Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்பூரில் 101 வயது தாத்தா ஓட்டு.. பகீர் தில்லுமுல்லு! தமிழ்நாடு தபால் வாக்குப்பதிவில் வந்த மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், தபால் வாக்குப்பதிவு முறைகேடு, தேர்தல் பாதுகாப்பு, முதியவர்கள் வாக்கு பதிவு, தேர்தல் ஆணைய கண்காணிப்பு போன்ற முக்கிய விவகாரங்கள் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளன. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதியில் நடந்ததாக சொல்லப்படும் தபால் வாக்கு குளறுபடி சம்பவம், வாக்காளர் உரிமை பாதுகாப்பு குறித்து பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. தேர்தல் நேர்மையை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகள் போதுமா என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தபால் வாக்குப்பதிவு நடைமுறைகளில் நடக்கும் முறைகேடுகளும் குளறுபடிகளும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 101 வயது முதியவரின் வாக்கை அதிகாரிகள் முறைகேடாகப் பதிவு செய்த சம்பவம், தேர்தல் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Ambur Postal Vote Tamil Nadu Election 2026 Tamil Nadu Assembly Election 2026 ECI New Rules Postal Ballot Fraud Ambur News Election Commission of India Senior Citizen Voting Voting Malpractice ECI Action 2026

ஆம்பூர் தாத்தா 101 வயது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கதவாளம் பகுதியில் (பூத் எண்: 51) வசித்து வருபவர் 101 வயதான சின்ராஜ் (இவரது அப்பா பெயர் சாமா மந்திரி). இவர் பல ஆண்டுகளாகத் தபால் வாக்கு செலுத்தி வருபவர்.

இந்நிலையில், தேர்தல் மண்டல அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் உதவியாளர் முகமத் ஆகியோர் சின்ராஜிடம் தபால் வாக்கினைப் பெறாமல், அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகனான 75 வயது சின்ராஜ் என்பவரிடம் முறைகேடாகக் கையொப்பம் பெற்று வாக்கைப்பதிவு செய்துள்ளனர்.

அம்பலமான தில்லுமுல்லு

இதன் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. திமுக பிரமுகர் ஒருவர் செல்போன் மூலம் ஏற்கனவே அந்த 75 வயது முதியவரிடம் பேசி, குறிப்பிட்ட சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறியதாகவும், அதற்குத் துணையாக அதிகாரிகள் மற்ற கட்சிப் பிரமுகர்களை அழைக்காமல் திமுகவினருடன் சென்று தபால் வாக்கை முறைகேடாகப் பெற்றதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் தாங்கள் செய்தது தவறு என்று அதிகாரிகள் ஒப்புக்கொண்ட நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வலுத்து வருகிறது. ஏற்கனவே வேலூர் அணைக்கட்டு பகுதியில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இது இரண்டாவது பெரிய புகாராகும்.

தேர்தல் ஆணையத்தின் அதிரடிகள்

இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் தற்போது தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்காக 1 நுண்பார்வையாளர், 2 வாக்குப்பதிவு அலுவலர்கள், ஒரு காவலர் மற்றும் ஒரு கேமராமேன் அடங்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் இதுபோல 100 குழுக்கள் இயங்க உள்ளன. மேலும், தமிழகத்தில் தேர்தல் நியாயமாக நடப்பதை உறுதி செய்ய 'டிரோன் கேமராக்கள்' மூலம் கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

வாக்குப்பதிவு தரவுகள்

தமிழகத்தில் சுமார் 3.40 லட்சம் அரசு அலுவலர்கள் தபால் ஓட்டு போடத் தகுதியானவர்கள். இதில் இதுவரை 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல் 85 வயதுக்கு மேற்பட்ட 1.20 லட்சம் மூத்த குடிமக்கள் மற்றும் 70,000 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 1.90 லட்சம் பேர் தபால் வாக்கு செலுத்தத் தகுதி உடையவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 15,000 பேர் வாக்களித்துள்ளனர். பாதுகாப்புப் பணிக்காக 115 துணை ராணுவ கம்பெனிகள் ஏற்கனவே தமிழகம் வந்துள்ள நிலையில், மீதமுள்ள 63 கம்பெனிகள் விரைவில் வரவுள்ளன.

இந்தத் தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் (ஆண்கள் 3,579, பெண்கள் 443, மூன்றாம் பாலினத்தவர் ஒருவர்). தேர்தலுக்காக 1,032 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வாக்காளர் பெயர் பட்டியலை சரிபார்க்க 1950 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பி விபரங்களை தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வெளியாகும் முறைகேடு புகார்களால், வரும் நாட்களில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+