இவ்வளவு நாள் ஆண்டவங்களால செய்ய முடியாததை... உடனே விஜய் எப்படி செய்வார்? குஷ்பூ ஓபன் டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கும் நிலையில், முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜயை பல்வேறு தரப்பினரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பாஜக மாநில துணைத் தலைவரும் நடிகையுமான குஷ்பு சுந்தரும் இன்று முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, அந்த சந்திப்புக்கு பிறகு குஷ்பு பகிர்ந்த உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Khushbu Sundar Vijay Tamil Nadu Politics Vijay

நடிகை குஷ்பு பேட்டி

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடிகை குட்டி பத்மினி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சென்ற குஷ்பு, முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, சின்னத்திரை துறையினர் சந்தித்து வரும் பிரச்சனைகளையும் முன்வைத்ததாக கூறினார். தயாரிப்பாளர்கள் பல்வேறு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக எடுத்துரைத்ததாகவும், அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் விஜயும், அமைச்சர் ராஜ்மோகனும் உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.

குஷ்பூ ஓபன்

ஆனால் இந்த சந்திப்பில் அதிக கவனம் ஈர்த்தது குஷ்புவின் தனிப்பட்ட எமோஷனல் வெளிப்பாடுதான். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னுடைய தம்பி விஜயை அந்த இடத்தில் பார்த்ததும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். என்னை பார்த்ததும் 'தீதி' என்று அழைத்து கட்டிப்பிடித்தார். அது எனக்கு உண்மையிலேயே மிகப்பெரிய மகிழ்ச்சி" என்று கூறினார்.

விஜய் மற்றும் குஷ்பு இடையிலான இந்த நெருக்கமான தருணம் அரசியல் தளத்திலும் சினிமா வட்டாரத்திலும் பலவிதமான பேசுபொருள்களை கிளப்பியுள்ளது. ஒரு காலத்தில் சினிமாவில் சக நடிகர்களாக இருந்தவர்கள், இன்று ஒருவர் மாநிலத்தின் முதல்வராகவும் மற்றொருவர் தேசிய கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும் சந்தித்திருப்பது கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.

விஜய் பற்றி குஷ்பு பேச்சு

விஜயின் அரசியல் பயணம் குறித்து குஷ்பு பேசும்போது "தமிழகத்தில் நிச்சயமாக பெரிய மாற்றம் வரும். தற்போது ஒரு தெளிவான அரசு அமைந்துள்ளது. அனைவரும் வேலை செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்து செயல்படுகிறார்கள். மாமன், மச்சான், சொந்தங்கள் என்று பார்க்காமல் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் கவனம் இருக்கிறது" என்று பாராட்டினார்.

இதோடு, சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த சிறுமி சம்பவம் குறித்தும் குஷ்பு கருத்து தெரிவித்தார். "இது மிகவும் வேதனையான சம்பவம். சமூகத்தில் இப்படிப்பட்ட மிருகங்கள் இன்னும் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. ஆனால் முதல்வராக பொறுப்பேற்ற உடனே எல்லாவற்றையும் சரி செய்து விட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது" என்று கூறினார்.

முதல்வர் விஜய்க்கு சப்போர்ட்

மேலும், "பல ஆண்டுகளாக இரு முக்கிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தும் செய்ய முடியாத மாற்றத்தை பத்து நாட்களில் எப்படி எதிர்பார்க்க முடியும்? இப்போதுதான் அவர் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு தேவையான நேரம் கொடுக்க வேண்டும். மக்கள் மாற்றம் வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் அவருக்கு வாக்களித்துள்ளனர்" என்றார்.

நடிகராக இருந்த விஜய், தனது திரை ரசிகர் பலத்தை அரசியல் ஆதரவாக மாற்றி தமிழக அரசியலில் பெரிய சக்தியாக உருவெடுத்தார். ஆரம்பத்தில் அவரது அரசியல் வருகை வெறும் பரபரப்பாக மட்டுமே பார்க்கப்பட்டாலும், பின்னர் திட்டமிட்ட மக்கள் சந்திப்புகள், சமூக பிரச்சனைகள் குறித்த கருத்துக்கள், கட்சி அமைப்பு வேலைகள் ஆகியவற்றின் மூலம் தீவிர அரசியல் முகமாக மாறினார்.

இப்போது முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், அவரது ஒவ்வொரு முடிவும், ஒவ்வொரு சந்திப்பும் அரசியல் ரீதியாக உற்றுநோக்கப்படுகிறது. அந்த வகையில் குஷ்பு போன்ற எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் வந்து வாழ்த்து தெரிவித்து, வெளிப்படையாக ஆதரவு வார்த்தைகள் பேசுவது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

குஷ்புவின் இந்த சந்திப்பு வெறும் மரியாதை சந்திப்பா? இல்லை அரசியல் சிக்னலா? என்ற கேள்வியும் ஏற்கனவே சமூக வலைதளங்களில் கிளம்பி விட்டது. ஆனால் குஷ்பு சொன்ன ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருக்கிறது. விஜயின் புதிய அரசாங்கத்திடம் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+