"எனக்கு எதிரிகள் யார் தெரியுமா.." வெளிப்படையாக பேசிய ஆளுநர் ரவி.. சட்டுனு கவனித்த பார்வையாளர்கள்
சென்னை: இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி, பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். அப்போது எதிரிகள் யார் என்ற கேள்விக்கு அவர் வெளிப்படையாகப் பதிலை அளித்தார்.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே சில காலமாகவே மோதல் தொடர்ந்து வருகிறது. தமிழக அரசின் செயல்பாடுகளை ஆளுநர் விமர்சிக்கும் நிலையில், ஆளுநரை அரசு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
கடந்த சில காலமாக இரு தரப்பும் விமர்சிப்பது சற்றே குறைந்துள்ளது. இதற்கிடையே இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ரவி: சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று காலை தொழில் முனைவோர்கள் கலந்து கொள்ளும் எண்ணித் துணிக திட்டத்தின் சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி அங்குக் கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "இங்கே உலகில் இருக்கும் அனைவருக்கும் இரண்டே இரண்டு ஆசைகள் தான். ஒன்று நம்மைப் பற்றிப் புகழ வேண்டும் என அனைவரும் நினைப்பார்கள்.. மற்றொன்று அதிகப் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பது.
பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு.. நமது நாட்டில் அதிகப் பணத்தை வைத்திருந்தாலே அவர்கள் தவறான செயல்கள் செய்தே பணத்தைச் சம்பாதித்து இருப்பார்கள் என்ற தவறான பார்வை உறுவானது. இங்கே அனைவருக்கும் பணம் தான் முக்கியம்.. அதேநேரம் அதிக சொத்து சேர்க்க வேண்டும் என்ற பேராசை இருக்கக் கூடாது. அந்த பேராசை இல்லாமல் ஒருவர் தனது வருமானத்தை அதிகரிக்க முயன்றால் அதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
பிரச்சினை: இத்தனை காலம் நாம் எங்கே பிரச்சினை உருவாகிறது என்பதைக் கண்டறியாமலே பிரச்சினைகள் உருவான பிறகு அதைச் சரி செய்ய மட்டும் நடவடிக்கை எடுத்தோம். இதன் காரணமாகவே நாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டது. பிரச்சினைகளைச் சரி செய்யவும் நீண்ட காலம் ஆனது. அதேநேரம் இன்று பிரதமராக இருக்கும் மோடி பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து அதைச் சரி செய்து வருகிறார்.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தீர்கள் என்றால்.. நமது நாட்டில் புது தொழில் முனைவோர் என்பது விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இருக்கும். ஆனால், அதன் பிறகு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கையால் இன்று அதிகளவில் நாம் தொழில் முனைவோர்களை உருவாக்கி வருகிறோம். இன்று சர்வதேச அளவில் அதிக தொழில்முனைவோர்களைக் கொண்ட நாடுகளில் 3ஆவது இடத்தில் நாம் இருக்கிறோம். பொதுமக்கள் மீது அரசு வைத்த நம்பிக்கை தான் இதற்குக் காரணம்.

எதிரிகள் யார்: இந்தியா பொருளாதார ரீதியாக இப்போது வேகமாக வளரவும் இதுதான் காரணம்.. தொழில்முனைவோராக இருக்கும் நீங்கள் தோல்வியைக் கண்டு எப்போதும் பயப்படக் கூடாது. ஏனென்றால் அந்த தோல்வி தான் நம்மை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். இதனால் தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல்.. என்ன தவறு செய்தோம் என்பதைக் கண்டறிந்து அதைத் திருத்திக் கொள்ள முயலுங்கள். ஏனென்றால் தொழில் முனைவோர்கள் தான் நமது நாட்டின் சொத்துக்கள்..
என்னைப் பார்க்கும் பலரும் உங்களுக்கு வேலைப் பளு அதிகமாக இருக்குமோ என்பார்கள். ஆளுநர் என்றால் நிறைய வேலை இருக்கும் என்று மக்களிடையே இருக்கும் மாயை தான் இதற்குக் காரணம்.. ஆனால் உண்மையில் எனக்கு வேலை அதிகமாக இல்லை. அதேபோல அதிகாரமும் இல்லை.. " என்றார். மேலும் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நபர்களை மட்டுமே தான் எதிரியாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications