நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் வாகன வரி மாற்றப்படவில்லை; வரியை சரியாக வசூலிக்காவிட்டால் எப்படி அரசை வழிநடத்த முடியும்? கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை விட தமிழகத்தில் வாகன வரி குறைவு.

வரி வருவாய்
2008 - 09-ம் ஆண்டில் 13.35 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2020 - 21-ல் 8.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. வரி செலுத்த வேண்டியவர்களிடம் இருந்து வரியை பெறாமல் இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம். ஜீரோ % வரி என்பதெல்லாம் பணக்காரர்களுக்கு பயன் தரும், ஏழைகளுக்கு எதிரானது. வரியில்லா பட்ஜெட் என்பது வளர்ந்த நாடுகளில் மட்டுமே சாத்தியம். கடந்த திமுக ஆட்சியில் உற்பத்தி வளர்ச்சி அதிகரித்தது; அதைவிட அதிகமாக வரி வருவாய் வளர்ச்சியும் இருந்தது. 2020-21 காலகட்டத்தில் மாநில பொருளாதாரத்தில் வணிக வரியின் அளவு 4.19 சதவிகிதமாக குறைந்துள்ளது. தமிழகத்துக்கு வரி வருவாயாக மத்திய அரசு தர வேண்டிய பணம் ரூபாய் 20,033 கோடியாக உள்ளது.

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
பெட்ரோல் விற்பனை மூலமாக மாநிலங்களுக்கு கிடைத்த வருவாயை பறித்து கொண்டது மத்திய அரசு. பெட்ரோல் விற்பனை மூலமாக செஸ் வரியால் மத்திய அரசுக்கு ரூ31.50 கிடைக்கிறது. பெட்ரோல் விற்பனை மூலமாக செஸ் வரியால் மாநில அரசுக்கு 2 பைசாதான் கிடைக்கிறது. தமிழக அரசுக்கு வணிக வரி மூலமான வருவாய் சரிந்துள்ளது. மத்திய அரசு நேர்முக வரியை குறைத்து மறைமுக வரியை வசூலிப்பதால் மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால், உள்ளாட்சிகளில் வரும் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.2577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பேட்டியில் தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications