இப்ப தானே அன்புமணி வந்தாரு.. உடனே "2 புள்ளிகள்".. பறந்து வந்த உத்தரவு.. கதிகலங்கி போன நிர்வாகிகள்
அன்புமணி ராமதாஸ், 2 பாமக மாவட்ட செயலாளர்கள் பதவி பறித்துள்ளார்
சென்னை: பொறுப்புக்கு வந்த 2 நாளிலேயே அன்புமணி ராமதாஸ் எடுத்த அதிரடி, பாமகவுக்குள் கலக்கத்தையும், அதேசமயம் சுறுசுறுப்பையும் பாய்ச்சி வருகிறது.
கடந்த சனிக்கிழமை, பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இளைஞரணிச் செயலாளராக இருந்த அன்புமணி ராமதாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், அன்புமணியை தலைவராக சொந்த கட்சிக்குள்ளேயே பலர் ஏற்கவில்லை என்று தெரிகிறது.. இதுதொடர்பான அதிருப்திகளும் பெருகி வருகின்றன.

பாமக 2.0
எனினும், தலைவராக பொறுப்பேற்ற அன்று, நிர்வாகிகளிடம் அன்புமணி பேசிய பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்தது.. "பாமக 2.0-வை செயல்படுத்துவோம்... பாமகவை எந்த கட்சிகளுடன் ஒப்பிட முடியாது.. காரணம், இதுஒரு வித்தியாசமான கட்சி.. யாராவது தவறாக நடந்துகொண்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.. கறார்தன்மை காட்டப்படும்.. அதனால், அனைத்து நிர்வாகிகளுமே நேர்மையாக செயல்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டு காளை
100 சதவீதம் கட்டப் பஞ்சாயத்து, ரவுடித்தனம் இது எதுவுமே இருக்க கூடாது. நான் கட்சிக்காகவும், தமிழக மக்களுக்காகவும் ஓயாமல் உழைப்பேன்... 2026-ல் தமிழகத்தில் நிச்சயம் பாமக ஆட்சி அமைக்கும். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால், ஜல்லிக்கட்டு காளையைப்போல ஓடிவருவேன்" என்று கூறியிருந்தார்.. அத்துடன், தலைவராக பொறுப்பேற்றதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்துக்களையும் அன்புமணி பெற்று வருகிறார்.

வாழ்த்துக்கள்
ஒருபக்கம் தமிழக தலைவர்களிடம் வாழ்த்தையும் ஆசியையுயும் பெற்றுக் கொண்டே, இன்னொரு பக்கம் தன் நிர்வாகிகளிடம் சவுக்கை எடுத்துள்ளார் அன்புமணி.. அன்று முதல்நாள் மீட்டிங்கில் பேசியதைபோலவே, 2 மாவட்டச் செயலாளர்களின் பதவிகளை அதிரடியாக பறித்துள்ளார்.. இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது:

2 நிர்வாகிகள்
"சென்னை மந்தவெளியை சேர்ந்த ர.ஸ்ரீராம் ஐயர் என்பவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், கட்சியின் நலன் கருதி இவர் வகித்து வந்த தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலோடு இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். இனி இவர் கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருப்பார். அதேபோன்று, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்பவர், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அரவணைப்பு
கட்சியின் நலன் கருதி இவர் வகித்து வந்த வடசென்னை மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். இனி இவர் கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருப்பார்" என்று அதில் அன்புமணி தெரிவித்துள்ளார். தலைமை பொறுப்புக்கு வந்து 2 நாள்கூட ஆகல.. அதுக்குள்ளேயே அன்புமணி 2 பேரை தூக்கிவிட்டதால், மற்ற நிர்வாகிகள் வெலவெலத்து போயுள்ளனர். இந்த கண்டிப்பும், அரவணைப்பும் பாமகவின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications