பிக் பாஸ் போல Second love நிகழ்ச்சி.. இது என்ன கண்றாவி கான்செப்ட்.. விஜய் டிவியை விளாசும் ரசிகர்கள்! இது காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஒரு காலத்தில் குடும்பம் முழுக்க உட்கார்ந்து பார்த்த டிவி சேனல்களில் இப்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்த்தால் என்னம்மா இப்படி பண்றீங்களேமான்னு சொல்ல தோணுது. டிவிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் கூட இப்போதெல்லாம் சோசியல் மீடியாவில் மீம்ஸ்களுக்கும் ட்ரோல்களுக்கும் முக்கிய கண்டண்டாக மாறிவிட்டன. அந்த பட்டியலில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பது விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கும் second love நிகழ்ச்சி தான்.

இந்த செகண்ட் லவ் (Second love) நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியான சில மணி நேரங்களில் இது என்ன கான்செப்ட் என்ற கேள்விகள்தான் எல்லோருக்குமே வருகிறது. இந்த நிகழ்ச்சியில் காதலில் தோல்வி அடைந்தவர்கள், விவாகரத்து பெற்றவர்கள் என 6 ஆண்களும், 6 பெண்களும் ஒரு பெரிய பங்களாவில் 35 நாட்கள் ஒன்றாக தங்க வைக்கப்படுகிறார்கள்.

vijay tv second love ramya krishnan

Second Love நிகழ்ச்சி ப்ரோமோ

ஏற்கனவே இந்த சம்பவங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்திருக்கிறது. ஆனால் அங்கே போய் பலர் காதலில் விழுந்திருக்கிறார்கள். அதையே இப்போ இவர்கள் கண்டன்ட்டாக எடுத்து புதிய காதலர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நாடு எங்கம்மா போயிட்டு இருக்கு என்று பலரும் இதை பார்த்து நொந்து கொள்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே இந்த நிகழ்ச்சியிலும் பல டாஸ்க், எமோஷனல் மோதல்கள் எல்லாவற்றையும் வைத்து புதிய காதல் மலர்கிறதா? என்பதுதான் நிகழ்ச்சியின் மையக்கருவாம். இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். போட்டியாளர்களுடன் நடிகை ஸ்ருதிகா அர்ஜுனும் முக்கிய பங்கில் இருப்பதாக தெரிகிறது. ஆனால் அவர் தொகுப்பாளரா? அல்லது போட்டியாளர்களின் பெரிய தல கட்டா என்று தெரியவில்லை.

ஸ்ருதிஹா மட்டுமல்ல பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை போட்டே டைட்டில் வெற்றி பெற்ற அசீமும் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்து விட்டதால் இரண்டாவது காதல் இந்த நிகழ்ச்சியில் உருவாகுகிறதா? என்று விபரீத முடிவு எடுத்திருக்கிறார்கள் போல என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

மீண்டும் அசீம்

ஆனால் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவில் வந்த காட்சிகள் தான் பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோவிலேயே ஒரு போட்டியாளர், "இதை நான் 18+ டாஸ்க்காக இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் என்று நினைத்தேன்" என்று சொல்லும் காட்சிகளும் இருக்கிறது. அதுபோல இன்னொரு பெண் போட்டியாளர் என்னால இப்படிப்பட்ட டாஸ்க்கில் கலந்து கொள்ள முடியாது என்று அதிலிருந்து விலக்குகிறார்.

ஏற்கனவே இப்பல்லாம் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் மாறுது. ஆனால் அதையே இவங்க ஒரு ரியாலிட்டி ஷோவாகவும் காட்டத் தொடங்கி விட்டார்கள். சமூகத்தில் விவாகரத்து, பிரேக் அப், மன அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் அதை தீர்ப்பதற்கான தீர்வை தேடுவதற்கு பதிலாக மோசமான முன் உதாரணத்தை காட்ட இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் என்று பலர் திட்டி தீர்த்து வருகின்றனர்.

vijay tv second love ramya krishnan

செகண்ட் லவ் நிகழ்ச்சி ப்ரோமோ

இன்னும் ஒரு சிலர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே 18+ கண்டன்ட் தாராளமாக காட்டப்படும் போது இந்த நிகழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்குமே? இதையெல்லாம் குடும்பமாக வீட்டில் டிவி சேனல்கள் பார்க்கும்போது குழந்தைகள் பார்த்தால் என்ன ஆகிறது என்றும் நொந்து கொள்கிறார்கள்.

காரணம் இந்த நிகழ்ச்சியை குடும்பத்தினர் யாரும் பார்க்கவில்லை என்றாலும் வேற நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போது கூட சம்பந்தப்பட்ட டிவி சேனல்களில் இடை இடையே ப்ரோமோ காட்டப்படும். அதை விருப்பம் இருக்கிறதோ இல்லையோ குழந்தைகளும் பார்க்கக்கூடும் என்பது பெற்றோரின் வருத்தம்.

செகண்ட் லவ் நிகழ்ச்சி போட்டியாளர்கள்

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய போது கூட அதில் பல பிரபலங்கள் குட்டையான உடை போடுகிறார்கள் என்று பல விமர்சனங்கள் வந்தது ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி பல சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

அதேபோல இப்போ இந்த செகண்ட் லவ் நிகழ்ச்சிக்கும் ப்ரோமோ வெளியானதும் அதிகமான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த நேரத்தில் இதை நிறுத்த போகிறார்களா? அல்லது நீங்க என்ன வேணாலும் செய்யுங்கப்பா நாங்க இப்படித்தான் என்று இதிலும் டிஆர்பி அள்ள போகிறார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம் மக்களே. இந்த நிகழ்ச்சி பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+