"மாட்டிக்கிடுச்சே".. பாஜக "வளையத்தில்" வரும் திமுக புள்ளி.. தென் மாவட்ட தலைவராமே.. பரபரக்கும் கோட்டை

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்பி தேர்தல் நெருங்கி வரும்நிலையில், அடுத்த அஸ்திரத்தை பாஜக எடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.. இதனால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பி உள்ளது.

அதிமுகவை விட திமுகவை கடுமையாக எதிர்த்து வருகிறது பாஜக.. "மதவாத பாஜக" என்றே முதல்வர் ஸ்டாலினும் விமர்சித்து வருகிறார். எனவே, அசுர பலத்தில் உள்ள திமுகவை வீழ்த்த, மிகப்பெரிய கூட்டணியை கட்டமைக்க வேண்டிய அவசியத்தை பாஜக உணர்ந்துள்ளது.. அதனால்தான், ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தில் உறுதியாக இருந்து வருகிறது.

Who are the next target and How is BJP going to defeat DMK

மற்றொருபுறம் திமுகவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் சட்ட விரோத பணபரிவர்த்தனை செய்தவர்கள் யார்-யார் உள்ளனர்? என்ற லிஸ்ட்டையும் எடுத்து வருகிறது.

விசாரணை: இந்த லிஸ்ட்டில் ஒவ்வொருவர்களை குறிவைத்து, தன்னுடைய அரசியல் நகர்வை ஆரம்பித்துள்ளது.. இப்போதைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி + அவரது தம்பி அசோக் மீதான நடவடிக்கைகள் பாய்ந்துள்ளது.. இவர்களின் பணபரிவர்த்தனை தொடர்பான விவரங்களையும் சேகரித்து வைத்துள்ள நிலையில், அதை பற்றின விசாரணையை அமலாக்கத்துறை இன்னும் ஆரம்பிக்கவில்லை.

எப்படியும் 3 மாதம் கழித்தாவது, டெல்லிக்கு அவரை கொண்டு சென்று விசாரிப்பார்கள் என்று பாஜகவினர் சொல்லி வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் நடந்த பண மோசடி தொடர்பாகவே அவர் கைதாகி உள்ளார்.. இனி, திமுக ஆட்சியில், 2 ஆண்டு காலத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை கையாண்ட விதம் குறித்த விசாரணையும் அடுத்தடுத்த பாயப்போகிறதாம்.
தென்மாவட்டம்: இதனிடையே, தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு திமுக அமைச்சரை, தங்கள் பக்கம் இழுக்க பாஜக தரப்பில் தூது விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. அந்த அமைச்சர் மீதுள்ள வழக்குகளை வைத்து, அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துவிட முயற்சி எடுக்கப்பட்டதாகவும், இதற்காக அவருடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் அந்த அமைச்சர் பிடி கொடுக்காமல் நழுவி கொண்டிருப்பதாகவும் சலசலக்கப்படுகிறது.

இப்படி திமுகவில் உள்ள அமைச்சர்களை, இழுக்க பல்வேறு முயற்சிகளை பாஜக கையில் எடுத்துள்ளதாம்.. எனினும், ஆளும் கட்சி அமைச்சர்களை, இப்படி இழுப்பது என்பது மற்ற மாநிலங்களை போல, தமிழகத்திலும் சாத்தியமாகுமா என்று தெரியவில்லை..

ரெய்டு பாயலாம்: ஒருவேளை தங்கள் வசம் வராதபட்சத்தில், அடுத்தடுத்த குறிகள் பாயும் என்றும் சொல்கிறார்கள். ஏற்கனவே இது தொடர்பாக சிலரது பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன.. குறிப்பாக, டாப் 2 அமைச்சர்கள் பெயர்கள் அடிபடுகிறதாம்.. இதில், ஒருவர் கொலை முயற்சி வழக்கில் சிக்கியவராம்.. மற்றொருவர் பொறியியல் கல்லூரி வைத்து நடத்தி வருபவராம்.. இது தொடர்பான வழக்கு விசாரணைகள் ஏற்கனவே நீதிமன்றங்களில் தொடர்ச்சியாக நடந்து வரும்நிலையில், கூடிய சீக்கிரம் சம்பந்தப்பட்ட இடங்களிலும் ரெயிடு பாயலாம் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+