மத்திய கைலாஷ் அடையாறு பாலத்தின் உச்சியில் அபாயகரமான வளைவு.. வடிவமைத்தது யார்?
சென்னை: சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் L வடிவ மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. அனைத்து பணிகளையும் முடித்து, பிப்ரவரியில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தை வடிவமைத்தது யார்.. பாலத்தின் உச்சியில் ஒரு அபாயகரமான வளைவு, ஒரு சிறிய தவறு செய்தாலும் நீங்கள் நிச்சயம் காலி என்று நெட்டிசன்கள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர்.
சதீஷ் என்ற நெட்டிசன் வெளியிட்ட பதிவில், இந்தக் குப்பையை வடிவமைத்த அந்த முழு முட்டாள் யார்? ஒரு பாலத்தின் உச்சியில் ஒரு அபாயகரமான வளைவு, ஒரு சிறிய தவறு செய்தாலும் நீங்கள் நிச்சயம் காலி. இது ஒரு பாலம் அல்ல, இது ஒரு தற்கொலை மேடை. முட்டாள்களால் வடிவமைக்கப்பட்டு, முட்டாள்களால் அங்கீகரிக்கப்பட்டு, பொதுப் பாதுகாப்பைப் பற்றிச் சற்றும் கவலைப்படாத ஒரு அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டுள்ளது" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

கவின் பிரசன்னா இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், இது உண்மையில் ஒரு அற்புதமான பாலம்!! அதற்கான ஆதாரங்களுக்குக் கீழே உள்ள பாயிண்டுகளை பார்க்கலாம்
1. எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒரு வழிப் பாலம்.
2. பாலத்தின் மீது முந்திச் செல்ல அனுமதி இல்லை (இரண்டு பேருந்துகள் பக்கவாட்டில் செல்லுமளவிற்கு இது அகலமாக இல்லை).
3. அண்ணா சாலையில் உள்ளதைப் போல இரும்புத் தூண்களால் ஆன பாலம் இல்லாமல், இது ஒரு கான்கிரீட் பாலமாக இருப்பதற்காவது மகிழ்ச்சி அடையுங்கள். (சென்னை போன்ற கடற்கரை நகரத்தில் இரும்புப் பாலம் துருப்பிடித்துவிடும்).
4. இந்தப் பாலம் மக்களின் ஓட்டுநர் திறனைச் சோதிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது; லஞ்சம் கொடுத்து ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் யார் என்பதை இது காட்டிவிடும்.
சேலத்தில் பிரபல நகைக்கடையில் தங்க நகை சீட்டு போட்டவர்களுக்கு இன்று நடந்த பெரிய ட்விஸ்ட்
5. இந்தப் பாலம், ஐஐடி மெட்ராஸ் பகுதிக்குச் சற்று முன்னால் போக்குவரத்து நெரிசலை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது மக்களின் பொறுமையையும், போக்குவரத்து காவல்துறையினரின் திறமையையும் சோதிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்காக அரசாங்கத்தைக் குறை கூறாதீர்கள். இது ஒரு அற்புதமான பாலம், இது மக்களின் நலனுக்காகவே கட்டப்பட்டது" என்று கிண்டல் செய்து விமர்சித்துள்ளார்.
அதேநேரம் இந்த மேம்பாலம் இப்படி கட்டப்பட்டதற்கு பின்னால் சில காரணங்கள் உள்ளதையும் சில நெட்டிசன்கள் பட்டியலிட்டுள்ளனர். அவர்களின் கருத்துப்படி, மத்திய கைலாஷ் சந்திப்பு என்பது மிகவும் குறுகலான மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். அங்கு ஒரு மேம்பாலம் கட்டும்போது, ஏற்கெனவே இருக்கும் கட்டிடங்கள், அருகே உள்ள கோயில் மற்றும் மெட்ரோ ரயில் தூண்களை இடிக்காமல் பாலத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் நெடுஞ்சாலைத் துறைக்கு இருந்தது. இந்த இட நெருக்கடியால் தான் அந்த வளைவு மிகக் கூர்மையாக அமைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.
வழக்கமாக இதுபோன்ற கூர்மையான வளைவுகள் இருக்கும் பாலங்களில் வேகத்தடைகள் அல்லது 'ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ்' அமைக்கப்படும். வாகனங்களின் வேகத்தை 20 - 30 கி.மீ ஆகக் குறைக்க எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுவது வழக்கம்.பிரதிபலிப்பான்கள் மற்றும் சிதறாத தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படும் அப்படித்தான் பாலம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications