கம்பெனி இன்சூரன்ஸ்! அதுல பெரிய பிரச்னை இருக்கே! "இதை" நீங்க செய்யணும்! அலர்ட் தரும் ஆனந்த் சீனிவாசன்
சென்னை: இப்போது பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டியது கட்டாயமாகியுள்ள நிலையில், அனைவரும் கட்டாயம் எடுக்க வேண்டிய இன்சூரன்ஸ் குறித்து ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த நவீன உலகில் நாம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்ற வேண்டியது கட்டாயமாகிறது. ஐடி தொடங்கிப் பல வேலைகளில் குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் வரை ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறோம். இதனால் உடலில் பல வித பாதிப்புகள் ஏற்படுகிறது.

குறிப்பாக எந்தவொரு உடல் சார்ந்த பணிகளும் இல்லாத நிலையில், முன்பு அரிதாக ஏற்பட்ட இதய பாதிப்பு தொடங்கிப் பல வகை பாதிப்புகள் அடிக்கடி நடக்கும் ஒன்றாக மாறியுள்ளது. இப்போது மருத்துவமனைகள் பெரும்பாலும் தனியாருக்குச் சென்றுவிட்ட நிலையில், ஒரு முறை சென்றால் லட்சங்களில் செலவாகிறது.
இன்சூரன்ஸ்: இதனால் இந்த காலத்தில் மருத்து இன்சூரன்ஸ் என்பது ரொம்பவே கட்டாயமாகிறது. இதனிடையே யார் எல்லாம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் வெளிநாட்டில் இருப்போர் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பது எல்லாம் குறித்து ஆனந்த் சீனிவாசன் வீடியோ ஒன்றில் விளக்கியுள்ளார். இப்போது பெரும்பாலான நிறுவனங்களில் இன்சூரன்ஸ் இருக்கும் நிலையில், இதுபோல காப்ரேட் நிறுவனங்களில் பணிபுரிவோர் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டுமா என்பது குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "கார்பரேட் இன்சூரன்ஸ் இருக்கு.. பிறகு நான் ஏன் மருத்துவ இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் எனச் சிலர் கேட்பார்கள்.. அது தவறு.. ஏனென்றால் கார்பரேட் இன்சூரன்ஸ் ஓய்வு பெற்ற பிறகு நமக்கு கிடைக்காது.. அதேபோல நம்ம ஊரில் 50 வயதுக்கு மேல் யாராக இருந்தாலும் இன்சூரன்ஸ் கிடைப்பது கடினம்.. எனவே, கார்பரேட் நிறுவனத்தில் வேலை செய்தாலும் கூட 40 வயதில் தனியாக ஒரு இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது சரியாக இருக்கும்.
ஆனந்த் சீனிவாசன்: இப்போது ஒரு சாதாரண இதய பைபாஸ் செய்வது என்றால் கூட குறைந்தது ரூ. 7 லட்சம் வரை செலவாகிறது. நமக்கு எதாவது ஆகி மருத்துவமனையில் அட்மிட் ஆனால்.. சொந்தக்காரர்கள் அனைவரும் கஷ்டப்படுவார்கள்.. அது எல்லாம் உண்மைதான்.. ஆனால், குறைந்தது பணத்திற்கு கஷ்டப்படாமல் இருப்பார்கள்.. அதற்காக அலையாமல் இருப்பார்கள்.
வெளிநாட்டிற்குப் போனவர்கள் இங்கே இன்சூரன்ஸ் எடுக்க வேண்டுமா என்றும் சிலர் கேட்கிறார்கள். அதிலும் இரண்டு இருக்கிறது. முதலில் அமெரிக்கா அல்லது ஐரோப்பா போனவர்கள் அங்கேயே செட்டிலாகிவிடுவார்கள். அவர்களுக்கு அங்கேயே இன்சூரன்ஸ் இருக்கும்.

வெளிநாடுகளில் இருப்போர்: அதேநேரம் மற்றொரு புறம் சவுதி, அரபுநாடுகள், சிங்கப்பூரில் நிரந்தர குடியிருப்பிற்கான அனுமதி இல்லாதவர்களுக்கு வேறு.. அங்கு வேலை செய்யும் வரை அவர்களுக்கு இன்சூரன்ஸ் இருக்கும்.. வேலை முடிந்து இங்கு வந்தால் இன்சூரன்ஸ் இருக்காது. 60 வயதில் வேலையில் இருந்து ஓய்வுபெற்று வரும் போது இன்சூரன்ஸ் தேவைப்படும்.. அப்போது நம்மால் இங்கு இன்சூரன்ஸ் வாங்கவும் முடியாது.
எனவே அரபு நாடுகளில் இருப்போர் கடைசிக் காலத்தில் இந்தியாவுக்கு வந்து செட்டில் ஆவது போல இருந்தால் அவர்களும் மருத்துவ காப்பீடு எடுக்க வேண்டும்.. எவ்வளவு குறைவான வயதில் எடுக்கிறார்களோ.. அவ்வளவு நல்லது வரும் போது பெட்டராக இருக்கும்..
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் காப்ரேட் இன்சூரன்ஸ் இருந்தாலும் சரி, வெளிநாடுகளில் வேலை செய்வோர் கடைசிக் காலத்தில் இந்தியாவுக்கு வருவது போல இருந்தாலும் அவர்கள் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டியது அவசியம்.. முதலீடு எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவு இன்சூரன்ஸும் முக்கியம்" என்று அவர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications