உங்க டீமில்.. ஜனநாயகன் படத்தை யார் பார்த்தீங்க? சட்டென நீதிபதி கேட்ட கேள்வி.. அடுத்து நடந்த ட்விஸ்ட்
சென்னை: ஜனநாயகன் பட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. மெட்ராஸ் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில், தணிக்கை வாரியம் (CBFC) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஜனநாயகன் படத்தை யார் பார்த்தது மண்டல அதிகாரி படத்தைப் பார்த்தாரா? எனத் தலைமை நீதிபதி கேட்டார்.
மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) ஏ.ஆர்.எல். சுந்தரேசன் முன்வைத்த வாதங்களில் ஜனவரி 5-ம் தேதி தயாரிப்பாளர் மனுத் தாக்கல் செய்தபோதே, படத்தை 'மறுஆய்வுக் குழுவுக்கு' (Revising Committee) அனுப்பத் தணிக்கை வாரியத் தலைவர் முடிவெடுத்தது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்பாளர் தரப்பு அந்த முடிவை எதிர்த்து வழக்குத் தொடரவில்லை. மாறாக படத்திற்கு சான்றிதழ் வழங்க கேட்டிருந்தனர். ஏற்கனவே நாங்கள் 'மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதை அவர்கள் குறிப்பிடவில்லை.

இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தனி நீதிபதி முன் நடைபெற்றது. ஜனவரி 9-ம் தேதி தனி நீதிபதி தீர்ப்பளித்தார். தயாரிப்பாளர் தரப்பு 'U/A 16+' சான்றிதழ் வழங்க மட்டுமே கோரியிருந்த நிலையில், வாரியத் தலைவரின் உத்தரவைத் தனி நீதிபதி ரத்து செய்தது சரியல்ல. தயாரிப்பாளர் தரப்பு அதை கோரிக்கையாக வைக்கவில்லை.
மேலும் தணிக்கை வாரியத்தின் மண்டல அதிகாரி டிசம்பர் 22-ல் அனுப்பிய கடிதம், 'ஆய்வுக் குழுவின்' (Examining Committee) பரிந்துரை மட்டுமே. அதில் 14 காட்சிகளை நீக்கினால் 'U/A 16+' சான்றிதழ் வழங்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. இது தணிக்கை விதிகளின்படி எடுக்கப்பட்ட இறுதி முடிவு அல்ல, ஒரு இடைக்காலத் தகவல் மட்டுமே.
டிசம்பர் 29-ம் தேதி, டெல்லியில் உள்ள தணிக்கை வாரியத் தலைமையகம், ஜனநாயகம் படத்திற்கு எதிராகப் புகார் வந்துள்ளதால், சான்றிதழ் வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைக்குமாறு மண்டல அதிகாரியைப் பணித்தது. இது ஜனவரி 5-ல் தயாரிப்பாளருக்குத் தெரிவிக்கப்பட்டது.
72 நிமிடங்களுக்கு மேல் ஓடும் படங்களுக்குத் தணிக்கை வாரியத் தலைவரே இறுதி முடிவெடுக்க அதிகாரம் கொண்டவர். இந்தப் படத்தின் விஷயத்தில், வாரியத் தலைவர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று வாதம் வைத்தார்.
நீதிபதிகளின் கேள்விகள்:
டிசம்பர் 22-ம் தேதி கடிதத்தை அனுப்பியது யார்? அது தணிக்கை வாரியத்தின் முடிவா அல்லது ஒரு ஆலோசனைக் குழுவின் முடிவா? என நீதிபதிகள் வினவினர்.
ஜனநாயகன் படத்தை யார் பார்த்தது மண்டல அதிகாரி படத்தைப் பார்த்தாரா? எனத் தலைமை நீதிபதி கேட்டார். அதற்கு ASG "இல்லை, ஆய்வுக் குழு மட்டுமே பார்த்தது" எனப் பதிலளித்தார். அதைக் கேட்ட நீதிபதிகள், "அப்படியென்றால் ஆய்வுக் குழுவை முழு வாரியமாகக் கருத முடியாது; அது ஒரு ஆலோசனைக் குழு மட்டுமே" எனக் குறிப்பிட்டனர்.
ஒருவேளை தனி நீதிபதி இந்த வழக்கை இன்னும் விரிவாக விசாரித்திருந்தால், வாரியம் நேரடியாகப் படத்தைப் பார்த்ததா அல்லது ஆய்வுக் குழு போன்ற ஒரு அதிகாரம் வழங்கப்பட்ட அமைப்பின் மூலம் பார்த்ததா என்ற சட்ட நுணுக்கம் தெளிவாகியிருக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மும்பை அல்லது டெல்லியில் இருக்கும் வாரிய உறுப்பினர்கள் நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் படங்களையும் பார்ப்பது சாத்தியமில்லை. அதனால்தான் ஆய்வுக் குழுக்கள் மற்றும் மறுஆய்வுக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர், இதை தொடர்ந்து வழக்கில் வாதம் நடைபெற்று வருகிறது.
-
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
மீண்டும் மீண்டுமா? விஜய்யை பார்க்க டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தவெகவினர்! அசம்பாவிதம் தவிர்ப்பு -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
விஜய்யிடம் ரூ.3 கோடி கடன் வாங்கிய புஸ்சி ஆனந்த்.. மகன், மகளும் கடனாளிகள்! வேட்பு மனுவில் தகவல் -
என் மனைவி சங்கீதா.. பேங்க் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் போட்டு வைத்த விஜய்! தங்கம் மட்டும் இவ்வளவா? -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications