காந்தியின் இறப்பை கொண்டாடியது யார்? ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவாரா? செல்வபெருந்தகை கேள்வி!
சென்னை: மகாத்மா காந்தியின் இறப்பை யார் கொண்டாடியது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவாரா என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். காந்தி கொல்லப்பட்ட செய்தி வெளியானதும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பின்ர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடியதாக கூறிய அவர், தேசத்திற்கு காந்தி தேசம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று பெரியார் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் நினைவு நாளான இன்றும் அவர் கேலி செய்யப்பட வேண்டுமா என்று ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை தரப்பில், மகாத்மா காந்தியின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளன்று காந்தி மண்டபத்தில் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வருகிறேன்.

ஆனால் அந்த கோரிக்கையை மு.க.ஸ்டாலின் ஏற்க மறுக்கிறார். காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார் என்றும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். அதில், தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான இடங்களின் வரலாற்றை அறிந்து கொள்ளவேண்டும். கிண்டியில் 27 ஜனவரி 1956 அன்று ராஜரத்தினம் நாதஸ்வரம் வாசிக்க, சுப்புலக்ஷ்மி ரகுபதி ராகவ பஜனை செய்ய, அப்போதைய மதராஸ் முதல்வர் ராஜகோபாலாச்சாரியால் காந்தி நினைவகம் திறக்கப்பட்டது.
அதுவே பின் நாளில் மக்களால் காந்தி மண்டபம் என அழைக்கப்பட்டு பெயரானது. ஆளுநர், ஆட்சியாளர்கள் தான் சொல்வதை கேட்டே ஆகவேண்டும் என்னும் மனநிலையில் இருந்து விலகவேண்டும். காந்தியடிகளின் நினைவுதினம், ஒவ்வொரு வருடமும் எக்மோர் அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதே ஆளுநர் கடந்த 2023 வருடம் முதல்வருடன் காந்தியடிகளின் நினைவுதினத்தில் மரியாதை செலுத்தினார். காந்தியின் இறுதிக்காலத்தில் அவரது தனிச்செயலாளராக இருந்த தியாரே லால் நய்யார் தாம் எழுதிய 'மகாத்மா காந்தி கடைசிக் கட்டம்' என்ற நூலில் வெள்ளிக்கிழமையன்று நல்ல செய்தி வரும். எனவே ரேடியோவை தொடர்ந்து கேட்கவும் என்று ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் சில இடங்களில் ஏற்கெனவே கூறியிருந்தார்கள்.
அதுமட்டுமல்ல, காந்தி கொல்லப்பட்ட செய்தி வெளியானதும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பல இடங்களில் இனிப்புகளை விநியோகித்து கொண்டாடினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். எந்த சித்தாந்தம் உடையவர்கள் தேசப்பிதாவின் இறப்பைக் கூட கொண்டாடினார்கள் என்று ஆளுநர் சொல்லுவாரா?
தசரா விழாவின் போது அரக்கனான ராவணனை எரிப்பதுபோல, இனிமேல் காந்தி கொல்லப்பட்டதை ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் சுட்டு கொண்டாடப் போகிறோம் என ஊடகங்களிடம் பகிரங்கமாக சொன்னாரே புஜா சகுன் பாண்டே, அவர் எந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்டவர் என்று ஆளுநர் சொல்லுவாரா? தந்தை பெரியார் அவர்கள், காந்தி கொடியவன் கோட்சேவால் சுடப்பட்டு இறந்தவுடன், இந்த தேசத்திற்கு காந்தி தேசம் என்று பெயரிடப்படவேண்டும் என்று கூறியதை ஆளுநருக்கு நினைவு படுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications