உல்லாசமே முக்கியம்.. ஜேசிபி மிஷினை கையில் எடுத்த தெலுங்கானா கல்பனா.. கணவருக்காக மனைவி வெட்டிய குழி
சென்னை: தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி பகுதியில் நடந்துள்ள ஒரு கொடூரமான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அரங்கேறிய இந்த சம்பவம், தற்போது அந்த பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.. இளம் பெண்ணுக்கு இவ்வளவு தைரியமா? இந்த அளவுக்கு கல்நெஞ்சக்காரராக இருப்பாரா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.. இந்த கொலையின் பின்னணியில் மறைந்திருக்கும் அதிர்ச்சிகரமான தகவல்கள் குறித்து சுருக்கமாக இங்கே காண்போம்..
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் கங்காபூரை சேர்ந்த தம்பதி முத்தியம் ரெட்டி-கல்பனா.. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்..

கல்பனா செய்த பிளான்
கல்பனா நாராயன்கேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றுகிறார்.. அங்கு பணியாற்றும் சிண்டு என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. சிறிது காலமாக இவர்கள் ரகசியமாக சந்தித்து ஜாலியாக ஊர் சுற்றி வந்தனர்..
இந்த நிலையில் தாங்கள் சேர்ந்து இருக்க கணவர் தடையாக இருப்பதாக எண்ணிய கல்பனா. அவரை தீர்த்துக்கட்ட சிண்டுவுடன் சேர்ந்து திட்டமிட்டார்.. இதற்கான சந்தர்ப்பத்துக்காகவும் கல்பனா காத்திருந்தார்.. சில நாட்களுக்கு முன்பு கணவர் முத்தியம் ரெட்டியை தனது காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்தார்..
காதலனுடன் கணவரை கொன்ற மனைவி
பிறகு அங்குள்ள ஒரு மைதானத்தில் அவரது உடலை ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் குழி தோண்டி புதைத்து விட்டனர்.. பின்னர் எதுவும் நடக்காததுபோல.. தனது கணவரை காணவில்லை என்று கல்பனா போலீசில் புகார் செய்தார்.. வழக்கு பதிவு செய்த போலீசார் முத்தியம் ரெட்டியை தேடி வந்தனர்..
போலீசாரின் விசாரணையில் கல்பனாவின் கள்ளத்தொடர்பு தெரிய வந்தது.. அவர்களிடம் துருவித் துருவி விசாரித்தபோது கணவரை கொலை செய்ததை கல்பனா ஒப்புக்கொண்டார்.. அவர் காட்டிய இடத்தில் இருந்து முத்தியம் ரெட்டி உடல் தோண்டி எடுக்கப்பட்டது.. இது தொடர்பாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்..
ஜேசிபி எந்திரம்
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. கணவரையே காதலனுடன் சேர்ந்து மனைவி திட்டமிட்டு கொலை செய்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது..
சம்பவம் நடந்த விதம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.. ஜே.சி.பி. எந்திரத்தை சம்பவ இடத்திற்கு கொண்டு வந்தது யார், இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்..
கள்ளக்காதலனும் கைது
கல்பனாவின் இந்த செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.. குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல்களை தீர்க்காமல், இதுபோன்ற கொடூரமான பாதையை தேர்ந்தெடுத்தது சமூகத்தில் உள்ள பெண்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று பலரும் சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கணவன் முத்தியம் ரெட்டி மீது அன்பு இல்லாமல் போனது ஒருபுறம் இருந்தாலும், பெற்ற பிள்ளைகளையும் மறந்துவிட்டு, காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்றது மிக பெரிய குற்றமாகும் என்றும் கொந்தளித்து கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல, நாளுக்க நாள் அதிகரித்து வரும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் விடாமல் வலியுறுத்தி வருகின்றனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications