பெருங்களத்தூர் பாலத்தை டிசைன் செய்தது யாரு சார்..பல்லாவரம் நிலைமை தானா? நெட்டிசன் விளக்கும் சிக்கல்
சென்னை: பெருங்களத்தூர் மேம்பாலத்தை நேற்று தான் திறந்தார்கள். ஏற்கனவே செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை பாலம் செயல்பாட்டில் உள்ள நிலையில், தற்போது தாம்பரம் முதல் செங்கல்பட்டு பாலத்தை திறந்துள்ளார்கள். இந்த பாலம் கட்டப்பட்டுள்ள டிசைன் காரணமாக பாலத்துக்கு மேலேயே சிக்னல் போட வேண்டிய நிலைமை வரலாம் என நெட்டிசன்கள் குமுறுகிறார்கள்.
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் செல்ல வேண்டும் என்றால் பெருங்களத்தூர் வழியாகவே போக முடியும். இதேபோல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் செல்ல வேண்டும் என்றாலும் பெருங்களத்தூர் செங்கல்பட்டு வழியாக கள்ளக்குறிச்சியை அடைந்து செல்வது தான் பிரதான வழியாகும். ஒட்டுமொத்தமாக ஜிஎஸ்டி சாலை தான் (திருச்சி சாலை) தமிழ்நாட்டின் 80 சதவீதம் சென்னைக்குள் வரவும் சென்னையைவிட்டு வெளியேறவும் உள்ள ஒரே பாதையாகும்.

துரதிஷ்டவசமாக இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பாதை, என்றோ தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை முழுமையாக மேம்பாலத்தை பாதை போயிருக்க வேண்டும்.ஆனால் அப்படி நடக்கவில்லை.. ஏனெனில் பெருங்களத்தூர் தொடங்கி செங்கல்பட்டு வரை ஒரு மணி நேரம் போகும் வண்டியை கணக்கெடுத்தால் நிச்சயம் புரியும். தமிழ்நாட்டில் எந்த சாலையிலும் இவ்வளவு வாகனங்கள் ஒரே நேரத்தில் போகாது.
இந்த ஜிஎஸ்டி சாலையில் பல்வேறு இடங்களில் மேம்பாலம் இருக்கிறது என்றாலும், நெரிசலை குறைக்க மேம்பாலங்கள் தற்காலிக நிவாரணியாக மட்டுமே உள்ளன. நிரந்தர நிவாரணி என்றால், ஹைதராபாத்தில் உள்ளது போல் பேருந்துகள், கார்கள் நகரத்தை விட்டு வெளியேற உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். அதுதான் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை உள்ள மக்களுக்கும் நிவாரணமாக இருக்க முடியும். ஆனால் இன்று வரை அந்த பணிகள் நடைபெறவில்லை..
சரி இப்போது பிரச்சனைக்கு வருவோம். சென்னையை பொறுத்தவரை பெருங்களத்தூரை தாண்டாமல் நகருக்குள் வரவோ அல்லது நகரை விட்டு வெளியே செல்லவோ முடியாது. தீபாவளி, பொங்கல் உள்பட பண்டிகை நாட்கள் வந்தால், பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசல் கலங்க வைத்துவிடும்.. சென்னையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பெருங்களத்தூர் டிராபிக் எப்போது முடிவுக்கு வரும் என்ற ஏக்கம் இருந்து வந்தது. இதற்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஓரளவு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதேநேரம் வழக்கமான வாகனங்கள் எண்ணிக்கை முன்பை விட பெருங்களத்தூரில் அதிகரித்துள்ளது. கிளாம்பாக்கம் வரை காரில், இருசக்கர வாகனத்தில் சென்று உறவினர்களை வழியனுப்புவது அதிகமாக உள்ளது. இதனால் பீக் அவர்ஸில் வாகன நெரிசல் குறையவில்லை.. இது ஒருபுறம் எனில் பெருங்களத்தூர் மக்களும் மேம்பால பணிகளால் இன்று வரை அவதிப்பட்டு வந்தார்கள்.
பெருங்களத்தூர் ரயில் நிலையம் கிராஸிங் பகுதியில் மேம்பாலங்கள் இல்லாத காரணத்தால் உள்ளூர் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலையும் இருந்தது . இதற்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் 234 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
இந்த பாலங்கள் எப்படி என்றால்,. பெருங்களத்தூர் சீனிவாசா நகரில் இருந்து ரயில்வே கிராஸிங் மேம்பாலமும், பெருங்களத்தூரில் இருந்து காமராஜர் சாலை மார்க்கமாகச் செல்லும் மேம்பாலமும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதேபோல், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் மேம்பாலமும், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் மேம்பாலமும் கட்ட முடிவு செய்யப்பட்டது
இதில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லும் மேம்பாலப் பணிகள் விரைவாக கட்டப்பட்டு, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திறந்தும் வைக்கப்பட்டது. அதேபோல் பெருங்களத்தூரில் இருந்து சீனிவாசா நகர் செல்லும் ரயில்வே கிராசிங் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது. இதனிடையே தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் மேம்பாலம் நேற்று திறக்கப்பட்டது.
இந்த பாலம் எப்படி இருக்கிறது என்றால், ஜிஎஸ்டி சாலையில் செங்கல்பட்டு மார்க்கமாக செல்வோர், பெருங்களத்தூரில் யூடர்ன் அடிக்க முடியும். அதேபோல் தாம்பரம் மார்க்கமாக செல்வோரும் செங்கல்பட்டு சாலையில் இருந்து யூடர்ன் அடிக்க முடியும். இந்த பாலத்தில் தான் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் கனரக வாகனங்களும், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் வாகனங்களும் ஏறி செல்கின்றன. ஒரே நேரத்தில் வாகனங்கள் நான்குபுறமும் வாகனங்கள் வருவதால் மேம்பாலத்தில் பீக் அவர்ஸில் நெரிசல் ஏற்படும் என்றும், சிக்னல் ஏற்படுத்தவேண்டிய நிலை ஏற்படும் என்று வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே பல்லாவரம் குரோம்பேட்டை இடையே உள்ள ரேடியல் சாலை மேம்பாலமும் இப்படித்தான் யூடர்ன் அடிக்கும் வகையில் இருக்கிறது.இந்த மேம்பாலத்தில் இரு மார்க்க செல்வோரும் ஏறி செல்வதால் நெரிசல் அதிகமாக உள்ளது. அதாவது பாலத்திற்கு கீழ் செல்பவர்கள் மேலே செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது. பீக் அவர்ஸில் பல்லாவரம் மேம்பாலம் கடும் நெரிசலை சந்திக்கிறது. அந்த பாலத்தில் சிக்னலே போடும் அளவுக்கு டிராபிக் வருகிறது. எனவே அதேபோன்ற நிலை பெருங்களத்தூரில் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி நெட்டிசன் தான்ஸ் என்பவர் ட்விட்டர் பதிவில் கூறுகையில், "பெருங்களத்தூர் பாலத்தில் நான் கவனித்தது, ரயில்வே ஸ்டேஷனுக்கு அந்தப்புறம் இருந்து வருபவர்கள், பாலத்தில் ஏறி வலது புறம் செல்ல வேண்டுமென்றால், பாலத்தில் ஏறியவுடன் இடதுபுறம் திரும்பி உடனே வலதுபுறம் திரும்ப வேண்டும். அதுபோல சதானந்தபுரத்தில் இருந்து வந்து ஏறி வலதுபுறம் திரும்பி தாம்பரம் சைடு போகணும் என்றாலும் அதே.. ஏறியவுடன் இடதுபுறம் திரும்பி உடனே வலது புறம் திரும்ப வேண்டும்.
சிகப்பு வட்டமிடப்பட்ட பகுதியை கவனியுங்கள்: பாலத்தில் நேராக செல்பவர்கள், வலது புறம் திரும்புபவர்களை பிளாக் செய்வார்கள். பீக் அவரில் பாலத்துக்கு மேல் டிராபிக் ஆகும் என தோன்றுகிறது. தினமும் தாம்பரம் நோக்கி செல்லும் போது காலையில் பாலத்துக்கு மேல் டிராபிக் ஆகிறது, மாலையிலும் தாம்பரம் நோக்கிச் செல்லும் பாதை ட்ராபிக்காக தான் இருக்கிறது.
டிசைன் செய்தவர்கள் யாராக இருந்தாலும் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.. அல்லது இடப்பற்றாக்குறை காரணமாக இப்படி டிசைன் செய்திருக்கலாம், ஆனாலும் இத்தனை கோடி செலவு செய்து செய்யும் பாலத்தில் இது கண்டிப்பாக தவிர்த்து இருக்க வேண்டியது என தோன்றுகிறது" என்று கூறியுள்ளார்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications