சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நயினாரா?" அந்த 2 எம்எல்ஏக்கள் யார்.. தூக்கமின்றி தவிக்கும் பாஜக.. நிஜமாகவே திமுக தட்டி தூக்கிடுமோ?

நயினார் நாகேந்திரன் திமுக பக்கம் செல்ல போகிறாரா என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: செந்தில்குமார் எம்பி சொன்ன, அந்த 2 பாஜக எம்எல்ஏக்கள் யார் என்ற கேள்வி தமிழக அரசியல் களத்தில் வெடித்து கிளம்பிய நிலையில், அதுகுறித்த முக்கிய சீக்ரெட் ஒன்று கசிய துவங்கி உள்ளது.

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா, திடீரென தந்தைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி வெளியேறினார்.

அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பிச்சு எடுக்கும்.. இன்று எங்கெல்லாம் பெய்யும்? ரிப்போர்ட் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பிச்சு எடுக்கும்.. இன்று எங்கெல்லாம் பெய்யும்? ரிப்போர்ட்

ஆனால், வெளியேறிய கையோடு தமிழக பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.. இதை பாஜகவினர் பெருமையாக கொண்டாடவும் செய்தனர்.

தர்மபுரி

தர்மபுரி

ஆனால், எந்த பொறுப்பிலுமே இல்லாத ஒருவரை, மடக்கிவிட்டோம், இழுத்துகொண்டோம் என்று பாஜகவினர் பூரிப்பதை பலர் விமர்சிக்கவும் செய்தனர்.. பிறகு திடீரென திமுகவின் தர்மபுரி எம்பி ட்விட்டரில் "திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜகவிற்கு ஒரு தகவல். உங்கள் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம்" என்று பதிவிட்டிருந்தார்.

 நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

செந்தில்குமார் இப்படி சொன்னது, தீயாய் பரவியது.. அவர்கள் யாராக இருக்கும்? என்ற கேள்வி பாஜகவையும் சேர்த்து பிடித்து கொண்டுவிட்டது.. இது சோஷியல் மீடியாவில் விவாதமாகவும் உருவானது.. இப்போதைக்கு 4 பேர்தான் எம்எல்ஏக்கள் உள்ளனர்.. அதில், ஒருவர் வானதி சீனிவாசன்.. இவர் ஆரம்பத்தில் இருந்தே பாஜக விசுவாசி.. தேசிய பொறுப்பில் உள்ளவர்.. திமுகவை சட்டசபையில் விடாமல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் மிக முக்கியமான எம்எல்ஏ இவர்தான்.. போதாக்குறைக்கு, "தூக்கி பாருங்கள்" என்று செந்தில்குமாருக்கு சவால் விட்டுள்ளார். அதனால், நிச்சயம் வானதியாக இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையே.

 காந்தி எம்எல்ஏ

காந்தி எம்எல்ஏ

எம்எல்ஏ காந்தியை பொறுத்தவரை தீவிரமான பாஜக விசுவாசி.. இல்லாவிட்டால், நாகர்கோவில் தொகுதியில் 6 முறையும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்திருக்க மாட்டார்.. 7வது முறை இப்போதுதான் வெற்றி பெற்றுள்ளார்.. திமுக வேட்பாளர் சுரேஷ் ராஜன் 5887 வாக்குகள் என்றால், காந்தி 74058 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றிருந்தார்.. தோற்றாலும் பரவாயில்லை என்று இத்தனை காலமும் விடாமல், கட்சிக்கு விசுவாசமாக இருந்த நிலையில், காந்தி மீதும் யாருக்கும் சந்தேகம் தற்போது எழவில்லை.

நயினார்

நயினார்

மிச்சம் இருப்பது நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி சரஸ்வதி ஆகியோர் தான்... இவர்களை முன்னிறுத்திதான் சந்தேகங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.. ஆனால், நயினாரை பொறுத்தவரை, அதிமுகவில் செல்வாக்குடன் திகழ்ந்ததுபோலவே, பாஜகவிலும் அதே செல்வாக்குடன் வலம் வருகிறார்.. இவர் பாஜகவில் தாவிய உடனேயே மிகப்பெரிய பொறுப்பை கட்சி மேலிடம் தந்து அழகு பார்த்தது.. இப்போதுகூட சட்டப்பேரவைக் குழுத் தலைவராக பதவி வகிக்கிறார்..

 நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

எல்லாவற்றிற்கும் மேலாக, அண்ணாமலையை புகழ்ந்து பேசி, அதிமுக உறுப்பினர்களுக்கு ஆண்மை இல்லை என்று பகிரங்கமாகவே சொல்லியவர்.. சட்டசபையில் திமுகவை சில சமயம் இவர் புகழ்ந்து பேசியது உண்டு.. ஆனால், அவை அரசியல் நாகரீகத்தின் அடிப்படையாக இருக்குமே தவிர, கட்சி தாவலுக்கான அடித்தளமாக இருக்காது என்கிறார்கள். மொடக்குறிச்சி சரஸ்வதி, வெற்றி பெற்றாலும்கூட சத்தமே இல்லாமல் இருந்து வருகிறார்.. இவருக்கும் வாய்ப்பு குறைவு என்றே சொல்கிறார்கள்..

 2 எம்எல்ஏக்கள் யார்?

2 எம்எல்ஏக்கள் யார்?


அப்படி என்றால் அந்த 2 பேர் யார்? பாஜகவை சீண்டி பார்க்க, செந்தில்குமார் இப்படி சொன்னாரா? அல்லது நிஜமாகவே 2 பேர் திமுக பக்கம் வர தயாராக இருக்கிறார்களா? என்று தெரியாமல் திடீர்குழப்பம் உருவானது.. பொதுவாக இப்படி மாற்று கட்சி விஐபிக்களை திமுக பக்கம் இழுத்து வரும் அசைன்மென்ட்டை செய்து முடிப்பது செந்தில்பாலாஜி என்பது தெரிந்த விஷயம் தான் என்றாலும், இந்த விஷயத்திலும் அவரது ஈடுபாடு இருக்குமோ? என்ற ஐயமும் எழுந்தது..

 அமைச்சர் பதவி

அமைச்சர் பதவி

ஆனால், செந்தில்குமார் சொன்ன தகவல் உண்மைதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. நிஜமாகவே அந்த 2 பேரில் ஒரு பாஜக பிரமுகரிடம் திமுக தரப்பில் பேச்சுவார்த்தை டீலிங்கும் நடந்ததாம்.. "திமுக பக்கம் வந்துவிடுங்கள், இடைத்தேர்தலில் நிற்க வைத்து, அமைச்சர் பதவியும் தருகிறோம்.. உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிடுங்கள்" என்று சீக்ரெட் பேரமும் நடத்தப்பட்டதாம்.. அதற்கு அந்த பாஜக புள்ளி, முன்கூட்டியே அமைச்சராக்குங்கள், அதன்பிறகு ராஜினாமா செய்கிறேன் என்று சொன்னாராம்.. ஆனால், திமுக தரப்பில் எந்தவித முடிவும் இதற்கு சொல்லப்படவில்லையாம்..

 முக்கியத்துவம்

முக்கியத்துவம்

எனினும், இப்படி ஒரு டீலிங் நடந்த விஷயம் பாஜக மேலிடத்துக்கு பறந்துள்ளதாகவும், அதனாலேயே அந்த பிரமுகருக்கு எந்த பொறுப்பும் தரப்படாமல், முக்கியத்துவமும் தரப்படாமல், தற்போது புறக்கணித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.. எப்படி பார்த்தாலும் இதற்கு விடையே தெரியவில்லை.. அதற்கேற்றபடி, திமுகவில் அமைச்சரவையில் மாற்றம் என்றும் கூறப்பட்டது.. அதுவும் இன்னும் நடந்து முடியவில்லை.. ஆக மொத்தம், பாஜகவுக்கு தூக்கம் போனதுதான் மிச்சம்.. சம்பந்தப்பட்டவர்களே வாயை திறந்து சொன்னால்தான் உண்டு.. யார் அந்த 2 பேர்!?

English summary
Who are those two bjp mlas and Is Nainar Nagendran going to DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X